Friday, May 05, 2006

'தேர்தல்- 2006'

ஆராச்சும் சொல்லுங்கப்பா!


இப்படி மாத்தி, மாத்தி கடைசி நிமிடம் வரை இலவசத் திட்டங்களை அறிவிச்சுக்கிட்டே இருக்காங்களே;

இந்தத் 'தேர்தல் விதிமுறை மீறல்' அப்படீன்னுல்லாம் சொல்றாங்களே,

அதுல இது வராதா??

சீக்கிரமா சொல்லுங்கப்பா!

விட்டா, தமிழ்நாட்டையே தாரை வாத்துடுவாங்க போல இருக்கே!


'எச்சிலை தனிலே
எறியும் சோற்றுக்கு
பிச்சைக்காரர் கும்பல்
[நா]ரோட்டிலே!!

கட்சி சாதி வேணாம்! - இந்தப்
பகுத்தறிவாளரைப்
பாக்காதீங்க!-
அவுகளுக்கு
ஓட்டும் போடாதீங்க!'

6 பின்னூட்டங்கள்:

krishjapan Friday, May 05, 2006 12:31:00 PM  

////"தனித்து நிற்கும் தைரியம்" ஒன்றே எனக்கு சமாதானம்தான்.

மற்றவர்களை இதற்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு கிண்டல் பண்ண வருமாறு அழைக்கிறேன்!//

முதல்ல, இவரும் முயற்சி பண்ணினார், எதிர்பார்த்த தொகுதி கிடைக்கவில்லை என்பதால் தனித்து நிற்கிறார் என்ற வாதத்தை, ஆதாரமில்லாததால் ஒதுக்கி வைத்து ஆராய்வோமா.

இவர் யாரோடெல்லாம் கூட்டு சேர்ந்திருக்க முடியும் என்று பார்க்கலாம். பா.ம.க., வி.சிக்களுடன் கண்டிப்பாக முடியாது. காங். மத்தியில் திமுக, பாமக தயவு தேவையென்பதால் இவரோடு சேர வாய்ப்பில்லை. ஆக மூன்றாவது அணி அமைப்பது என்றால் எஞ்சியவை, பா.ஜ.க, மதிமுக, ஓட்டில்லா லெட்டர் பேட் கட்சிகள்.

ஒரெ வாக்கு வங்கி பிரச்சினையினாலும், ஒரு பலமான கூட்டணியிலிருந்து எதிர்கூட்டணிக்கு செல்வதினால் கிடைக்கக் கூடிய அதிக தொகுதி வாய்ப்பினாலும் மதிமுகவும் இவருடன் கூட்டு சேரவில்லை. பா.ஜ.க. மத்தியிலும் ஆட்சியிலில்லை, சிறுபான்மை ஒட்டயும் இழக்க வேண்டுமென்பதாலும் அக்கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. ஆக மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை.

சரி, திமுக, அதிமுக கூட்டணிக்கு சென்றிருக்கலாமே....

ஏற்கனவே ஓவர்லோடினால், தொகுதிப் பங்கீட்டினால் அல்லோகலோகப்படும் திமுக கூட்டணியில் முதலில் இவரை சீந்துவாரில்லை. வைகோ போனபின்னர், உபயோகப்படுவார் என்றெண்ணி, சீண்டினார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கிடைத்திருக்கக் கூடிய தொகுதிகள் அதிக பட்சம் போனால் 10. இந்த பக்கம், அம்மா, இருபதே கொடுத்தாலும், சென்று சேரும் நாள் மட்டுமே மதிப்பு. அதன் பின் காலடியில் வைத்தே ஒழித்துக் கட்டிவிடுவார்கள் - இன்னொரு சினிமா பிரபலத்தை வளர்த்தால் தனக்கு பின்னால் பெரும் கேடு என்பதால். இருந்தாலும், 20 கிடைக்க வாய்ப்பிருந்தது என்றே வைத்துக் கொள்ளுவோம். அவர் ஏன் அந்த பத்தையும், இந்த இருபதையும் நிராகரித்தார்ர்(!!)

