தி.மு.க., அ.தி.மு.க. ஒரு விளக்கம்!
தி.மு.க., அ.தி.மு.க. ஒரு விளக்கம்!
தி.மு.க.== திருத்தவே முடியாத கழகம்
அ.தி.மு.க.== அறவே திருத்த முடியாத கழகம்
ஐம்பத்தைந்து ஆண்டு கால அரசியல் அநுபவம்
இருப்பினும் மாறாது இருக்கும் அரைவேக்காட்டுத்தனம்
தன் பெருமையைச் சொல்ல முடியாமல் தவித்து
அடுத்தவனை இழித்தே தான் வளர்ந்திடும் குணம்
அன்றும் மாறவில்லை; இன்றும் போகவில்லை!
என்றுமே "திருத்த முடியாத கழகம்"![தி.மு.க.]
தெரிந்தே பெயர் வைத்தார் திராவிடத் தலைவரும்
புரிந்தே செயல்படுவார் அவரின் தானைத்தலைவரும்!
அன்றும் இலவசம்! பொய்யான வாக்குறுதிகள்!
இன்றும் அதே கதைதான்! ஏமாற்றுதல் தொடர்கிறது!
அதை விடுத்த அடுத்தவரைப் பர்த்தாலோ
எதைச் சொல்லி அழுதிடுவேன் என்றெனெக்குத் தெரியவில்லை!
முறையாகத்தான் பேரும் வைத்திருக்கிறார்!
<strong>அறவே திருத்த முடியாத கழகமென்று![அ.தி.மு.க]
அவராவது பரவாயில்லை எனக்கொஞ்சம் நம்பிடலாம்!
தவறென்றால் ஒருசிறிது திருத்திட்வே முயற்சிப்பார்!
தன் தவறைத் தான் உணர மாட்டாமல்
பின் எவரும் கிடைப்பாரோ எனத் தேடி
கண் இரண்டும் போனாலும் பழுதில்லை என்று
உன் பழியை வாங்கிடவே உயிர் வளர்ப்பார் இவரிங்கு!
அவரைத் திருத்தவே முடியாதெனில்
இவரை அறவே திருத்த முடியாது!
இவ்விரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றினையே
தவறாமல் தேர்ந்தெடுக்க வைத்திடலே
தரணியினில் தமக்கிட்ட கட்டளை என
தமிழருமே திருந்தாமல் இருக்கின்றார்!
துயரமிதுத் தீராதா?
மதுரமினி வாராதா?
தமிழர் கதி இதுவெனவே
தலைவிதியும் ஆனதென்ன?
சற்றேனும் சிந்திப்பாய்!
பிறந்ததற்குப் பொருள் கொள்வாய்!
ஓ தமிழா!
ஓ தமிழா!
66 பின்னூட்டங்கள்:
எஸ்.கே அருமை.
திக,மதிமுக என்பதற்கும் ஒரு விளக்கம் தந்துவிடுங்கள்.:-))))
நல்லொதொரு விளக்கம்!
நன்றி, செல்வன்!
என்னை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை எனக் கங்கணம் கட்டியுள்ளீர்களா!!!??
நானேதான் எனக்கு சொ.செ.சூ.வைத்துக் கொண்டிருக்கின்றேனே!
நீங்கள் வேறயா!!
:))
முதன்முறை வந்து பாராட்டியதற்கு நன்றி, வெ.க.நா அவர்களே!
ஏங்க! நான் நல்லா இருக்கறது பிடிக்கலியா, பொன்ஸ்!?
செல்வன்கிட்ட சொன்ன மாதிரி, நானேதான் சொ.செ.சூ. வை.னே!
நீங்க வேற ஏத்தி விடறீங்க!
செல்வனும் கேட்டுருக்காரு!
முயற்சி பண்றேன்!
விதி யாரை விட்டது!
:))
தி.க. == திருந்தாத கழகம்
ம.தி.மு.க. == மனதாலும் திருத்த முடியாத கழகம்
தி.ரா.மு.மு.== வேண்டாம் சாமி! ஆளை விடுங்க! இது இன்னும் ஒரு அரசியல் கட்சி இல்லை!
:)))
SK,
இரண்டு ஆட்டோல ஆள் வரப்போகுது...
தெரியும்ங்க!
எப்பவோ வந்திருக்கணும்!
என்ன பண்றது?
உரலுக்குள்ளே தலையைக் கொடுத்தாச்சு!
இனிமே உலக்கைக்கு பயப்படறது எல்லாம் வேஸ்ட்டுன்னு நினைக்கிறேன், சிவபாலன்!
"எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் யாம் அஞ்சோம்!"
:)))!!!
:)))
//எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் யாம் அஞ்சோம்!"
//
கேப்டனுக்கு இவ்வளவு மரியாதையா? நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் எஸ்.கே. :-)
தெய்வீகச் சிரிப்பினுக்கு விளக்கம் அளிப்பீர் என நிச்சயமாய் நம்புகிறேன், இலவசக்கொத்தனாரே!!
கவலைபடாதீங்க எஸ்.கே.நான் திகவில் பான்டேஜ் பாண்டியன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்.அடுத்தவாரம் பாண்டியன் தேதிமுக,திக,பாமகன்னு ஒரு ரவுண்டு வருவார்:-)))
////எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் யாம் அஞ்சோம்!"
//
கேப்டனுக்கு இவ்வளவு மரியாதையா? நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் எஸ்.கே. :-) //
வேறு யார் சொல்லி இருந்தாலும் கவனித்திருக்க மாட்டேன்!
ஆனால், குமரனா இதைச் சொல்வது?
நான் சொன்ன 'எங்கள் பிரான்', நம் பிரான் அல்லவோ!?
"விடையேறு செல்வன்"!!
தொடர்ந்து கிண்டல் செய்கிறீர்கள்!
புரியவில்லை!
:((
விடையேறு செல்வனைத் தான் சொன்னீர்கள் என்று புரிந்தது எஸ்.கே. ஆனால் அந்த வார்த்தையை வைத்து விளையாடலாமே என்று தோன்றியது. கிண்டல் தான். வேறொன்றுமில்லை. தவறாய் நினைக்காதீர்கள். :-)
But, i saw your drift!
Thanks, Kumaran and it was nice!!
அந்தச் சிரிப்புக்கு குமரனை விளக்கம் கேளுங்க. சொல்லின் செல்வர் சிரிப்புக்கும் விளக்கம் சொல்வார்.
அட, நீங்க வேற, குமரன்!
நான் ஒண்ணும் தப்பா நினைக்கலை!
எஸ்.கே, மதியம் தூங்கிட்டே தப்பான கேள்விய கேட்டுட்டேங்க.. நான் கேட்கவந்தது என்னன்னா, தே தி மு கவை மட்டும் விட்டுட்டீங்களே, அதையும் விளக்குங்கன்னு..
அதுல பாருங்க, அந்தக் கட்சியில, விகா தவிர கட்சி பேரு கூட நினைவிருக்க மாட்டேங்குது :)
இப்போ வரைக்கும் நீங்க தே தி மு க பத்தி ஒண்ணும் சொல்லலை.. சொல்லுங்க!!!
ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் யார்கிட்டயோ தர்ம அடி வாங்கப் போறேன்.. அடிக்கிற கை எஸ்கே கையா இல்லை வேற ஏதாவது கையான்னு தெரியலை :)
கொத்ஸின் சிரிப்புக்கு விளக்கம்: வந்தேன். படித்தேன். நன்றாக இருந்தது.
பொன்ஸ்,
அப்படி ஒரு கட்சியே இல்லீங்களே!
:))
சரி விடுங்க எஸ்கே.. உங்க பார பட்சமான முடிவு தெரியுது..
கட்சி பேரு என்னவோ உங்களுக்குத் தெரியாத மாதிரி!! :)
ம்ம்ம்.. நல்லா இருக்கு உங்க ஒரு தலைபட்சமான(ஒரே ஒரு தலைதான் சட்டமன்றத்துல) கவிதை !!!!
//அதுல பாருங்க, அந்தக் கட்சியில, விகா தவிர கட்சி பேரு கூட நினைவிருக்க மாட்டேங்குது :)
இப்போ வரைக்கும் நீங்க தே தி மு க பத்தி ஒண்ணும் சொல்லலை..//
அப்படி ஒரு கட்சியே இல்லீங்களே!
இருந்தாலும்,
நீங்க கேக்கறது,
கேப்டனோட, தே.மு.தி.க. வைப் பத்தின்னு புரியுது!
தே.மு.தி.க. == தேடல்களை முன்வைத்துத் திருத்தவரும் கழகம்!!
:))
பொன்ஸ்,
உங்கள் மனசாட்சியைத் தொட்டு சொன்னீர்களென்றால்,
உங்களுக்கும் தெரியும்,
காங்கிரஸ் ஒன்றைத்தவிர[!!!] சட்டமன்றத்தில் மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே தலைதான்,
வால்கள் வேண்டுமானால் நிறைய இருக்கலாமென்று!
எனது ஒருதலைப் பட்சமான பதிலைப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்!
தே.மு.தி.க. == தேறவே முடியாத திரைநடிகர் கழகம் !!!
//தே.மு.தி.க. == தேறவே முடியாத திரைநடிகர் கழகம் !!! //
:))) அருண்மொழி.. நல்லா சொன்னீங்க போங்க.. இது மாதிரி ஏதாவது தான் எதிர்பார்த்தேன் :)
அருண்மொழி,
எனது விளக்கத்தையும் பாருங்கள்,
கொஞ்சம் மாற்றிப் பாருங்கள்!
தேறவே முடியாதாரையும் திருத்திடும் கழகம்!!
இது எப்படி இருக்கு!!
பொன்ஸ்,
நான் சொன்னதைப் பார்க்காமல்,
மற்றவரைத் துதிபாடும் உங்கள் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
ஏங்க, இப்படி எதிராவே இருக்கீங்க!!
:))
//உங்க ஒரு தலைபட்சமான கவிதை !!!!//
பொன்ஸ்,
எப்படி நீங்க பாரபட்சமான முடிவுன்னு சொல்றீங்க?
அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு வரலாறு இருக்கு!
இவரு இப்பத்தான் அடி எடுத்தே வெச்சிருக்காரு!
எப்படி ஒப்பிடமுடியும் இவரை,...
அந்த எமகாதகர்களோட!!
SK,
//எனது விளக்கத்தையும் பாருங்கள்,
கொஞ்சம் மாற்றிப் பாருங்கள்!
தேறவே முடியாதாரையும் திருத்திடும் கழகம்!!//
ஒரு சார்பு நிலை எடுத்தால் எப்படி வேண்டுமானாலும் மாற்றி பேசலாம். அதில் ஒன்றும் தவறில்லை. இதைதான் கழக கண்மணிகளும் ஆண்டாண்டுகாலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லியபடி அவர் எப்படி செயலாற்றுகிறார் என்று சில வருடங்கள் பார்க்கலாம்.
When Rajiv came to power, they said "he wanted to change the system". After a few years, they said "the system has changed him".
புரிதலுக்கு நன்றி, அருண்மொழி.
முதலில், நான் இரு பெரும் கழகங்களைப் பற்றி மட்டுமே எழுதினேன்!
மற்றவர்கள் தூண்டுதலாலேயே, பிற கழகங்களையும் இழுக்கலாயிற்று!
//தே.மு.தி.க. == தேறவே முடியாத திரைநடிகர் கழகம் !!! //
இது சூப்பரப்பூஊஊஊஊஊஊ!
//வேண்டாம் சாமி! ஆளை விடுங்க! இது இன்னும் ஒரு அரசியல் கட்சி இல்லை!//
நிறைய பயந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். கேப்டனை மனசுக்குள்ள நினைச்சுக்குங்க!
கலக்கலாம்!
//கேப்டனுக்கு இவ்வளவு மரியாதையா? நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் எஸ்.கே.//
எப்பேர்ப்பட்ட கடினமான பாடலாக இருந்தாலும் விளக்கம் கொடுத்து விடுவார் நம்ம குமரன்.
//எப்படி ஒப்பிடமுடியும் இவரை,...
அந்த எமகாதகர்களோட!!
//
அதானே! இவரு இன்னும் எமகாதகனா மன்னிக்க எம்காதகரா வளரணுமில்ல! கொஞ்ச நாள் ஆகும்!
தே.தி. மு. க. இப்படியும் வைத்துக்கொள்ளலாமா. தேர்தலுக்காக திடீரென்று முளைத்த கழகம். வாங்கிற அடியை சமமாக பிரித்துக்கொள்ளலாம் .தி. ரா. ச
வாங்க, வாங்க, சிபி!
என்ன கொஞ்ச நாளு ஆளையே காணும்?
நமக்கு பயம்லாம் ஒண்ணும் கிடையாதுங்க!
நம்ம தலைப்பைப் பாருங்க!
நான் அந்த இரு பெரும் கழகங்களைத்தான் எழுதினேன்!
அப்புறமா, ரசிகர்களோட[!!!!] தொல்லை தாங்க முடியாம, மத்தவங்களையும் ஆட்டத்தில சேத்துக்கிட்டேன்!
இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்;
கேப்டனையும் கலாய்க்கலாம்!:)
தி.ரா.ச.,
நீங்க சொல்றதும் பொருந்தித்தான் வருது!
இது உண்மையாக இல்லாமல் போகட்டும்!
நன்றி!
//தேர்தலுக்காக திடீரென்று முளைத்த கழகம்//
ஹாஹாஹா....
இதில் அப்படிச் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது, நா.சிபி!?
முளைத்ததை ஒப்புகொண்டு விட்டீர்கள்!
முளைத்து 'ஒரு' இலையும் விட்டாயிற்று.
நல்ல விதை, நல்ல முளை என்றுதானே அர்த்தமாகிறது!?
நல்ல மரமாக வளரும் நாள் தொலைவில் இல்லை!
ஹா, ஹா, ஹா!
[பி.கு.] தலைப்பை மீண்டும் ஒருதடவை படியுங்கள்!!
:)))
//முளைத்து 'ஒரு' இலையும் விட்டாயிற்று.//
அப்படியே ரெண்டு இலையோட ஐக்கியம் ஆகியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா வளர்ந்திருக்கலாமே!
ரெண்டு இலையோட ஐக்கியம் ஆனவங்க யாரும் இதுவரைக்கும் உருப்பட்டதா சரித்திரமே இல்லியே!!
கேப்டன் வெவரமான ஆளுதான், தெரியுமில்லே!
அப்படியே ரெண்டு இலையோட ஐக்கியம் ஆகியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா வளர்ந்திருக்கலாமே!//
புலி ஆட்டை தன்னோட ஐக்கியம் பண்ணுற கதைதான் அதிமுகவோட ஐக்கியமாறதும்
தங்களது இயல்பான[!!] அறிவுக்கூர்மைக்கு இழுக்கு ஏற்படும் அச்சம் கருதி, தஙளது கடைசிப் பின்னூட்டத்தை நான் வெளியிடவில்லை!
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
SK,
உங்களின் இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கு பள்ளிப்பருவ ஞாபகம் வந்தது. ஈழத்தில் எனது பள்ளிப்பருவத்தில் நாம் சில சக மாணவர்களை அ.தி.மு.க, தி.மு.க என அழைப்போம். எடுத்துக்காட்டாக ,
"அவன் தி.மு.க மச்சி"
"இல்லையடா அவன் அ.தி.மு.க"
அதன் விளக்கம் இதுதான்.
தி.மு.க = திருத்த முடியாத கழுதை[கள்]
அ.தி.மு.க = அடிச்சும் திருத்த முடியாத கழுதை[கள்]
பி.கு:- என் பின்னூட்டம் ஒர் நினவுமீட்டல் பதிவே. இப்பின்னூட்டம் அரசியல் பின்னூட்டம் இல்லை. எனவே தயவுசெய்து, அதிமுக, திமுக உறுப்பினர்கள், அனுதாபிகள் இப் பின்னூட்டத்தை அரசியல் கோணத்தில் நோக்கி தப்பாக நினைக்கவேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகள்.
அன்புடன்
வெற்றி
SK,
எனது முன்னைய பின்னூட்டத்தில் சொல்ல மறந்தது:
அருமையான கவிதை. தமிழகத்தின் சம கால அரசியல் நிலமையை எளிய தமிழ் நடையில் சுவையாக , அனைவரும் சிந்திக்கக்கூடிய விதத்தில் அழகாகக் கவியாக வடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். உண்மையில் ஒவ்வொரு தமிழகத் தமிழனும் உங்களைப் போல் சிந்தித்துச் செயற்பட்டால், தமிழகம் இந்தியாவில் எல்லாத்துறையிலும் முதல் மாநிலமாகத் திகழும் என்பது திண்ணம்.
SK
நல்ல பதிவு
கேப்டனின் கன்னிப்பேச்சை எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது உங்களிடம் இருந்து ஒரு சின்ன பதிவு கூட இல்லாததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
(கோட்டையில் அரசு அலுவலர்கள் சூழ்ந்து பாராட்டியதாக தட்ஸ்தமிழ் சொல்கிறது)
மிக அதிகமாகவே பாராட்டி விட்டீர்கள் !
இருப்பினும் நன்றாகத்தான் இருக்கிறது!
மிக்க நன்றி!
கருத்துக்கும், பாராட்டுகளுக்கும்!
இட்லிவடை அதை முழுதுமாகப் போட்டுவிட்டதால் நான் பதிவிடவில்லை!
மற்றும்,
நம்பினால் நம்புங்கள்!
யார் எவருக்குக் கொடுக்கிறார்களோ இல்லையோ,
நான் ஒரு ஆறு மாதம் கேப்டனுக்கு கொடுத்திருக்கிறேன்....
கருத்துச் சுதந்திரம்!!
என்னவெல்லாம் செய்கிறார், சொதப்புகிறார் எனப் பார்க்க!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
//கோட்டையில் அரசு அலுவலர்கள் சூழ்ந்து பாராட்டியதாக தட்ஸ்தமிழ் சொல்கிறது//
என்னங்க இது! நீங்க கொண்டாடி இருக்க வேண்டாமா? சரி அதைத்தான் செய்யலை. பாராட்டி ஒரு ரெண்டு வரி பதிவாவது போட்டிருக்கலாமில்ல!
போட்டிருக்கலாம்தான்!
ஆன, மத்தவங்க போட்ட செய்தியையே திருப்பிப் போடற அளவுக்கு இது ஒண்ணும் அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகத் தெரியவில்லை!
மேலும், தேர்தல் நேரத்தில் வி.கா. ஒரு நல்ல மாற்று என நம்பியே என் பதிவுகள் அமைந்தன.
இனிமேல், அவர் செயல்பாடுகளைப் பொறுத்தே மற்றவை தொடரும்!
நன்றி, [நா] சிபி!
//
இவ்விரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றினையே
தவறாமல் தேர்ந்தெடுக்க வைத்திடலே
தரணியினில் தமக்கிட்ட கட்டளை என
தமிழருமே திருந்தாமல் இருக்கின்றார்!
//
இது தானே...சூப்பரூ..
நல்ல பாடல்..நல்ல பதிவு.
நன்றி, ஷங்கர்!
என்ன சொல்லிப் பாடுவது?
எப்படித்தான் திருத்துவது?
30 ஆண்டு காலம்
முறை தவறிப் போனதினால்
முழுதாக ஒரு தலைமுறையே
முறை தவறிப் போனதிங்கே!
என்ன செய்தால் திருந்துமென
இங்கெவற்கும் தெரியவில்லை!
ஏதும் செய்ய இயலாமல்
தவிப்பதுவே அல்லாமல்
என்ன சொல்லிப் பாடுவது?
எப்படித்தான் திருத்துவது?
இவ்விரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றினையே
தவறாமல் தேர்ந்தெடுக்க வைத்திடலே
தரணியினில் தமக்கிட்ட கட்டளை என
தமிழருமே திருந்தாமல் இருக்கின்றார்!//
28 லட்சம் தமிழர் திருந்தி விட்டனர்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் 28 லட்சம் என்பது 50 லட்சமாகும்.
2009 நாடாளுமன்ற தேர்தலில் 1 கோடியாகும்.
2011 சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சிகளுக்கு முடிவுரை எழுதும் என் தங்கத்தமிழ் நாடு.
என்ன, செல்வன், நம்ம கேபடன் மாதிரி நீங்களும் புள்ளிவிவரக் கணக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்கள்!!
அப்போ நல்ல காலம்தான் இனி!!
:))))
இது கேப்டனே கொடுத்த புள்ளிவிவரம் தான் எஸ்.கே.அவர் தான் உள்ளாட்சி தேர்தலில் 50 லட்சம் ஓட்டு வாங்க வேண்டும் என டார்கெட் போட்டு கொடுத்தார்:-))
வணக்கம் எஸ்.கே!
இந்த பதிவு முதலில் வந்த போது பிளாக்கர் சதி செய்து எனக்கு வரலை ஆனா இப்போ வருது ஆனால் காலம் கடந்து விட்டது எனக்கு முன்னரே இங்கே எல்லாம் சர்ஃப் எக்ஸ்செல் போட்டு சுத்தாம வெளுத்து வச்சு இருக்காங்க.!
எனக்கென்னமோ வி.காந்த் வர வர மாமியார் கழுதை போல் ஆகிராள் கதை ஆகிடுவார் போல் உள்ளது உங்கள் ஆறு மாத காலக்கெடுவுக்குள்.பல கட்சிகளிலும் கட்டம் கட்டி துறத்தப்பட்ட பெருச்சாளிகளின் புகலிடம் ஆகி வருகிறதே தே.மு.தி.க(தேறாத .மு.தி.க ஆகிட போகுது)
//முளைத்து 'ஒரு' இலையும் விட்டாயிற்று.
நல்ல விதை, நல்ல முளை என்றுதானே அர்த்தமாகிறது!?
நல்ல மரமாக வளரும் நாள் தொலைவில் இல்லை!//
ஒரு வித்திலை தாவரங்களில் ஆணி வேர் இருக்காது ,மரமாகாது, சல்லி வேர் மட்டுமே இருக்கும். அதுவும் ஒரு பருவ தாவரமாக இருக்கும்(ஒரே தேர்தலோட கோவிந்தா!)
அய்யா எஸ்.கே நீங்க தமிழ் நாட்டின் நாஸ்ட்ரோடாமஸ் வி,காந்த் எதிர்காலம் பற்றி மிக சூசகமாக சொல்லிவிட்டீர்களே :-))
தகவலுக்கு நன்றி, செல்வன்!
விழிப்பு வர வேண்டுவோம்!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாத்தான் வந்துருக்கீங்க, வவ்வால் அவர்களே!!
உங்களது ஆதாரமற்ற பயம் பொய்க்க வேண்டுகிறேன்!
களையெல்லாம் சீக்கிரம் எடுக்கப்படும் என நம்புவோம்!
உங்களது பல்துறை அறிவு 'புல்'அரிக்க வைக்கிறது!
[ஏதோ நானும் தாவரவியலில் பதில் சொல்லிவிட்டேன்!]
வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒரு வசனம் வரும்,
"நல்லவர்கள் நினைப்பதுதான் நடப்பதில்லையே இத்தமிழகத்தில்" என்று!
அதை மெய்யாக்குவது எனக் கங்கணம் கட்டியுள்ள உங்களைப் பாராட்டுகிறேன்!
//உங்களது பல்துறை அறிவு 'புல்'அரிக்க வைக்கிறது!
[ஏதோ நானும் தாவரவியலில் பதில் சொல்லிவிட்டேன்!]
//
அட அட!
இனி எங்கள் நண்பர் எஸ்.கே
"சிலேடைச் செம்மல்" என்றே அழைக்கப் படுவார்.
அங்கே வா.ம.கிட்ட ஒரு ரவுண்டு போயிட்டு இங்கனே வாராப்பல இருக்கு!
அடிக்கடி வர்றதும் சந்தோஷமாத்தான் இருக்கு!
சும்மா இப்படி பட்டங்களை அள்ளி வுடறிங்களே, நா.சிபி!
பேசாம, "பட்ட வள்ளல்"னு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்தறலாம்!!
-
//அங்கே வா.ம.கிட்ட ஒரு ரவுண்டு போயிட்டு இங்கனே வாராப்பல இருக்கு!//
ஆமா ! அதென்ன வா.ம?
vaa. maNikantan.
Post a Comment