"இன்று சிரித்திருப்போம்!"
"இன்று சிரித்திருப்போம்!"
தெரியாத ஒன்றைத் தெளிவு செய்வதாகத்
திரித்துரைக்கும் சில விதிகள்!
புரியாத ஒன்றைப் புரிய வைப்பதாகப்
பிதற்றிடும் சில புளுகர்கள்!
சரியான பாதையில் தயங்காமல் செல்வதற்குச்
சத்தம் போடத் தேவையில்லை!
மரியாதை மட்டும் மனதில் இருந்தால்
மகிழ்விற்கோ என்றும் குறைவில்லை!
தப்பென்றும் சரியென்றும்
சொல்வதிலே அர்த்தமில்லை!
"இப்படித்தான் வாழு" என
வற்புறுத்தல் தேவையில்லை!
மனத்தளவில் மாசின்றி
இருந்தாலே போதாதோ?
கணமேனும் கலக்கங்கள்
கூடிடுமோ நம்மிடையே?
தனியேதான் பிறந்தோம்
தனியேதான் வளர்ந்தோம்
துணையென்று வந்ததெல்லாம்
முன்னேயோ, பின்னேயோதான் !
பிணை இன்றி வாழுவோம்
புறமொன்று சொல்லோம்
தனித்தங்கே செல்லுகையில்
தவிப்பின்றிச் சென்றிடுவோம்!
நம்மில் எவரும் நம்மை விடவும் உயர்ந்தவரில்லை!
நம்மில் எவரும் நம்மை விடவும் தாழ்ந்தவரில்லை
நம்மில் நம்மையும், நம்மில் பிறரையும் கண்டுகொண்டால்
நம்மில் என்றும் குறைவில்லை, நம்மை அழித்திட ஆளுமில்லை!
ஒன்றாய் வாழும் உண்மையதனை
உலகில் அனைவரும் அறிந்துகொண்டால்
நன்றே நடக்கும், நன்மையே பிறக்கும்
என்றே உரைப்பேன்;உணர்ந்திடுவீரே!
சென்றதை மறப்போம்; நல்லதே நினைப்போம்!
அல்லலை அழிப்போம்!
இன்று சிரித்திருப்போம்!
என்றுமே மகிழ்ந்திருப்போம்!
64 பின்னூட்டங்கள்:
நம்மில் எவரும் நம்மை விடவும் உயர்ந்தவரில்லை!
நம்மில் எவரும் நம்மை விடவும் தாழ்ந்தவரில்லை
நம்மில் நம்மையும், நம்மில் பிறரையும் கண்டுகொண்டால்
நம்மில் என்றும் குறைவில்லை, நம்மை அழித்திட ஆளுமில்லை!
ஒன்றாய் வாழும் உண்மையதனை
உலகில் அனைவரும் அறிந்துகொண்டால்
நன்றே நடக்கும், நன்மையே பிறக்கும்//
உண்மை,உண்மை முக்காலும் உண்மை.வழிமொழிகிறேன்.
//தெரியாத ஒன்றைத் தெளிவு செய்வதாகத்
திரித்துரைக்கும் சில விதிகள்!
புரியாத ஒன்றைப் புரிய வைப்பதாகப்
பிதற்றிடும் சில புளுகர்கள்!//
who is this?ulkuthu?:-)))
கலக்கிட்டீங்க எஸ்கே,
நம்மை விட தாழ்ந்தவர் யாருமில்லை. அதைவிட முக்கியமாக நம்மை விட உயர்ந்தவர் யாருமில்லை. கண்டிப்பாக ஆதரிக்க வேண்டிய வரிகள், பாராட்ட படவேண்டிய வரிகள். பிடியுங்கள் ஒர் குத்து.
இப்பதிவு போடப்பட்டதின் பின்னணி என்னவோ?
SK அய்யா,
அருமை. வழமைபோல அழகான தமிழ் வார்த்தைகளில் அற்புதமாகக் கவி புனைந்துள்ளீர்கள்.
//தெரியாத ஒன்றைத் தெளிவு செய்வதாகத்
திரித்துரைக்கும் சில விதிகள்!
புரியாத ஒன்றைப் புரிய வைப்பதாகப்
பிதற்றிடும் சில புளுகர்கள்!
சரியான பாதையில் தயங்காமல் செல்வதற்குச்
சத்தம் போடத் தேவையில்லை!//
நன்றாகச் சொன்னீர்கள்.
நன்றி.
சரியான பாதை, மாசற்ற மனம் எது என்று எளிதில் பிடிபட மாட்டேன் என்கிறதே ஐயா. யாரை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், தெரிந்தது/ தெரிந்த வரை யாரிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று மனம் தவிக்கிறதே. அதற்குத்தானே எல்லா எழுத்துக் கூத்துகளும்.
அன்புடன்,
மா சிவகுமார்
பிடித்தேனையா, பிள்ளையாரப்பா![பா.க.]
முதன்முறை வந்து முகமன் கூறியதற்கு
மிக மிக நன்றி1
படித்தேன், உணர்ந்தென்.
//இன்று சிரித்திருப்போம்!
என்றுமே மகிழ்ந்திருப்போம்!//
இந்த அரு மருந்தை பரிந்துரைத்த அறுபடை நாயகனின் தொண்டர் மருத்துவருக்கு நன்றி.
உள்குத்தெலாம் ஒன்றுமில்லை, செல்வன்!
உங்களுக்குக்தான் தெரியுமே!
மறைத்து வைத்துப் பேசிடவே
திறனொன்றும் கிடையாது!
அறியாமல் பேசுவோரை
அடக்கிடவே நான் யாரோ!
ஐயப்பன் அருள் செய்வான்
அவனுக்குத் தெரியாதா!!
பின்னணி எல்லாம் ஒன்றுமில்லை சிபி!
பதிவுகளைப் படிக்கும் போது மனதில் வருவதை
வார்த்தையில் வடிக்க எண்ணிடும்போது
தடையின்றி வந்தால்
அதுவே பதிவு!
எளிமையாக உங்கள் பதிவில் சொன்னதை விடவா, வெற்றி!
எளிமை, இனிமை, புதுமை, வெற்றி!
நன்றி!
எஸ்கே அவர்களே,
'கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்ற உட்பொருளில் நன்றாக எழுதியிருக்கீறீர்கள். நன்றாக இருக்கிறது
இதை நீங்கள் நிச்சயம் படிப்பீர்கள் என நம்புகிறேன், மா.சி.!!!
அடித்தளம் தூய்மையாகும் போது....
புதைகுழி காத்திருக்கிறது!
மறைத்ததைவிட கொடுந்தவறு......
தவிர்க்க வேண்டுமென அப்படிச் செய்தது!
இறைபக்தி வளராவிடால்.....
'முருகா காப்பாத்து' என்ற மந்திரத்தைக்
கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்!
வங்கியில் காலி செய்து எடுத்திருந்த பணத்திலே
கள்ளிக்காட்டு இதிகாசம் வாங்கினேன்!
புரியும் என நினைக்கிறேன்!
மனம் ஒன்றுதான் எப்போதும் கூட வரும்!
அதிலும் நன்மனம் வாய்த்துவிட்டால்,
அதைவிடப் பெரும் பேறுண்டோ!
மிக்க நன்றி, நன்மனம்!
எஸ்.கே
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது இன்னும் புரியவில்லை.என்னளவில் மறைபொருளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல.நம் கருத்தை வலிமையாக எடுத்துரைக்க அது பல சமயம் ஏற்றதாக இருக்காது என்றே கருதுகிறேன்.
எப்போதும் போல,
புரிதலுக்கு நன்றி!
கோவி.கண்ணன்!
இல்லை செல்வன்!
யாரையும் குறித்து இப்பதிவினை இடவில்லை!
ஆனால், நடப்பு நிகழ்வுகள், பதிவுகள் இதற்கு காரணமில்லை எனப் புளுக மாட்டேன்!
நல்லன சொல்வதில் நடுக்கமில்லை!
என்றும் சிரித்திருப்போம்!
சரிதானே!!
//SK said...
எப்போதும் போல,
புரிதலுக்கு நன்றி!
கோவி.கண்ணன்!
//
எஸ்கே அவர்களே,
எல்லாம் புரிகிறது.... 'எப்போதும் போல' என்பது மட்டும்தான் புரியவில்லை :)
அடடா! எப்போதுமே நாமிருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என்பதையே அப்படிச் சொன்னேன்!
//
SK said...
அடடா! எப்போதுமே நாமிருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம் என்பதையே அப்படிச் சொன்னேன்!
//
எப்போதும் போல உங்கள் பதிவுகளைப் படித்துவிட்டு... எப்போதும் போல ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுவிட்டு சென்றால் ... எப்போதும் போல தொடர முடியாதே என்று நான் எண்ணியிருந்த வேலையில் ... நீங்கள் எப்போதும் போல ஒரு பின்னூட்டத்தைப் போட ... எப்போதும் போல ஒரு பொன்னான வாய்ப்பாக எடுத்துக் கொண்டு... நானும் எப்போதும் போல ஒரு பின்னூட்டத்தைப் போட்டால் ... எப்போதும் போல நான் நிணைத்தபடி அதற்கும் எப்போதும் போல விளக்கம் கொடுத்த எஸ்கே அவர்களே ... எபோதும் போல நானும் இருகிறேன் ... எப்போதும் போல நீங்களும் இருக்கிறீர்கள். எப்போதும் போல இது இப்போதைக்கு போதும் :)
நல்லா இருக்கு உங்க பதிவு எஸ்.கே....
அடடே! எஸ்.கே நீங்களும் சிரிக்க சொல்கிறீர்கள். நானும் சிரிப்பதற்காக எல்லோரையும் அழைத்து கொண்டிருக்கிறேன். அழைப்பிதழ் காண
http://kalaaythal.blogspot.com/2006/07/004.html
அன்பு சிவக்குமர்,
இடித்துரைக்கவில்லை.
வரிகளை மாற்றிப் படித்தால் எப்படி வரலாம் என, படிக்கும்போதே என் மனத்தில் எழுந்த, உணர்வுகளை, உங்களுக்கே அனுப்பி வைத்தென்.
அந்தச் சொற்றொடர்கள் அனைத்தும், உங்களது நிகழ்பதிவில்ருந்து எடுக்கப்பட்டதே!
அதில் பின்னூட்டம் இட வாய்ப்பு இல்லாததால், என்ன செய்யலாம் என நினைத்திருந்த வேளையில், என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் இடவே,
உங்கள் கவனத்தை ஈர்த்தேன்.
அருமையான எண்ணங்கள் உங்களுடையது!
தலை சுத்துது...
எப்போதும் போல, கோவி. கண்ணன்.!
:)))))
சிரிப்பாய்ச் சிரித்த சிலபல பேரின்
சில்லரைத்தனங்களுக்கு இடையே
சிபியாரின் குருநாதர் சிறப்பாய்ச் சொன்ன
சிரிக்கும் கவிதை 'கிறுக்கலில்லாமல்'
'கீழ்ப்பாக்கத்திலிருந்து!!
எஸ்கே சார்,
அருமையான கவிதை. காலத்திற்கேற்ற நல்ல கருத்துகள்.
//தப்பென்றும் சரியென்றும்
சொல்வதிலே அர்த்தமில்லை!
"இப்படித்தான் வாழு" என
வற்புறுத்தல் தேவையில்லை!
மனத்தளவில் மாசின்றி
இருந்தாலே போதாதோ?
கணமேனும் கலக்கங்கள்
கூடிடுமோ நம்மிடையே?
//
அருமை.
உங்க கலக்கல் காமெடிக்கு நான் முழு ரசிகன், கைப்பிள்ள!
அந்த 'அபூர்வ ஒளிவட்டம்' புகைப்படப் பதிவில், மிக்கிமௌஸ் நினைவுக்கு வருகிறதா?
பாராட்டுக்கு நன்றி!
பாராட்டுக்கு நன்றி, லக்கிலுக்!
//மனத்தளவில் மாசின்றி
இருந்தாலே போதாதோ?//
அது போதுமே கவலை இன்றி வாழலாமே!
//நம்மில் எவரும் நம்மை விடவும் உயர்ந்தவரில்லை!
நம்மில் எவரும் நம்மை விடவும் தாழ்ந்தவரில்லை
நம்மில் நம்மையும், நம்மில் பிறரையும் கண்டுகொண்டால்
நம்மில் என்றும் குறைவில்லை, நம்மை அழித்திட ஆளுமில்லை!//
அருமை! அருமை!
வாழ்வின் தத்துவங்கள்......
SK,
தமிழில் அழகாக திட்டியுள்ளீர்கள்.
உங்களுக்கு எதிர்வினைப் பின்னூடமிடும் ஆட்களில் நானும் ஒருவன். இது யாரை நோக்கி எய்தப்பட்டது என்று தெரியவில்லை.
எனினும் உங்கள் தமிழ் மிக அருமை.
நல்ல கவிதை..நல்ல கருத்துக்கள் எஸ்.கே ஐயா..
நன்றி சிவபாலன்.
ஏதோ ஒருமுறை நம் கருத்துகள் ஒத்துப் ப்கைல்லை.
அதற்காக எதிர்வினைப் பின்னூட்டக்காரர் என்று உங்களை நீங்களே ஏன் சொல்லிக் கொள்ளுகிறீர்கள்!
நான் முன்னமே குறிப்பிட்டபடி, இது யாரை நோக்கியும் எய்யப்பட்ட அம்பு அல்ல!
ஆனால், நிகழ்வுகளின் தாக்கத்தில் எண்ணங்கள் வருவதைத் தடுத்திட இயலாது!
ஆனால், யாரையும் தனிப்படத் தாக்க விழைய மாட்டேன்.
நன்றி!
வந்ததற்கும், பாராட்டுக்கும் நன்றி, க.ப.!
உங்க பேரை இன்னும் சொல்ல மாட்டேன்றீங்களே!!
:))
எஸ்கே அய்யா,
பதிவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத கேள்வி இது...
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமா ?
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதா ?
உங்கள் பார்வையில் எது உண்மை ?
//உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதா ?
உங்கள் பார்வையில் எது உண்மை ?
//
கோவியாரே! நல்ல உள்ளங்கள் பிறருடைய துன்பங்களையும் தன் துன்பங்களாகவே கருதுவதால் நல்ல உள்ளங்களுக்கு எப்பொதும் உறக்கமிராது.
//உங்க பேரை இன்னும் சொல்ல மாட்டேன்றீங்களே!!//
மருத்துவர் மறக்கமாட்டேங்கிறாரே :-?
:)))
மிக்க நன்றி SK.
நல்ல கவிதை எஸ்.கே.
ஆனால், முதல் பந்தியில் பளார் என்று அறைந்த மாதிரி இருக்கின்றது :).
இதற்கு பதில் பினூட்டமாக நான் யாரையும் குறிப்பிடவில்லை என்று கூற போகுறீர்கள் :).
//தனியேதான் பிறந்தோம்
தனியேதான் வளர்ந்தோம்
துணையென்று வந்ததெல்லாம்
முன்னேயோ, பின்னேயோதான் !
பிணை இன்றி வாழுவோம்
புறமொன்று சொல்லோம்
தனித்தங்கே செல்லுகையில்
தவிப்பின்றிச் சென்றிடுவோம்!
//
இந்த வரிகள் அருமையாக இருக்கின்றது.
நன்றி!
வாழ்க வளமுடன்!!
//குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமா ?
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதா ?
உங்கள் பார்வையில் எது உண்மை ? //
சிபி சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்!
குற்றமுள்ள நெஞ்சு சாதாரணமாகக் குறுகுறுப்பதில்லை.
குற்றம் இழைக்கப்பட்டவர் அருகாமையில் இல்லாதவரை, அல்லது அக்குற்றத்தின் பாதிப்பு அடிமனதைத் தாக்குமவரை, அல்லது தான் செய்தது குற்றமெனத் தனக்கு தோன்றாதவரையில்!
நம்மால்தானே நிகழ்ந்தது என்னும் எண்ணம் எப்போது நிகழ்கிறதோ, அப்போதே அதற்கான காரண காரியங்களை உள்மனம் உடனே அலசி, ஆரய்ந்து, சரி, இப்படி நான் செய்தது எனக்குச் சமாதானமே என்று எண்ணிவிட்டால், அதன் மூலம் ஒருவர் பாதிக்கப் பட்டாலும், நம் மனம் குறுகுறுப்பதில்லை.
அதே நேரம்,தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றோ, விரும்பாமலோ, ஒரு நிகழ்வு நம்மால் நிகழ்த்தப்பட்டு, அதன் மூலம் யாரேனும் பாதிக்கப்பட்டார்கள் எனத் தெரிந்து விட்டால், மனம் குறுகுறுப்பது ஆரம்பமாகிவிடும்!
அடுத்தவர் குற்றம் எனக் கருதுபவது கூட, நமக்கு தோன்றவில்லையெனில், குறுகுறுப்பு வருவதில்லை.
இப்போது அடுத்தது!
இது 'வல்லவன் வகுத்தது'!
எனவே உண்மையாகவே ஒரு நல்ல உள்ளம் இருப்பின், அது நிச்சயம் உறங்காதுதான்!
உறங்காமல் ஒரு பேருள்ளம் எல்லாவற்ரையும் பார்த்துக் கொண்டிருப்பதாலேயே, இங்கு அனைத்தும் இயங்குகிறது, நிகழ்கிறது, முடிகிறது!
இருக்கின்ற உள்ளங்களிலேயே ஒரே ஒரு நல்ல உள்ளம்தான் இருக்க முடியும்!
அதுதான் பரம்பொருள்!
அது மட்டுமே உறங்காமல் இயங்கி அனைத்து நடப்புகளையும் கவனித்து, நடத்திக் கொண்டிருக்கிறது.
எனக்குத் தோன்றியது இதுதான்!
மிக்க நன்றி, நரியா!
எனக்கும் பிடித்த வரிகள் அவை!
வழக்கம் போல் உங்கள் பார்வை நன்றாக விரித்து .. அலசி சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி அய்யா. உங்களுக்கும் ... சிபி அவர்களுக்கும் நன்றிகள்.
நல்ல உள்ளம் உடையோர் தன் மீது செய்யாத தவறுக்கு குற்றம் சுமத்தப்படும் போது 'நம்மை இப்படி சொல்லிவிட்டார்களே' என்று தூக்கம் வராமல் வருந்துவார்கள். தவறுதலாக குற்றம் செய்துவிட்டு அதனால் வருந்துபவர்களும் நல்ல உள்ளம் உடையவர்களே என்று நினைக்கிறேன்.
வழக்கம் போல் இன்று(ம்) சிரித்திருப்போம். உங்களின் இந்த பதிவு மிக நல்ல பதிவு.
மிக்க நன்றி, கோவி. கண்ணன்.
எப்போதும் போல வித்தியாசமாக சிந்தித்து, வித்தியாசமான ஒரு பார்வையைத் தந்தமைக்கு!
சரியான பாதையில் தயங்காமல் செல்வதற்குச்
சத்தம் போடத் தேவையில்லை!
இதைப்பார்ததும் எனக்கு மற்றொரு வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையைப் பேசுவதில் ஒரு நன்மை வசதி நாம் என்ன பேசினோம் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டாம்.எய்தவன் எங்கோ இருக்கிறான் அம்பிடன் கேள்வி கேட்டுப்பயனில்லை. எப்படியோ நல்ல கவிதை கிடைத்தது அன்பன் தி ரா ச
நம்ம பின்னூட்டத்தை காணாம். என்ன ஆச்சு மருத்துவர் ஐயா........
//உங்க கலக்கல் காமெடிக்கு நான் முழு ரசிகன், கைப்பிள்ள!//
மிக்க நன்றி சார்.
//அந்த 'அபூர்வ ஒளிவட்டம்' புகைப்படப் பதிவில், மிக்கிமௌஸ் நினைவுக்கு வருகிறதா?//
மிக்கி தெரிஞ்சுச்சுங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது போங்க
:))
மன்னிக்க வேண்டும் நாகை சிவா.
தோகையை விரித்துப் பார்த்ததும்தான் தெரிந்தது!
மயில் தோகையை விரித்துப் பார்த்திருக்கிறேன்.
மயிலே தோகைக்குள் மறைந்ததை இப்போதுதான் பார்க்கிறேன்!!
பதித்து விட்டேன்!
நன்றி.!!
மீண்டும் நன்றி, கைப்புள்ள!
நான் கவிதை எழுதுனா மட்டுமே எனக்குப் புரியும்; நான் கவிதை எழுதுனா எனக்கு மட்டுமே புரியும். இப்படியிருக்க உங்க கவிதை எனக்குப் புரிந்தது என்று பொய் சொல்ல விரும்பவில்லை. :-)
சிரிப்பான் போட்டுவிட்டுப் போகாமல் ஏதோ இரண்டு வார்த்தைகளாவது சொன்னீர்களே, அதற்கு நன்றி, குமரன்!!
:))!!
எதுவுமே புரியவில்லையா அல்லது ஏதாவது புரியவில்லையா??
//நான் கவிதை எழுதுனா மட்டுமே எனக்குப் புரியும்; நான் கவிதை எழுதுனா எனக்கு மட்டுமே புரியும்.//
அது சரி! எப்படி இருப்பினும் பிறர்க்கு பயன் தருவதில்லை.
ஐம்பதாவது சிரிப்பு என்னுடையது!
அவ்வண்ணமே ஆகுக!!
நன்றி, சிபியாரே.
//
அது சரி! எப்படி இருப்பினும் பிறர்க்கு பயன் தருவதில்லை.
//
அதனால தானே சிபி நான் கவிதையே எழுதுறதில்லை. அதுக்குத் தான் நீங்க இருக்கீங்களே. ஹோல்சேல்ல எடுத்து நடத்த. :-)
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடப்பா....
//சரியான பாதை, மாசற்ற மனம் எது என்று எளிதில் பிடிபட மாட்டேன் என்கிறதே ஐயா. யாரை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், தெரிந்தது/ தெரிந்த வரை யாரிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்ளலாம் என்று மனம் தவிக்கிறதே. அதற்குத்தானே எல்லா எழுத்துக் கூத்துகளும்.//
இதை தான் என் பதிவிலும் புலம்பு இருக்கிறேனோ..
sk உங்களின் கவிதையை படிக்க சொல்லி சிவகுமார்ஜி என் பதிவில் url இட்டிருந்தார்.. மிகவும் அருமை..என் பதிவில் நான் புலம்பி இருந்ததற்கு எனக்கு உங்கள் கவிதையில் பதில் கிடைத்தது..நன்றி
//நம்மில் நம்மையும், நம்மில் பிறரையும் கண்டுகொண்டால்
நம்மில் என்றும் குறைவில்லை, நம்மை அழித்திட ஆளுமில்லை!//
எஸ்.கே அவர்களே,
நல்ல பாஸிடிவான எண்ணங்களைப் பதிந்திருக்கின்றீர். "Treat others the way you would like to be treated" என்ற என் கருத்தும் இதே!
பொறுப்பான பதிவுக்கு பாராட்டுக்கள்.
உணர்ந்து பாராட்டியமைக்கு நன்றி, ஹரிஹரன் அவர்களே!
மனித நேயம் மறைந்து போவதால் ஏற்படக்கூடிய சில உணர்வுகளைச் சொல்ல விழைந்தேன்.
//புரியாத ஒன்றைப் புரிய வைப்பதாகப்
பிதற்றிடும் சில புளுகர்கள்!
//
ஏன்யா! ஏன் என் மேல இப்படி ஒரு கொலை வெறி?
நன்றி, கவிதா அவர்களே1
உங்கள் படிவில் மறுமொழி இட்டிருக்கிறேன்.
முடிந்த போதெல்லாம் வந்து பாருங்கள்!!
நீங்கள் என்றுமே அந்த வேலையைச் செய்ததில்லையே!
குறிப்பிட்ட எவரையும் குறித்தல்ல அது!
ஆனால், அப்படிப்பட்ட மனிதர்களை அன்றாடம் பார்க்கிறோமே!
தவிர்க்க முடியவில்லை!
நீங்க தொடர்ந்து கலாய்ங்க, சிபி!
//நீங்கள் என்றுமே அந்த வேலையைச் செய்ததில்லையே!
//
என் முழு நேரத் தொழில் பிதற்றுதல்.
பகுதி நேரத் தொழில் கலாய்த்தல்.
இன்னும் பொழுது போகாத சமயங்களில் கவுஜ இயற்றுதல்.
:))
(சிரிப்பான் போட வில்லையென்று சீரியஸான விளக்கம் தந்தீரோ?)
அதுக்குதான் பேருலியே பெனாத்தல்னு வெச்சுக்கிட்டு ஒருத்தர் இருக்காரேன்னு நெனச்சேன்!
:)
நல்ல சமயத்தில் நல்ல கவிதை.
ஐயப்பன் அருள் புரியட்டும்.
ஆசாமிகள் புகழ் தேடிக்கொள்ள ஐயப்பனை குறிவைத்தால்.....
கள்ளிக்காட்டு இதிகாசம் படிக்க துவங்கியாச்சா??
அருமையான புத்தகம்.
சரியாகச் சொன்னீர்கள், மனசு அவர்களே!
எழுதும் போது அந்த நினைவில் எழுதவில்லை,
ஆனால், நீங்கள் சொன்ன பிறகு அப்படியும் இருக்கட்டுமே!!
க.கா.இ. தொடராக வரும் போதே படித்திருக்கிறேன்.
நல்ல நடையுடன் கூடிய காவியம் அது.
அருமை.
Post a Comment