இங்குதானய்யா இருக்குது அவரின் சூட்சுமம். இப்பொழுது அவர் புத்தம் புது கட்சியின் தலைவர். அவரின் பின் இருப்பது அவரின் ரசிகர்கள். அந்த ரசிகர்கள் அவரிடமிருந்து இம்முறை பெரிதாக எதயும் எதிர்பார்க்காத நேரம். அடுத்த முறை மதிமுகவினர் போன்று, நமக்கும் ஏதாவது கிடைக்க வழி செய்ய வேண்டும் கேப்டன் என நினைக்க வைக்க ஆரம்பித்து விடுவார்கள் இந்த தொண்டர்களாய் மாறியிருக்கும் ரசிகர்கள். அவர்களில் ஒரு சிலர் M.L.A. ஆக்குவது அவரது ஆசையல்ல. தான், தன் முனைப்பு ஒன்றே குறி. தனக்கு பின்னாளில் எது பலனளிக்குமோ அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆக, இதில் தைர்யம் எங்கே வந்தது. அவர் தனக்கு எது நலமானதோ அதைத்தான் செய்துள்ளார். தன் கட்சியில் தன்னைத் தவிர ஒரு பிரபலம் இருக்கலாகாது என்றிருக்கும் அவரிடம், ஜனநாயகவதியை அல்ல, சர்வாதிகாரியையே காண்கிறேன். அவர், குறைந்த பட்சம், ஒரு சில தொகுதிகளிலாவது, அத்தொகுதியில் பிரபலமாயிருக்கும் அல்லது, பொதுத் தொண்டு செய்து வரும் நல்லவர்களை ஆதரித்திருந்தாலாவது அவரின் நோக்கம் உயர்வானதென்று கருதியிருக்கலாம்.

ஆனால் ஒன்று. கார்த்திக் போன்று சினிமா அரசியல் செய்து கொண்டில்லாமல், மக்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கும் அவரின் உழைப்பைப் பாராட்டுகிறேன்.//

உங்களது சென்ற பதிவிலும் இதைப் பின்னூட்டமிட்டு பதிலை எதிர்பார்த்தேன். இராம கி அய்யா அவர்களின் பதிவில் தங்களது கருத்துக்கு நானளித்த பினூட்டத்தை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்களோ என நினைத்து, அவ்வாறு செய்தேன். நீங்கள் அதனை, கணக்கிலேயே காட்டாதது (பிரசுரிக்க இயலாது என்று கூட சொல்லியிருக்கலாம்), தாங்கள் எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது.

பார்தீர்களா, இப்படி கணக்கில் காட்டாமல் கறுப்பு, வெள்ளை என சம்பாதிக்கும் சினிமா நடிகரை ஆதரித்ததால், தாங்களும் கணக்கில் காட்டாதவராக மாறிவிட்டீர்.

oosi Friday, May 05, 2006 1:26:00 PM  

இது தானா சரியாகி விடும்னு தோணுது....இலவசத்தை கேட்டு கேட்டு வெறுத்து போய் மக்கள் நிராகரிக்க ஆரம்பிச்சிடுவாங்க...

Sivabalan Friday, May 05, 2006 1:28:00 PM  

SK,

I know what you try to say.

He will get 10-seat max. It is my guess.

VSK Friday, May 05, 2006 1:48:00 PM  

நன்றாகத்தான் அலசியிருக்கிறீர்கள், 'கிருஷ்ணா'! நன்றி.

காலூன்ற முயலும் நேரத்தில் 'சர்வாதிகாரி' என்ற பட்டம் கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லை?

வருபவர்களை மிகவும் கவனத்துடனே தெரிவு செய்கிறார் என்றே நான் கேள்விப்பட்டேன்.

மற்றபடி, வேறு யாரும் பிரபலங்கள் வரக்கூடாது என்றெல்லாம் கருதுவதாக நான் நினைக்கவில்லை.

சரத், நெப்போலியன், மற்றும் வேறு நடிக, நடிகையர் வந்திருந்தால் சேர்க்காமலா இருந்திருப்பார்?

இந்தத் தேர்தலுக்குப் பின் ஒரு சில 'நகரல்கள்'[shifts] இருக்குமென நான் நம்புகிறேன்.

இதோ, 'கணக்கில்' காட்டி விட்டேன்!!



'எங்கள் பிரான் தயவிருக்க, எது வரினும்[10 [அ] மேல்!] யாம் மகிழ்வோம்! நன்றி, 'சிவபாலன்''.


ஆனால், என் கேள்வி, சட்டப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லாததை இப்படி சொல்லிக்கொண்டே போகலாமா என்பதே! வருகைக்கு நன்றி, 'ஊசி'

krishjapan Friday, May 05, 2006 1:58:00 PM  

கணக்கில் காட்டியதற்கு நன்றி.

ராவுத்தர், லியாகத் அலிகான்,... ஓரங்கட்டல் மச்சான் வரவுக்குப் பின் என்பது கண்கூடு. கூட்டிக் கழித்துப் பாருங்கள் கணக்கு சரியாய் வரும.

VSK Friday, May 05, 2006 3:37:00 PM  

நீங்க சொல்றதெல்லாம் பெர்சனல் விஷயம் இல்லியா?

அரசியல்-ல யாரையும் தள்ளலை--இன்னும் அப்படீன்னுதான் நான் சொல்றேன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP