Friday, August 18, 2006

"கிழுமத்தூராரின் கமல் கவிதை!"

"கிழுமத்தூராரின் கமல் கவிதை!"


"வா! வா! வா! இன்னா? அட்த்த குறளு சொல்லணுமா?" என உற்சாகமாக வரவேற்றான், மயிலை மன்னார் என்னைப் பார்த்ததும்!

"அதில்லை....!" என்று இழுத்தவாறே கையோடு பதிவெடுத்துக் கொண்டு சென்றிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.

"இன்னாஇது? குறள் மாரி இல்லியே? எவனோ கிறுக்கின மாரி இருக்கே? இன்னா விசயம் ?" என்று சற்று முறைத்தான் மன்னார்!

"நமக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர் அவர் பதிவில் போட்ட கவிதை இது! உலகநாயகன் கமல் எழுதியதாம்! படித்து, முடிந்தால் உங்கள் மன்னாரைப் பொருள் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்" என்று பயந்தவாறே சொன்னேன்!

ஏனெனில், மன்னாரிடம் திருக்குறளைத் தவிர வேறு எதற்கும் இதுவரையில் பொருள் கேட்டதில்லை! சொதப்பி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாய்!

"அடேடே! நம்ம ஆள்வார்ப்பேட்ட ஆண்டவரு! அவரு எளுதினதா இது? மனுசனுக்கு மண்டை முச்சூடும் மூளை! அபார அறிவு! படி! படி! ஒரு தபா கேப்போம், இன்னா சொல்லிருக்கார்னு" என்று அவன் உற்சாகமாய்க் குரல் கொடுக்கவே, தெம்புடன் கவிதையைப் படித்துக் காட்டினேன், ஒருமுறைக்கு இருமுறையாக!

http://mahendhiran.blogspot.com/2006/08/kamal-hassan.html

"மொத்தமா பொருல் சொல்ணுமா; இல்ல வரிக்கு வரி வோணுமா?" என்று ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டான்!

"வரிக்கு வரி எழுதினால் கொஞ்சம் நீளமாகப் போய்விடும் எனவே மொத்தமாகவே சொல்!" என்றவுடன், "சரி! எனக்கு இன்னா வர்தோ அத்த ஸொல்றேன்! அப்ப்டியே ஒண்ணு வுடாம எளுதிக்கோ! இத்த ஸொன்னது ஆருன்னு கட்சீல சொல்றேன்!" என்று சொல்லலானான் மயிலை மன்னார்!

பின் வருவது அவன் சொன்னது!

"ஏதோங்காட்டியும் ஒன்ன சேர்ல குந்த வெச்சுட்டொம்ங்றதுக்காவ, நீதான் பெர்ய ஒசத்தி எங்கள வுடன்னு பெர்மைப்படாதே! அந்த கருமாந்தரமெல்லாம் வோணாமேன்னுதான் கம்முனு கீறோம்ன்றத மட்டும் மன்சுல வெச்சுக்க! சர்யா?

எங்காளுதான்,... எங்க மொளி பேசறவந்தான் வர்ணும்ன்ற சின்ன புத்தி எங்களுக்கெல்லாம் இல்லாத்தோண்டி, நீ எங்க கூட்டிக்கினு போவப்போரேன்னு கூடத் தெரியாமத்தேன், நீயே லீடரா இருந்துக்கோன்னு வுட்டு வெச்சிருக்கிறோம் நாங்க! புரிஞ்சுக்க!

இத்தோ! நீ பூட்டி வுட்ருக்கியே ஏதோ குதிரைக்கி போட்ற மாரி, கடிவாலம், சேனம் அல்லாம்!...... அத்தெல்லாம் நம்ம சைசுக்குப் பண்ணது இல்ல மாமோவ்! அது இந்த ஊர்ல செஞ்சதும் இல்ல! அசல் நாட்ல பண்ணது! இன்னோரு சாதிக் குதிரைங்களுக்கோசரம் தயார் பண்ணது!

எப்போ வோணும்னாலும் சும்மா 'அஜீஸ்' கணக்கா தலிய உருவிக்குனு போய்க்கினே இருப்போம்! வாய்ல பூட்டிக்கினு இருக்கோமேன்னு தப்புக்கணக்கு போட்றாத! நீ சோத்துக் கைபக்கால வலிச்சியின்னா, நாங்க பீச்சாங்கை பக்கமா திரும்பி போயிருவோம்! மக்கா!... ஒரு தலய ஒரு சிலுப்பு சிலுப்பினோம்னா, இந்த கண்ணுல போட்ருக்கற பட்டையெல்லாம் எகிறிப்போயிறும்! அப்போ வரும் பாரு புதுபுது ரூட்டல்லாம்! அப்பால அங்க நா யாரு, நீ யாருன்னு ஒர்த்தருக்கும் தெரியமவேப்பூடும்!

இப்பக்கூட, நீ குந்திக்கினு இருக்கியே ஒன் சீட்டு, இப்டியும், அப்டியுமா நெளிஞ்சுக்கினு,... அத்தக் கூட நாங்கதேன் அப்பிடி சேஞ்சோம் சாமி!

ஏன்னு கேக்கிறியா? ஆங்! அப்டிக்கேளு! எங்க நீ சொகமா ஒரு எடத்துல ஒக்காந்து, தூங்கிறக் கூடாதுன்னு ப்ளான் பண்ணி செஞ்சது அது!

ஒன்னைய அதுல ஏத்தறதுக்குக் காட்ன குஜால வுட, ங்கொக்கமக்கா, சாஸ்தியா இருக்கும் பாரு நாங்க ஒன்னிய கீளே கவுக்கும் போது!

பயந்து, பயந்து தனியா, முளிச்சுக்கினே இருக்கியே, அத்த வுடு! எங்களப்போல சோறு துண்ணாமலியும் இருக்க கத்துக்கோ!

நாட்டாமை ஒன்னுதா, எங்குளுதான்ற டவுட்டே ஒனக்கு வோணாம்! ஒங்கொப்புரான அது எங்குளுதுதான்! பீச்சாங்கை பக்கம் வலி! சோத்தாங்கைபக்கம் திரும்புவோம்!
இதென்னா, ஒங்கப்பன் வூட்டு ஆஸ்தின்னு நெனச்சுக்கினியா! இது ஒனக்கும் ஸரி; எங்களுக்கும் ஸரி; ஒண்ணும் பட்டா போட்டதில்ல!

ஏதாவது ஒரு ராங் நடக்கும்; இத்தெல்லாம் மாறிப்பூடும், மவனே! ஆமாம்!"

என்று சாமியாட ஆரம்பித்து விட்டான்.... மருதநாயகம்!மன்னிக்கவும்! மயிலை மன்னார்!


அவனை சமாதானப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது!

போகும் போது, "மறக்காம, இத்தக் கொடுத்த அந்த கிளுமத்தூர்க்காரருக்கு நான் டேங்ஸ் சொன்னேன்னு சொல்லிடுப்பா!" என மறக்காமல் கூறினன் மயிலை மன்னார் !!

31 பின்னூட்டங்கள்:

மகேந்திரன்.பெ Friday, August 18, 2006 2:02:00 AM  

நைனா அப்டீயே நம்ம கொசப்பேட்டை கணக்கா வரிஞ்சிட்டே போ கவிதய, நான் ஒனிக்கி இன்னான்னுபா டேங்ஸ் சொல்றது, ஆனா ஒன்னு நைனா நான் நான் நெனிச்சத ஒங்காள் சொன்னார் பாருங்கோ அது அப்படி சரியாகீதுபா இது தெரியாம கொள்ளாம நம்மலாண்ட கொஞ்ச பேரு வந்து " இன்னாபா இது கயித ஒன்னுமே பிரிலன்னு சொல்லிட்டாங்கோ" அதுலயும் ஒருத்தர், பிக்காசோ பொம்மைல இருக்கறது ஜார்ஜ் கோட்டைன்னு வேர சொன்னார்பா நான் இன்னாத்த சொல்ல ?

மகேந்திரன்.பெ Friday, August 18, 2006 2:04:00 AM  

இன்னாபா இம்பூட்டு கஸ்டப் பட்டு ஒரு செய்னு விடுப்பா நம்ம ஊட்டான்ன்ட, ஆளுங்க வந்து ஒரிஜினலை பாக்கச் சொல்ல வலிசா இருக்கும்ல ?

இராம் Friday, August 18, 2006 2:35:00 AM  

மன்னார்,

அண்ணாத்தே கீசீட்டே போ..... உனக்கு எம்பூட்டு மொளி அருவு....

கோவி.கண்ணன் [GK] Friday, August 18, 2006 6:56:00 AM  

//ஏதாவது ஒரு ராங் நடக்கும்; இத்தெல்லாம் மாறிப்பூடும், மவனே! ஆமாம்!"

என்று சாமியாட ஆரம்பித்து விட்டான்.... மருதநாயகம்!மன்னிக்கவும்! மயிலை மன்னார்!

அவனை சமாதானப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது!//

எஸ்கே ஐயா ... !
மயில் வாகனன் மையல் கொண்டவர் மனதில்
மயிலை மன்னாரும் இருக்கிறார் !

உங்கள் அறுமுகனைப் போலவே பண்முகம் உங்களது ... !
இன்னும் யார் யாரெல்லாம் வரப் போகிறார்களோ !

பொருள் மாறாமல் நன்றாக எழுதி ஒரு பஞ்ச் உடன் முடித்திருக்கிறீர்கள்.

சபாஷ் !

அன்புடன்
கோவியார்

SK Friday, August 18, 2006 10:33:00 AM  

கிழுமத்தூராரே!
நானும் உங்களைப் போலவே மற்ரவர்கள் கருத்துகளை ரசித்தேன்!

நான் கணினியில் அதிகம் தெரியாதவன் என்பதால், எனக்குத் தெரிந்த அளவில் பதிவிலேயே லிங்க் கொடுத்துத்தான் இருக்கிறேன். http://mahendhiran.blogspot.com/2006/08/kamal-hassan.html என்று!

கவனிக்க வில்லையா?

ஒரு சில நண்பர்களைக் கேட்டேன்.
விவரமாக மயில் அனுப்பி விளக்குவதாகச் சொன்னார்கள், இந்த 'சுட்டி' கொடுப்பது எப்படி என்று!

இன்னும் அனுப்புகிறார்கள்! :(

உங்களுக்குப் பிடித்திருக்கிறது என அறிந்து, மன்னார் ரொம்பவும் மகிழ்ந்தான்!

SK Friday, August 18, 2006 10:37:00 AM  

"அது... அறிவெல்லாம் ஒண்ணுமில்ல! இது மாரி சேலேஞ்செல்லாம் வந்த அது... அப்பிடியே தானா வருது... இல்லையில்ல.. கொட்டுது!"

....என்று 'குணா' இஷ்டைலில் படிக்கச் சொன்னான் மன்னார்!

நன்றி, திரு. ராம்!

SK Friday, August 18, 2006 10:39:00 AM  

//ரசித்தேன்... //

மகிழ்ச்சி, திரு. பொட்"டீ"கடை!

SK Friday, August 18, 2006 10:45:00 AM  

மயிலிடம், மயிலை இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லையே, கோவியாரே!

பஞ்ச் புரிந்து, பதிலளித்ததற்கு நன்றி!

இந்த ரெண்டு மூணு முகத்துக்கே தாவு தீந்து போவுது!

எப்படித்தான், என்னப்பன் ஆறு முகத்தைச் சமாளிக்கிறாரோ?
[பஞ்ச் புரிகிறதா?!] :))

அது சரி! அவரால் முடியாது என்று ஒன்று உண்டா?

எனக்கு இந்த முகங்களைக் கொடுத்து வேடிக்கை பார்ப்பவனும் அவன் தானே!

பி.கு.: "பண்முகம்" என்று பதில் பஞ்ச் வைத்ததை ரசித்தேன்!

உங்கள் நண்பன் Friday, August 18, 2006 12:42:00 PM  

ஆள்வார்போட்டை ஆண்டவன் எழுதிய கவிதைக்கு,
மயிலை மன்னாரின் விளக்க உரை அருமை!


அன்புடன்...
சரவணன்.

SK Friday, August 18, 2006 12:50:00 PM  

:))

நன்றி, திரு. சரவணன்!

கப்பி பய Friday, August 18, 2006 12:53:00 PM  

நேத்து இதே கவுஜயை அங்க பட்சப்போ 'டக்கரான கவுஜ..ஆனா நம்ம தோஸ்துங்களுக்கு பிரியனுமே'ன்னு திங்க் பண்ணிக்கினே கிடந்தேன்..

நம்ம தோஸ்து மன்னார் ஷோக்கா மீனிங் சொல்லி கலாசிட்டாரு..
:))

கோவி.கண்ணன் [GK] Friday, August 18, 2006 1:11:00 PM  

// sk said ...பி.கு.: "பண்முகம்" என்று பதில் பஞ்ச் வைத்ததை ரசித்தேன்!//

sk ஐயா ... !

இதில் இன்னுமொரு முகம் இருக்கிறது ...!

அது உங்கள் 'fun' முகம் :)

"வற்றாயிருப்பு" சுந்தர் Friday, August 18, 2006 1:16:00 PM  

SK அண்ணே..

எப்படீண்ணே இதெல்லாம்? அடிச்சு கலக்கிட்டீங்க போங்க.

SK Friday, August 18, 2006 1:29:00 PM  

//அது உங்கள் 'fun' முகம் :) //


ஆனால் என்னுது 'பன்'[Bun]முகம் இல்லை, கோவியாரே!!

உங்கள் நண்பன் Friday, August 18, 2006 1:30:00 PM  

// sk said ...பி.கு.: "பண்முகம்" என்று பதில் பஞ்ச் வைத்ததை ரசித்தேன்!//

sk ஐயா ... !

இதில் இன்னுமொரு முகம் இருக்கிறது ...!

அது உங்கள் 'fun' முகம் :) //வார்த்தை விளையாட்டு அருமை நண்பர்களே!


அன்புடன்...
சரவணன்.

SK Friday, August 18, 2006 1:32:00 PM  

இப்பத்தான் கேட்டுக்கிட்டிருந்தான் மன்னார்!
அந்த உருகுவேத் தம்பிய எங்கே காணும்னு!
நீங்களும் உடனே வந்து விட்டீர்கள்!
சொல்ரேன்!

SK Friday, August 18, 2006 1:35:00 PM  

ஆரு? சுந்தர் தம்பீங்களா?
உங்களைத்தான் வலை வீசித் தேடிக்கிட்டு இருக்காங்க!
ஏதோ அ.கொ.தீ. ந்னு பத்த வெச்சுட்டுப் போயிட்டீங்களாமே!

என்னா, என்னான்னு அடிச்சுக்கினு இருக்காங்க!
போயி தண்ணி ஊத்தி அணைச்சு வெய்யுங்க, சாமி!
கோடி புண்ணியமாப் போகும்!

மிக்க நன்றி, திரு. சுந்தர்!

மகேந்திரன்.பெ Friday, August 18, 2006 1:48:00 PM  

இங்க என்னா நடக்குது ?

SK Friday, August 18, 2006 1:53:00 PM  

//இங்க என்னா நடக்குது ?//

வந்து பாத்தாத்தானே தெரியும், மகி?

எல்லாம் உங்க க[வி]தைதான்!

நாகை சிவா Friday, August 18, 2006 1:53:00 PM  

தலைவா என்ன இது!
நீயும் இப்படி கலாய்க்க ஆரம்பிச்சுட்ட
சோக்கா இருக்கு நைனா.....
நடத்து நடத்து

SK Friday, August 18, 2006 2:02:00 PM  

கவிதைக்கும், திருப்புகழுக்கும் வராதவர்களோடு உரையாடி மகிழச் சொல்லி மன்னாரின் கட்டளை!
மீற முடியவில்லை!

இதோ! நீங்களும் வந்து விட்டீர்கள், நாகை. சிவா!

மன்னாரிடம் சொல்லிவிடுகிறேன்!

"எப்படி கிடைத்தது?" பதிவு அபாரம்!!
http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_15.html

நன்றியும், வாழ்த்துகளும்!

[நீங்களாவது இந்த சுட்டி கொடுப்பது எப்படி என்பதை 'படிபடியாய்' விளக்கி இரு மடல் அனுப்புங்களேன் எனக்கு!]

நாகை சிவா Friday, August 18, 2006 2:16:00 PM  

கண்டிப்பாக எஸ்.கே. எந்த பதிவிற்கு என்றும் சொல்லுங்கள். உங்களின் கடைசி இரண்டு பதிவை பார்க்கவில்லை. பார்த்து விட்டு நாளை விரிவாக பேசலாம். இப்ப விடுறேன் ஜட்.

மகேந்திரன்.பெ Friday, August 18, 2006 2:21:00 PM  

யப்பா என்னா கூட்டம் என்னா கூட்டம் எல்லாருக்கும் பதில் சொல்லி வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது பா அந்த பேன கொஞ்சம் போடுங்களேன்

சிறில் அலெக்ஸ் Friday, August 18, 2006 5:00:00 PM  

அவ்வை ஷண்முகியின் கவிதைய அப்டியே வசூல்ராஜா வாயில ஊதிவுட்டதுகணக்கா சோக்கா சொல்லியிருக்கீங்க..

ஜமாய்ச்சுட்டீங்க எஸ். கே..

தம்பி Friday, August 18, 2006 5:22:00 PM  

இதாம்பா ஒரிஜினல் கவுஜ

SK Friday, August 18, 2006 5:23:00 PM  

விசிறினது போதுங்களா, கிழுமாத்தூராரே!

அசதியெல்லாம் போயிடுச்சுன்னா, அடுத்து யருக்கு 100 தேத்தலாம்னு ஒரு பார்வை விடுங்க!
:))

SK Friday, August 18, 2006 5:34:00 PM  

இந்த 'வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி'ன்னு கேள்விப்பட்டிருக்கேன்!
இப்பத்தான் என்னன்னு புரியுது!

'கெடா' வெட்டின ஆளுங்கள்லாம் வந்து 'சோக்கா கீது'ன்னா மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது, சிறில்!

SK Friday, August 18, 2006 5:37:00 PM  

மூணே சொல்லில் ஒரு காவியம் படைச்சுட்டீங்களே, தம்பி!

'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்'றது இத்தானா!

மகேந்திரன்.பெ Sunday, August 20, 2006 9:51:00 AM  

நைனா நம்ம கிழுமத்தூர் காரர் இன்னிக்கும் ஒரு கவுஜ போட்டர்பா ஒன்னியுமே பிரியாம ஆளுங்க அங்கன ஒரே ரவுசு கட்டுதுங்க அத என்னான்னு ஒரு லுக்கு விடேன்? நேரங்கெடச்சா? நம்மளுக்காண்டி இந்த ஒருதபா செய்ஞ்சிட்டு போ நைனா அக்காங்.... அட்ரஸ்தான இந்தா இப்டீக்கா போனீனா வரும்பா


http://mahendhiran.blogspot.com/2006/08/blog-post_20.html

SK Sunday, August 20, 2006 3:42:00 PM  

கிழுமத்துராரே!
மன்னாரிடம் கேட்டு அதற்கும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்!
படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்!

http://aaththigam.blogspot.com/2006/08/blog-post_20.html

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP