Wednesday, May 09, 2007

மண்ணுநீதி!

"மண்ணுநீதி"!





கடல்நீரைக் குழிநிறுத்தி
அதில் சிக்கும் மீன் பிடிக்க
வலைவீசும் மனிதனே!- உன்

உலகத்தில் இவ்வண்ணம்
குழிகட்டி இனம்பிரித்து
அழிக்கின்ற மானுடரை -- நீ

தளை களைந்து தலை நிமிர்ந்து
தன்மானக் குரல் கொண்டு
தட்டுவதுமே எக்காலம்? -- சொல்!

8 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Wednesday, May 09, 2007 8:38:00 PM  

//உலகத்தில் இவ்வண்ணம்
குழிகட்டி இனம்பிரித்து
அழிக்கின்ற மானுடரை -- நீ//

எஸ்கே ஐயா,

'இனம்பிரித்து' - இது மனுவா ? மண்ணா ? ஒன்னும் புரியலை...எப்படியோ பிரிவினை தோற்றுவிப்பவர்களுக்கும், அதை போற்றுபவர்களுக்கும் கண்டனம் !

கவிதைக்கு வாழ்த்துக்கள் !

VSK Wednesday, May 09, 2007 9:22:00 PM  

இனம் பிரித்தவன் மனு
தட்டிக் கேட்கச் சொல்லுபவன் மண்ணு!

இது உங்களுக்குப் புரியாமல் போனதில் எனக்குத் துளிக்கூட ஆச்சரியமில்லை.

தோற்றுவிப்பர் என யாரும் கிடையாது இப்போது!
அது எப்போதோ தோற்றுவிக்கப்பட்டது.

போற்றுபவர்கள் வேண்டுமானால் ஒரு சிலர் இன்னும் இருக்கலாம்.

இந்த வித்தியாசத்தை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

வடுவூர் குமார் Wednesday, May 09, 2007 9:55:00 PM  

தன்மானக் குரல் கொண்டு
தட்டுவதுமே எக்காலம்? -- சொல்!

பசி இல்லாதிருக்கும் போது,அது வரை வெறும் உழைப்பை பார்க்கவே சரியாக இருக்கிறது, நேரம்.

VSK Wednesday, May 09, 2007 10:43:00 PM  

//பசி இல்லாதிருக்கும் போது,அது வரை வெறும் உழைப்பை பார்க்கவே சரியாக இருக்கிறது, நேரம்.//

அப்போ சரி, வாங்க!

இவர்கள் பசியைப் போக்க முதலில் பாடுபடுவோம்!

வல்லிசிம்ஹன் Saturday, May 26, 2007 12:42:00 AM  

எஸ்.
.கே சார்,
அவனாவது தன் தொழிலுக்காக வலை வீசுகிறான். குழி பறிக்கிறான்.

குழிபறித்து வலையும் வீசிக் குழப்பம் செய்பவர்களைத்தானே தட்ட வேண்டும்...
நன்றி.

VSK Monday, May 28, 2007 6:20:00 PM  

மிக, மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், வல்லியம்மா!

குழி பறிப்பவர்கள் எங்கிருந்தாலும், தட்டத்தான் வேண்டும்.

வலை வீசுபவர்களை விலக்கத்தான் வேண்டும்!

குழப்பம் விளைவிப்பவர்களைக் குட்டத்தான் வேண்டும்!

மிக்க நன்றி!

Unknown Monday, May 28, 2007 6:22:00 PM  

ஆதாயம் இருக்கும் வரை குழிபறிப்பதும், கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பதும் நடக்கத்தான் செய்யும். குட்டை வற்றும்வரை அல்லது குழிபறிப்பவன் திருந்தும்வரை இது மாறாது. இரண்டும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை

VSK Monday, May 28, 2007 6:50:00 PM  

உங்களது நியாயமான வருத்தம் கலந்த கோபம் புரிகிறது, செல்வன்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என்பதுதான் வழக்கில் இருக்கும் சொல்.

ஆனால், அதனை மாற்றி நீங்கள் சொல்லியிருப்பது, தற்போதைய நடைமுறைக்கு மிகவும் ஒப்பானதாகவே எனக்குப் படுகிறது.

தெளிந்த மனத்தினராய் எவரையும் வைத்திராமல், கலங்கடித்துக் கொண்டே மீன் பிடிக்கும் வித்தையை இன்றைய தமிழக அரசியல்வியாதிகள் நன்றாகவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP