Friday, March 23, 2007

"நான் ஒரு வியர்டுங்க!"

"நான் ஒரு வியர்டுங்க!"

கோவியார் அழைத்திருந்தார்
கோக்குமாங்கு பதிவொன்று போடும்படி
மணிகண்டனும் மடலிட்டார்
மறைகழன்ற விதம் சொல்ல

வியர்டென்றால் என்னவென
அகராதியில் புரட்டிப் பார்த்தேன்
செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்
நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்

இவையே வியர்டாகும் எனவிருந்தது
சரி, இது வைத்தே சொல்லுவோம்
என்றிங்கு வந்து நான் என் வியர்டை
சொல்லுகிறேன் கேட்டிடுவீர்!

இதாங்க! இதுதான் என்னோட பெரிய வியர்ட்!

என்ன சொன்னாலும் உடனே அது ஒரு நாலு வரிக் கவிதையா [கொத்ஸ் இதைக் கவுஜ எனச் சொல்லுவார்!] சொல்றதுதான் என்னோட முதல் வியர்ட்னெஸ்!

இரண்டாவது வியர்ட்.... இருங்க! என் மனைவி என்னமோ சொல்றங்க! என்னது? ஆங்! சரி! சரி! சொல்லிடறேன் நீ போய்ப் படு!
ஒண்ணுமில்லீங்க

எந்தப் பாட்டைக் கேட்டாலும் சரி!
உடனே இது மாதிரி, இதே சாயல்ல இருக்கற ஒரு பழைய பாட்டை குடைஞ்சு, குடைஞ்சு கண்டு பிடிக்கற வரைக்கும், காதைப் பொத்திகிட்டு, அந்த ட்யூனை மனசுலியும், வாயாலியும் பாடிப் பாடி, எல்லாரையும் ஒரு வழியாக்கி, எரிச்சல் படுத்தி, உனக்குத் தெரியுதா, உனக்குத் தெரியுதான்னு தொளைச்சு, அது கண்டு பிடிக்கற வரைக்கும் ஓய மாட்டேன்!
கடைசியில் கண்டுபிடித்தவுடன் கிடைக்கும் ஆனந்தம் இருக்கே, அது குடும்பமெல்லாத்துக்கும் பரவும்!

அடுத்தது, மூணாவது,
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அதுல முழு ஈடுபாட்டோட இறங்கி, அது முடியற வரைக்கும், சோறு, தண்ணி பாக்காம, குடும்பத்தைக் கவனிக்காம, பணத்தைப் பத்திக் கவலைப்படாம, குதிச்சிடுவேன்![உ-ம்: திருவாசகம் இன் ஸிம்ஃபொனி]
இதுல தோல்வியும் வரும்; ஜெயமும் வரும்!
தோல்வி வரும் போது தனியா அனுபவிப்பேன். எல்லார்கிட்டேயும்[ஈடுபடுத்தின அத்தனை பேருகிட்டேயும்] தனித்தனியா மன்னிப்பு கேட்பேன்.
வெற்றி பெற்று விட்டாலோ, அவ்வளவுதான்!
என்னைப் பிடிக்கவே முடியாது!
பெரிய்ய்ய்ய்ய்ய பார்ட்டிதான்!
பிரமாதப் படுத்திடுவேன்!!

நாலாவது!
கொஞ்ச நாளா, முடி கொட்டி வழுக்கை வர ஆரம்பித்தது!
க்ளோஸா கட் பண்ணி சமாளிச்சேன்.
போன வருஷம், இந்தியா போன போது, குலதெய்வம் கோயிலுக்குப் போன போது முடி இறக்கினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சுது!
சரின்னு, அப்படியே விட்டு விட்டேன்!
ஆமா!
இப்போ நானும் மைக்கேல் ஜோர்டான் ஸ்டைல்தான்!
மொட்டை!
பெர்மனென்ட் மொட்டை!
இது மாதிரி தடாலுன்னு முடிவெடுக்கறதுல நான் மன்னன்!

கடைசியா அஞ்சாவது!
இதுல கூட ந்நான் வியர்டுன்னு காட்டப் போறேன்!
ஆமாம்
அஞ்சு A, அஞ்சு B ன்னு ரெண்டு சொல்லப்போறேன்!

அஞ்சு A :
இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்னிக்கு அவளை நினைச்சுப்பேன்!
இதை என் மனைவிகிட்ட இன்னிக்குத்தான் சொன்னேன்!
சரிதான் போடான்னு சொல்லிட்டு [நிஜமாவே!!]திரும்பிப் படுத்துத் தூங்கிட்டாங்க!
அஞ்சு B :
யார் என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது! இதனால எனக்கும், என் மனைவிக்கும் எத்தனையோ சண்டை வந்திருக்கு! சொல்றது யாரு? நம்ம ஆளுதானேன்னு அவங்களை சமாதானப் படுத்தினாலும், கெட்ட பேரு என்னவோ எனக்குதான்!... ரெண்டு பக்கத்துலியும்!
அதைப் பத்திக் கவலைப்படாம காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.

அவ்ளோதாங்க!

யாரையெல்லாம் கூப்பிட்டு இருக்காங்கன்னு தெரியாததால, இதோ எனக்குத் தெரிஞ்ச அஞ்சு பேரைக் கூப்பிடறேன்!

பத்மா அர்விந்த்

ஜெஸிலா

லிவிங் ஸ்மைல் வித்யா

செல்வநாயகி

குமரன்


இதையே அழைப்ப எடுத்துகிட்டு அஞ்சு பேரும் வந்து சொன்னா,, மகிழ்வேன்!

பாக்கறவங்களும் அவங்களுக்கு சொல்லிடுங்க!

அப்பாடா!
என் ராஜ்ஜியத்திலாவது 80% ஒதுக்கீடு கொடுத்து விட்டேன்!
சீக்கிரம் என்னை பிரதமர் ஆக்குங்கப்பா..ம்மா!!
:))
மீண்டும் கோவியாருக்கும், மணிகண்டனுக்கும் நன்றி!

இந்தியா நாளை ஸ்ரீலங்காவை வெல்ல வாழ்த்துகள்!

45 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Friday, March 23, 2007 12:48:00 AM  

எஸ்கே,
வேற ஒருவர் பதிவில் உங்களைக் குறிப்பிடும் போது வீ சேர்த்துக்குவோம். சொந்த பதிவில் 'வீ'னா வேண்டாம் !

பலம் பலகீனமாக இருப்பதும் பலவீனம் பலமாக இருப்பதும் எல்லோருக்கும் பொதுதான்.

உங்க அஞ்சு அஞ்சு A விய(ர்)க்க வைத்தது.
:)

VSK Friday, March 23, 2007 12:57:00 AM  

எங்கும், எப்போதும், நீக்கமற நிறைந்திருக்கும் கோவியாருக்கு வணக்கமும், நன்றியும்1

என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே!
எப்படி அழைத்தாலும் எனக்கு சம்மதமே!

ரோஜாவை எப்பெயரிட்டு அழைப்பினும் அது ரோஜாவே என ஷேக்ஸ்பியர் சொல்லி இருக்கிறார்!
:))

இலவசக்கொத்தனார் Friday, March 23, 2007 1:02:00 AM  

1) கவுஜ கட்டாயம் வியர்ட்னெஸ்தான்!

2 - 4) வியர்ட்னெஸ் மாதிரி தெரியலையே. ஏன்னா நானும்... ஹிஹி.

5) வெறும் ஏ பி போட்ட நீங்களே வியர்ட்டுன்னா 5.1 - 5.5 போட்ட நாங்க என்னவாம்?

உங்க முதல் காதலிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

//யார் என்ன சொன்னாலும் எனக்குக் கோபமே வராது!//

வியர்ட்னஸ் அப்படின்னா பொய் அப்படின்னு பொருள் வராது. சாரி. இது ரிஜெக்ட்டட்!!

இலவசக்கொத்தனார் Friday, March 23, 2007 1:03:00 AM  

அது என்ன திடீரென்று வீ.எஸ்.கேவாக மாற்றம்? வேறு யாரோன்னு வந்தேன்...

கோவி.கண்ணன் Friday, March 23, 2007 1:08:00 AM  

//ரோஜாவை எப்பெயரிட்டு அழைப்பினும் அது ரோஜாவே என ஷேக்ஸ்பியர் சொல்லி இருக்கிறார்!//

எஸ்கே ஐயா,

போன பின்னூட்டத்தில் ஐயா விட்டுவிட்டது. அதனால் வருத்தம் அடையாதீர்கள். ஐயா போடாட்டாலும் எஸ்கேன்னாலும், விஎஸ்கேன்னாலும் ஐயா வையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் Friday, March 23, 2007 1:10:00 AM  

//VSK said...
எங்கும், எப்போதும், நீக்கமற நிறைந்திருக்கும் கோவியாருக்கு வணக்கமும், நன்றியும்1
//

நானும் ஒரு வியர்டுங்க!

துளசி கோபால் Friday, March 23, 2007 1:20:00 AM  

அந்த ரெண்டாவது......... இங்கேயும் ஒரு மண்டைக்குடைச்சல்தான்:-)

VSK Friday, March 23, 2007 1:30:00 AM  

ஆன்னா ஊன்னா எல்லாத்துக்கும் கூட வர்றிங்களே கொத்ஸ்!

உங்க கிட்ட இருக்கறதால மட்டும் அது வியர்ட்னெஸ் இல்லைன்னு சொல்ல முடியாதா?

:))

VSK Friday, March 23, 2007 1:30:00 AM  

அதான் காதுல சொல்லியாச்சே!
சரி விடுங்க1

VSK Friday, March 23, 2007 1:32:00 AM  

அதான் முன்னியே சொல்லி என்னையும் அழைச்சாச்சே!

இன்னும் என்ன இன்னொரு தடவை உறுதிப்படுத்தறது?

ஐயான்னாலும், குய்யான்னலும் ஒண்ணும் ஆவாது!

VSK Friday, March 23, 2007 1:34:00 AM  

//உங்க முதல் காதலிக்கு "என்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! //

உங்க பிறந்த நாள் எப்போங்க?

அதுக்கும் சேர்த்து நான் கொண்டாடணுமா?
சொல்லுங்க கொத்ஸ்!
:))

VSK Friday, March 23, 2007 1:42:00 AM  

என்னவொரு பாக்கியம்!
ஒரே நாளில் உங்ககிட்டேருந்து ரெண்டு பதிவுக்கு பின்னூட்டமா?
இது ரொம்பவே வியர்டா இருக்குங்க துளஸி!

அந்த மண்டைக் குடைச்சலைச் சொல்லுங்க!
:))
உங்களுக்காவது புரிஞ்சுதே1
இங்கே வீடுல ஒரு மாதிரியா பாக்கறாங்க!
அடுத்த தடவை யூ.எஸ். வரும்போது தவறாம இங்க ஒரு நடை வந்திட்டுப் போங்க!
:))

G.Ragavan Friday, March 23, 2007 2:20:00 AM  

மாட்டிக்கிட்டீங்களா...நல்லா மாட்டிக்கிட்டீங்களா...வேணும்..வேணும். நல்லா வேணும். :-)

கவிதை...ஆனா பாருங்க...அது திருப்புகழ் விளக்கமெல்லாம் சொல்லும் போது உதவுதே. காரணமில்லாமல் காரியமில்லைங்குறது சரியாத்தான இருக்கு. சரி. அடுத்த திருப்புகழ் எப்போ? காத்திருக்கிறோம்.

பழைய பாட்டைக் கண்டுபிடிச்சிருவீங்களா? அட...அத வெச்சே ஒரு பதிவு போடக்கூடாதாய்யா...நாங்களும் தெரிஞ்சிக்குவோம்ல.

காதலியின் பிறந்தநாள் வாழ்த்து....தப்பில்லை. மனதில் உள்ளதைச் சொல்லீட்டீங்க. சரிதான். முதல் காதல் யாராலும் மறக்க முடியாதுன்னு சொல்வாங்க. நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?

மணிகண்டன் Friday, March 23, 2007 2:33:00 AM  

எதிர்பார்த்ததை விட வியர்டா தான் இருக்கீங்க :)

கார்த்திக் பிரபு Friday, March 23, 2007 2:42:00 AM  

இரண்டாவது வியர்ட்.... இருங்க! என் மனைவி என்னமோ சொல்றங்க! என்னது? ஆங்! சரி! சரி! சொல்லிடறேன் நீ போய்ப் படு!
ஒண்ணுமில்லீங்க



//


manaivi enna sonnanga sensor la cut panniteengala?

வடுவூர் குமார் Friday, March 23, 2007 3:56:00 AM  

அப்புறம்.. அந்த பெரிய பார்ட்டி கொடுக்கிறப்ப சொல்லுங்க,வந்திட்டு போறேன்.
அஞ்சு-A :-))))))

VSK Friday, March 23, 2007 8:32:00 AM  

//...அடுத்த திருப்புகழ் எப்போ? காத்திருக்கிறோம்.....//

பாதி எழுதியிருக்கேன், ஜி.ரா.
அதற்குள் இது போல ரெண்டு மூணு வந்து தாமதமாகுது!
//....தப்பில்லை. மனதில் உள்ளதைச் சொல்லீட்டீங்க. சரிதான்...../

ஆனா, சில பேர் இப்படிச் சொல்லக்கூடதுன்னு திட்டறாங்க ஜி.ரா.!:))
உள்ளத்தில் உள்ளதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது!
அதில் வரும் மகிழ்ச்சி இருக்கே; அதை சொல்லால் வடிக்க முடியாது!

//எதிர்பார்த்ததை விட வியர்டா தான் இருக்கீங்க :)//

மாட்டி விட்டுட்டு கன்ஃபர்மும் பண்ற உங்களை......நற நற நற...!!
அது சரி, மணிகண்டன், இன்னிக்கு மேட்ச் லிங்க் சீக்கிரம் கொடுங்க!
:))

Subbiah Veerappan Friday, March 23, 2007 8:37:00 AM  

///எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அதுல முழு ஈடுபாட்டோட இறங்கி....////

சார் இதை நான் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன்

கண்ணதாசன் அவர்களைப் பற்றிய என்னுடைய பதிவுகளில் என் கண்ணை மறைத்து ஆட்டம் காட்டிய
எ.பி க்களை நீங்கள் எத்தனை முறை சுட்டிக் காட்டித் திருத்தியிருக்கிறீர்கள்

ந்ன்றி!

இன்று உங்களுடைய இரண்டு பதிவுகளிலுமே யு.எஸ் டாலரில் மொய் எழுதுபவரின் பின்னூட்டம்தான் முதலில்:-)))

VSK Friday, March 23, 2007 8:39:00 AM  

//manaivi enna sonnanga sensor la cut panniteengala?//

அதைக் கிளறாதீங்க கார்த்திக்!
வில்லங்கமாப் போயிடும் விவகாரம்!
:))

//அந்த பெரிய பார்ட்டி கொடுக்கிறப்ப சொல்லுங்க,வந்திட்டு போறேன்.//

உங்களுக்குச் சொல்லமலா, குமார்.
நீங்க இல்லாமலா!!

கண்டிப்பா அழைப்பு வரும்!
:))

கோவி.கண்ணன் Friday, March 23, 2007 9:01:00 AM  

//இன்று உங்களுடைய இரண்டு பதிவுகளிலுமே யு.எஸ் டாலரில் மொய் எழுதுபவரின் பின்னூட்டம்தான் முதலில்:-)))//

சுப்பையா சார்,

அவரு என்கிட்ட காட்டி ஒப்புதல் வாங்கிட்டுதான் பதிவை வெளியிடுவார். எப்பறம் ஏன் என் பின்னூட்டம் முதலில் வராது. ரகசியததைப் போட்டு உடைத்திட்டேன்.

:)

இராம்/Raam Friday, March 23, 2007 10:15:00 AM  

வி.எஸ்.கே. ஐயா,

உங்க கவி(ஜ)தை நல்லா இருக்கு, லைன் பை லைனா போட்டா அது கவிதைதான் :)

//செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்
நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்//

அதிலே ஒயிட்பா 'லாம் டிரை பண்ணியிருக்கீங்க... தளை தட்டுதான்னு கொத்ஸ்'கிட்டெ கேளுங்க.... :)

Geetha Sambasivam Friday, March 23, 2007 10:46:00 AM  

உங்க பேர்க்குழப்பத்தாலேயே நான் வியர்டு ஆகிடுவேனோன்னு பயந்தேன். நல்லவேளையா மாத்தி இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் முன்னாலேயே செஞ்சிருக்கலாமோ? :)

VSK Friday, March 23, 2007 11:22:00 AM  

//லைன் பை லைனா போட்டா அது கவிதைதான் :)//

என்னை வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே ராம்!
:))
கொத்ஸ் என்கிட்ட கோபமா இருக்கார்.
அவரிடம் வெண்பா கத்துக்கலைன்னு!

VSK Friday, March 23, 2007 11:25:00 AM  

இப்பதாங்க தெரிய வந்தது!

உடனே, ஒரே நாள்ல மாத்திட்டேன்.
இப்பவாவது மாத்தினேன்னு சந்தோஷப் படாம, இப்படிக் குட்டறீங்களே தலைவி!:))

Unknown Saturday, March 24, 2007 7:49:00 AM  

இந்த வியர்டு விஷயத்திலே, சில பேருடையதை படித்தால் 'அடப்பாவமே'ன்னு தோணும்.
உங்களதை படித்தால் 'அட தேவலாமே' ன்னு இருக்கே! எப்டிங்கையா?

VSK Saturday, March 24, 2007 7:57:00 AM  

//எப்டிங்கையா?//

நல்ல குடும்பமும், நல்ல நண்பர்களும் முருகனருளால் வாய்த்ததால் நிகழ்வது அது நண்பரே!

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi Monday, March 26, 2007 12:13:00 PM  

பாடல் விஷயத்தில் எனக்கும்
இந்த மண்டைக்குழப்பம் தான் கண்டு
பிடிக்கும் வரை பாடாய் படுத்தும்.

VSK Monday, March 26, 2007 12:37:00 PM  

ஆம்! குழம்பித்தான் "விட்டிருக்கிறேன்"!

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.
எப்படியோ உங்களையும் என் பதிவுக்கு வரவழைக்க நான் செய்தது எனக் கொள்கிறேன்!

:))

80% கொடுத்திட்டு, 100% என நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

அப்படியாவது வந்தமைக்கு மிக்க நன்றி, முத்துலட்சுமி அவர்களே!

சிறில் அலெக்ஸ் Monday, March 26, 2007 3:04:00 PM  

அடடா இவ்வளவு வியர்டா நீங்க.

:))

நல்லாயிருந்துச்சு.

VSK Monday, March 26, 2007 3:12:00 PM  

இவ்வளவுதான்னு முடிவு பண்னிடாதீங்க சிறில்!

இன்னும் இருக்கு!
????????????
!!!!!!!!!!!!!!
:):):)

கருப்பு Monday, March 26, 2007 8:21:00 PM  

நன்றாக எழுதி இருக்கீங்க எஸ்கே அய்யா.

உங்களுக்கு பிடிச்ச லிஸ்டில் நான் இல்லை போல தெரியுதே? ஏன் பூனூல் போடலைன்னா?

கேக்கனும்னு நினைச்சேன், ஏன் பெயரை மாற்றிக் கொண்டீங்க?

VSK Monday, March 26, 2007 10:39:00 PM  

என்னங்க வி.க. அவர்களே!

இப்படி சொல்லிட்டீங்க!
1000% இட ஒதுக்கீடு கொடுக்கனும்னு நினைச்சு அது 80% ஆ போயிடுச்சு.

அதுக்கு பாராட்டுவீங்கன்னு பார்த்தா, உங்களை ஒதுக்கிட்டேன்னு சொல்லிட்டிங்களே!

அதுக்கென்ன கொடுத்திருவோம்!

காத்திருங்க ஒரு 24 மணி நேரம்!

ஒரு சர்ப்ரைஸ்!
:))

பெயர் மாற்றம் பற்றித்தான் அங்கேயே வந்து சொல்லிட்டீங்களே!

பத்மா அர்விந்த் Thursday, March 29, 2007 9:34:00 AM  

Sk
It is interesting to read. I also get stuck with songs and think about it all day long:) Thanks fo rthe invite. I will write soon.

VSK Thursday, March 29, 2007 10:26:00 AM  

Thank you PA!

Will look forward to yours!

-L-L-D-a-s-u Thursday, March 29, 2007 10:36:00 AM  

எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன்.

weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது

-L-L-D-a-s-u Thursday, March 29, 2007 10:53:00 AM  

எல்லார்கிட்டேயும் தனித்தனியா மன்னிப்பு கேட்பேன். (SK)
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது

VSK Thursday, March 29, 2007 5:11:00 PM  

அப்படி எழுதினதுக்காக இப்ப உங்ககிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேங்க!
:))0

நன்றி, லா.ல. தாஸு!!

SurveySan Thursday, March 29, 2007 6:17:00 PM  

//இன்னிக்கும் என்னோட முதல் காதலியின் பிறந்த நாளன்னிக்கு அவளை நினைச்சுப்பேன்!//

இது வியர்டு இல்ல, வில்லங்கம். :)

Unknown Thursday, March 29, 2007 6:19:00 PM  

விஎஸ்கே,

படித்தால் எதுவுமே வியர்டாக தோன்றவில்லை.நல்ல பழக்கங்களாக தான் தெரிகிறது

VSK Friday, March 30, 2007 12:13:00 AM  

இதில் எதுவும் வில்லங்கம் இல்லை சர்வேஸன்!

யாரையும் தொந்தரவு செய்யாத ஒரு தனி உணர்வு இது!

அனுபவித்தவர்க்குப் புரியும்!

:))

VSK Monday, April 02, 2007 10:07:00 AM  

அதுக்குத்தான் வியர்டு என்பதற்கான பொருளை முதலிலேயே சொல்லி இருக்கிறேனே, செல்வன்!
நன்றி!


//வியர்டென்றால் என்னவென
அகராதியில் புரட்டிப் பார்த்தேன்

செய்யாதன செய்தல் இல்லாதென இருத்தல்

நடக்காதன நடத்தல், ஒவ்வாதன ஒவ்வுதல்

இவையே வியர்டாகும் எனவிருந்தது//

ம்ம்... நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு!
உங்களுக்குப் புரியுது!
ஆனா, வீட்டில்.......!!
:)))

நாமக்கல் சிபி Monday, April 02, 2007 11:46:00 AM  

அருமையான கவியர்டு!

:))

VSK Monday, April 02, 2007 12:41:00 PM  

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாத்தான் வர்றீங்க, கவிஞர் கோமேதகனாரே!
:))

செல்வநாயகி Friday, April 13, 2007 4:45:00 AM  

எஸ்கே,

நீங்க விஎஸ்கே ஆனது தெரியாம அது யாரோ புதியவர்னு நெனச்சி ரொம்பநாள் இருந்துட்டு இப்பக் கண்டுபிடிச்சு வந்தபிறகுதான் பார்க்கிறேன் நீங்கள் என்னையும் சேர்த்திருப்பது. ஆழியூரானும் கூப்பிட்டிருக்கார். ரெண்டுபேருக்குமா சேத்துச் சொல்ல முயல்வேன் முடிகிறபோது. நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP