podhu
நாயும், நன்றியும்!
ஒரு காட்டில், ஒரு முனிவர், தவம் செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாய் அவரது காலடியில் எப்போதும் அமர்ந்திருக்கும்.
அந்த நாயின் மேல் அவருக்கு ஒரு தனிப் பிரியம்!
எனென்றால், அவர் எப்போதும் அமர்ந்து தவம் செய்யும் புலித்தோலை வேறொரு முனிவரிடமிருந்து அவர் அறிய்யமல் 'திருடிக்' கொண்டு வந்து
இந்த முனிவருக்கு அளித்ததனால்,
இவருக்குக் கொள்ளைப் பிரியம் இந்த நாயினிடத்தில்!
அது மட்டுமல்ல1
இவர் வேறு வேலையாய்ப் போகும் நேரமெல்லாம்,
குளிக்க, பிச்சை எடுக்க, கடன் கழிக்க,
இப்படிப்பட்ட நேரத்திலெல்லாம், அந்த நாய் அந்தப் புலித்தோலின் மீது அமர்ந்து, வேறு யாரும் அதை எடுத்துப் போய் விடாமல் காத்திருக்கும்!
இதனாலெல்லாம் வேறு, அந்த முனிவருக்கு நாயினிடத்தில் பிரியம் வளர்ந்துகொண்டே வந்தது!
ஒருநாள், நாயைப் பார்த்துக் கேட்டார்,
'ஏ நாயே! உன் பக்தியை மெச்சினோம்!
உனக்கு என்ன வரம் வேண்டுமோ, கேள்!'
அந்த நாய் சொல்லிற்று,
அய்யா! உங்கள் கருணையே கருணை!
என்னை ஒரு நரி ஆக்குங்கள்!
அதுதான் எனக்கு வேண்டும் என்றது!
அப்படியே ஆகட்டும் என்று முனிவரும் ஒரு மந்திரம் சொல்லி, அந்த நாயை ஒரு நரியாக்கி விட்டார்!
நாயும், நரியாகி, மகிழ்ச்சியாக கொஞ்ச காலம் கழித்தது!
ஒரு புலியைப் பார்த்தவுடன்,
நரி ஓடி ஒளிந்தது!
இதைக் கண்டு வெட்கமடைந்த நரி,
முனிவரிடம் சென்று,
என்னை தயவு செய்து,
ஒரு புலியாக மாற்றிவிடுங்கள் எனக் கெஞ்சியது!
'அப்படியே ஆகுக!'
என முனிவரும் ஆசீர்வதித்தார்!
நரியும் புலியாகியது!
கொஞ்ச நாள் போனவுடன்,
புலி, ஒரு யானையைப் பார்த்தது!
ஆஹா! எவ்வளவு பெரிய உடம்பு!
நான் இப்படி ஆனால் எப்படி இருக்கும்
என நினைத்தது!
உடனே, முனிவரிடம் சென்றது!
கெஞ்சியது!
முனிவரும் மனமிரங்கி,
நீ ஒரு யானையாகக் கடவது என
வரமளித்தார்!
புலி, யானையாகி,
வனமெங்கும் அலைந்தது!
பெருமையுடன் வாழ்ந்தது!
ஒரு நாள் ஒரு சிங்கம் அந்த யானையைத் துரத்தியது!
அவ்வளவுதான்!
அந்த யானை உடனே முனிவரிடம் வந்தது!
'என்னை இப்போதே ஒரு சிங்கமாய் மாற்றுக!'
எனக் கெஞ்சியது!
முனிவரும் சிரித்துக் கொண்டே,
யானை சிங்கமாகும் மந்திரத்தைச் சொன்னார்!
யானையும் சிங்கமாயிற்று!
இப்போது அதை வெல்ல யாருமில்லை!
அந்த சிங்கம் நினைத்தது!
"என்னை வெல்ல யாருமில்லை!
ஆனால், என்னை பலமிழக்கச் செய்ய ஒருவனே உண்டு!
அவன் தான் இந்த முனிவன்!
அவனை அழித்து விட்டால்,
என்னை வெல்ல யாருமில்லை'"
என்று நினைத்து,
அந்த முனிவரின் பின்னால் வந்து,
அவர் பார்க்காத நேரம் பார்த்து,
தன் பிடரியை ஓங்கி
அவரை அடித்துக் கொல்லப்
புகுந்த வேளை,
முனிவர் தன் ஞான த்ருஷ்டியால்
அந்த நாயை ஒரு சொறிநாயாய் ஆக்கி விட்டார்!
அதோடு மட்டுமல்லாமல்,
இனி வரும் நாய்களெல்லாம்,
'நன்றி' என்பதை மறக்காத ஜீவனாய் இருக்குமென
வரமளித்து
மறைந்தார்!!
நாய்க்கு நன்றி வந்த கதை இதுதான்!
ஆகவே நாய்கள் நன்றியுடன் இருக்கிறார்கள்!
0 பின்னூட்டங்கள்:
Post a Comment