நாளை நமதே!
சற்றே பொரும் பிள்ளாய்!
70 விழுக்காடு [சதவிகிதம்] மக்கள் ஓட்டளித்திருக்கிறார்கள் என தேர்தல் ஆணையம் சொன்னவுடனே,
இங்கு பல பேரின் தூக்கம் போயே போச்சு!
அதிகம் பேர் வாக்களித்தால்,
ஆளும் கட்சிக்கு ஆதரவு!
'எக்ஸிட் போல்' கணக்குப்படி
எதிர்கட்சிக்கு ஆதரவு!
அதே 'எக்ஸிட் போல்' கணக்குப்படி
ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டென்றால்,
அது திமுகவிற்கும் போகும்!
எங்கள் விஜய்காந்துக்கும் போகும்!
கடலூர், திண்டிவனம் மாவட்டங்களில்,
பா.ம.க.விற்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என
ஆரூடங்கள் சொல்கின்றன!
கருணாநிதியோ
மூன்று பட்டியலை வைத்துக் கொண்டு
முக்கிக் கொண்டிருக்கிராம்!
ஒன்று, திமுக மட்டுமே பெரும்பான்மை கொண்டால்!
இரண்டு, காங்கிரசும் கூட்டூக்கு வந்தால்!
மூன்று, பாமக மனம் மாறி, பங்கு கேட்டால்!
ஆனால்,
இன்னும் ஓட்டே எண்ணப்படவில்லை!
அதற்குள்,
இந்த தகவல்கள்!
வெட்கிப்போ தமிழகமே!
வெட்கி மடி தமிழனே!
உனக்கு இதுவும் வேண்டும்
இஒன்மும் வேண்டும்!
நான் முன்பே சொன்னது போல,
11-ம் தேதி வரை
நான் காத்திருப்பேன்!
உன்னைப் பார்த்திருப்பேன்!
தேமுதிக 70 சீட்டுகளுடன்!!!
மீதியை......
12-ம் தேதி பேசலாமே!
நாளை நமதே!
17 பின்னூட்டங்கள்:
http://www.dinamalar.com/2006may10/political_tn18.asp
இந்த செய்தியை படியுங்கள் எஸ்.கே சார்.அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாக காரணம் விஜய்காந்த் தான் என்றும் அவை விஜய்காந்துக்கே விழும் என்றும் சொல்கிறது.
ஆனால் 70 சீட் என்பது டூ மச்.பண்ருட்டி,விருத்தாச்சலம் தவிர வேறு தொகுதியில் தெமுதிக வெல்ல வாய்ப்பில்லை.10 முதல் 12 % ஓட்டு கிடைப்பது நிச்சயம்
SK,
வெறும் 70 தானா?. தனிப்பெரும்பான்மை கிடைக்காதா ? :-)).
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திமுகவும், தேமுதிகவும் சேர்ந்து ஆட்சியமைக்கும் சாத்தியம் உள்ளதுபோல் தோன்றுகிறதே. அப்புறம், சுதேசி படக்கதைதான் நடக்குமோ ?. சரி பார்க்கலாம், இன்னும் ஒரு நாள்தானே இருக்கிறது.
கனவு கண்டு தூக்கத்தில் புலம்பிறதுக்கு.... ஒரு அளவு கணக்கில்லையா...சாமி.......
நான் சொல்வது பைத்தியக்காரத்தனமாய்த் தோன்றலாம்!
நாளை வரை காத்திருக்க நான் தயார்!
நீங்கள் தெற்கை மறந்தது நியாயமில்லை!
கார்த்திக்கும், சாமியும் மன்னிக்க மாட்டார்கள்!
'தனிப் பெரும்பான்மை'!!
அதைப் பற்றி நாளை பேசலாம்!
80-ம் வருஷம் கூட எண்ணி முடிக்கிறதுக்கு முன்னாடி அமைச்சரவை பட்டியல் எல்லாம் எழுதி வெச்சிருந்தாங்களாம் - ஆளுநர்கிட்டயிருந்து அழைப்பு வந்த உடனே ஓடிப் போய் உட்காந்துக்கிடலாம்னு.
ம்.. நானும் நாளை வரைக்கும் வெயிட் பண்ணுறேன்.
நிச்சயம் வெயிட் பண்ணுங்க!
நாம் நினைக்கிற நல்ல முடிவு வந்தே தீரும்!
//இந்த செய்தியை படியுங்கள் எஸ்.கே சார்.அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாக காரணம் விஜய்காந்த் தான் என்றும் அவை விஜய்காந்துக்கே விழும் என்றும் சொல்கிறது.///
செல்வன்,
இதுபோல் அதிகபட்ச ஓட்டுப்பதிவு ஒரு மவுனப் புரட்சியாக இருப்பதற்குச் சாத்தியம் அதிகமாகவே உண்டு. எனக்குத் தெரிந்த பா.ம.க-வின் தீவிர ஆதரவாளரான சில குடும்பங்களின் வாக்குகளேகூட மொத்தமாய் விஜய்காந்துக்கு விழுந்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் விஜய்காந்துக்கு 70 சீட் கிடைத்தால் அடுத்த முதலமைச்சர் அவரேதான் என சந்தேகமே இல்லாமல் சொல்லிவிடலாம். இது நடந்தால் அரசியல் பின்புலமே இல்லாமல் சினிமாப் பிரபலத்தன்மையை வைத்து அரசியலில் வெற்றி பெற்ற தமிழகத்தின் முதல்ஆளாகவும், இந்தியாவில் இரண்டாம் ஆளாகவும் விஜய்காந்த் இருப்பார். பார்க்கலாம் என்னதான் நடக்குமென.
ஏம்பா இது too muchஆ இல்ல. சரி இந்த செய்திக்கு என்ன கருத்து?
குடியாத்தத்தில், மச்சான் ஒரு ஓட்டுக்கு 100ரூபாய் மற்றும் ஐந்து ஓட்டுக்கு 25 கிலோ அரிசி கொடுத்தாராமே? (நன்றி 9th May தினமலம்)
உடனே ஒருத்தர் தட்டிவிட்டான்குஞ்சு என்று சொல்லுவார். அவருக்காக link இதோ.
http://www.dinamalar.com/2006may09/teakadai.asp
அதிக ஓட்டு பதிவினால் பயன் அடையப்போவது தேமுதிக. 10% அதிகமான வாக்கு பெற்றால் அடுத்த தேர்தலில் தேமுதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அதிமுக, திமுக வுக்கு மாற்றாக தமிழகம் முழுவதும் இளையோரை கொண்டதாக இக்கட்சி விளங்கும். தேமுதிக வளர்ச்சி எந்த கட்சியை ஒழிக்கும் என்று தெரியவில்லை.
இத் தேர்தலில் 2 க்கும் மேல் தொகுதிகளை வெல்வது கடினம்.
நான் கூட அதிகம்மY நினைக்கவில்லை என்பதெ உண்மை!
ஆனால், 70% என்றவுடன், 6 தெர்தல்களைச் சந்தித்தவன் என்ற முறயில்,
நிச்சயமாக ஒரு நிலைமை தெரிகிறது!
இதில் விஜய்காந்திற்கு பெரும் பங்கு இருக்கிறதென்று!
24 மணி நேரம்!
இது எங்கள் கேப்டன் நேரம்!
கனவு எது?
தூக்கம் எது?
நனவு எது?
நம்பிக்கை எது?
நாளை தெரிந்து விடும் நண்பரே!
நான் இருப்பேன்!
நீங்களும் இருப்பீர்!
நடப்பதைப் பார்த்த்கு
நல்லதைப் பேசுவோம்!
இந்து நாளிழதில், வட மாநிலங்களில் அதிமுக திமுகவை நெருக்கியடிக்குது என கணிக்கப்பட்டுள்ளது. தெற்கே, கார்த்திக்கின் கட்சியால், தேவரின அதிமுக வாக்குகள் குறைவதால், அதிமுக மிகவும் பின் தங்கியுள்ளது என்ற கணிப்பு சரியானதே என நினைக்கத் தோன்றுகிறது.
அப்படிப் பார்த்தால், பாமகவின் ஓட்டு வங்கி குறைந்துவிட்டதாகக் கருதினாலன்றி, இந்த வட மாநில அதிமுக முந்துதலை விளக்க இயலாது - திருமாவினால் கிடைக்கும் ஆதாயம் ஒன்றே போதுமானதல்ல. முத்து நிறைய பாமக குடும்பங்கள் விஜிக்கு வாக்களித்துள்ளனர் எனக் கருதுகிறார். எனக்கென்னமோ, அக்குடும்ப ஆண்கள் மருத்துவருக்கும், இளைஞர்களும் பெண்களும் கேப்டனுக்கும் போட்டிருப்பார்கள் எனத் தோன்றுகிறது. இந்நினைப்பு, வட மாநில அதிமுக நெருக்குதலைப் புரிய வைக்கும்.
நடிகர்கள்தான் தம் வாக்கு வங்கிக்கு உலை வைக்கக் கூடியவர்கள், மற்ற அரசியல் கட்சிகளால் அது முடியாது, என்பதால், நடிகர்களை முழுமூச்சாய் எதிர்க்கும் மருத்துவர், சென்ற நா. தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவினாலும், மக்களின் ஒட்டு மொத்த அராஜக ஜெ-ஆட்சியின் மீதான வெறுப்பு தந்த அலையினாலும், ரஜினியை ஓரங்கட்ட முடிந்தது. இம்முறை, கேப்டனிடம் அவர் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளார் என்றே கருதுகிறேன்.
சீட்டுகள் பெறுகிறாரோ இல்லையோ, அடுத்த 5 ஆண்டுகளும் அவர் அரசியலில் இருப்பதற்கு, ஒரு ஊக்கம் தரும் வகையில் வாக்குச் சதவிகிதம் பெறுவாரா விஜி என்பது ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
மச்சானின் அரிசி-ஆடல்கள், இக்கழகமும் ஒரே குட்டையில் ஊறப் போகும் மற்றொரு மட்டை என உணர்த்துவது... அது வேறு விஷயம்.
மீண்டும் ஒரு நல்ல அலசல், 'கிருஷ்ணா'!
இவர் கொடுத்த வாக்குறுதிகள் காலூன்ற மட்டுமே!
மற்றும் நிறைவேற்றக் கூடியவை மட்டுமே என்பதையும் கவனிக்கவும்.
யாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளப் போகிறார் என்பதை வைத்தே இவரும் இன்னொரு மட்டையா இல்லை, நேர்மையான கட்டையா என்று சொல்ல முடியும்!
நல்ல முயற்சி. ஆனா..... போயே போச்! போயிந்தே!! Its Gone!!! So just wait for another 2 years only...
எஸ்.கே சார்
விஜய்காந்த் வெற்றி என்றதும் முதலில் உங்கள் நினைவு தான் வந்தது.
வாழ்த்துக்கள்
நன்றி செல்வன்!
எனக்கும் உங்கள் ஞாபகம்தான் -நீங்கள் செய்த உதவிதான் -- வந்தது!
'தாசரதி'சார், எனது அடுத்த பதிவைப் பாருங்கள்!
கேபடனை இந்த நாடே வாழ்த்தப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை!!
Post a Comment