வேண்டுகோள்!
வேண்டுகோள்!
அய்யா/அம்மா,
வணக்கம்.
நாளை தேர்தல் நாள்.
யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவு செய்யும் முன் ஒரு வேண்டுகோள்!
முப்பதாண்டு காலம் மாறி, மாறி ஆட்சி செய்தும், தன் நலனைத் தவிர தமிழக நலனைக் கருத்தில் கொள்ளாத,
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதீர்கள்!
வேறு எந்த வேட்பாளருக்கு வேண்டுமானலும் போடுங்கள்1!
இந்த இரு கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் போடாதீர்கள்!
உங்கள் பிள்ளகளை நினைத்து சொல்கிறேன்.
அவர்கள் உங்களை வாழ்த்தவாவது, இவ்வுதவியினைச் செய்யுங்கள்!
வீழ்வது யாராயினும்,
வாழ்வது தமிழகமாய் இருக்கட்டும்!
நன்றி!
பி.கு. இம்மடலை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் உடனே அனுப்பி வையுங்கள்! நன்றி!
8 பின்னூட்டங்கள்:
//திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதீர்கள்!
வேறு எந்த வேட்பாளருக்கு வேண்டுமானலும் போடுங்கள்1!
இந்த இரு கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் போடாதீர்கள்!
//
இவ்ளே கஷ்டப் பட்டு சொல்லுறதை
"தே.மு.தி.க வுக்கே ஓட்டு போடுங்கன்னு" சிம்பிளா சொல்லிடலாமே!
அப்படி இல்லீங்க பார்த்திபன்!
தே.மு.தி.க. வை விட, இவங்க இரண்டு கூட்டணியும் வரக்கூடாது என்பதே என் கருத்து!
ஆமா, அதை ஏன் இப்ப இழுக்குறீங்க!?
ஏதாவது உள்குத்தா !!?
:))
//இவ்ளே கஷ்டப் பட்டு சொல்லுறதை
"தே.மு.தி.க வுக்கே ஓட்டு போடுங்கன்னு" சிம்பிளா சொல்லிடலாமே! //
பார்த்திபன் கேக்குறது சரிதான எஸ்.கே!
//இவங்க இரண்டு கூட்டணியும் வரக்கூடாது என்பதே என் கருத்து!
//
தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வரக்கூடாதுன்னு சொன்னதுலயே அந்த இரண்டு கட்சிகளோட பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க, வி.சி (விட்டது சிகப்பு அல்ல விடுதலை சுறுத்தைகள்) போன்ற அனைத்து கட்சிகளுக்கும் வரக்கூடாது என்று பொருள்.
மீதம் இருக்கும் கட்சி தே.மு.தி.க தானே!
எத்தனையோ தரமான, நேர்மையான சுயேட்சை வேட்பாளர்கள், பா.ஜ.க., ஃபா.ப்ளாக்,
இவர்களும் களத்தில் இருந்தார்களே!
அதில் முக்கியமானவர்கள் தே.மு.தி.க. என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்.
ஒருவேளை வி.கா.வுக்குப் போடவேண்டாம் என்பவர்கள் இவர்களுக்குப் போடலாம் ஆனால், அந்த இரண்டு கூட்டணிகளும் வேண்டாம் என்றேன்!
ஆமா, எனக்கு இன்னும் புரியல!
இது என்ன, பசிச்சவன் பழங்கணக்கு பாத்த மாதிரி!
//எத்தனையோ தரமான, நேர்மையான சுயேட்சை வேட்பாளர்கள், பா.ஜ.க., ஃபா.ப்ளாக்,
இவர்களும் களத்தில் இருந்தார்களே!
//
இத்தனை பேர் இருக்கும்போது
நீங்க இப்படி
//இந்த இரு கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் போடாதீர்கள்!
//
பொதுவாச் சொன்னா ரசிகர்கள் குழம்பிட மாட்டாங்களா? தெளிவாச் சொல்லணுமில்ல.
இப்பத் தெளிவா சொல்லிடறேன்!
யாருக்குப் போட்டாலும்,
இந்த 'நாமக்கல் சிபி'க்கு மட்டும் போடாதீர்கள்!!!!!
போதுமா!!??
//இந்த 'நாமக்கல் சிபி'க்கு மட்டும் போடாதீர்கள்!!!!!
//
தேர்தல் முடிந்த விட்ட நிலையில் இந்த பிரச்சாரம் எந்த வகையில் உங்களுக்கு உதவும்?
அப்படின்னு இட்லி வடையிலிருந்து வந்த ஒரு நிருபர் கேட்கிறார். நான் கேட்க வில்லை.
தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நீங்கள் இதுவரையில் கேட்டது எவ்வளவுக்கு உதவுமோ, அவ்வளவுக்கு உதவும் என அவரிடம் சொல்லிவிடுங்கள்!
அப்படி இல்லாவிடின், விரைவிலேயெ வரப்போகும் தேர்தலுக்கு உதவும் எனவும் சொல்லவும்!!
Post a Comment