அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!
அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!
உலகையே உற்றுப் பார்க்கவைத்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது!
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்க்கெல்லாம் ஒரு அதிர்ச்சி தரும் தேர்தல்!
இப்படியா ஒரு தேர்தல் நடத்துவது?
கட்சி ஊர்வலங்கள் இல்லை!
சைக்கிள் பேரணி இல்லை!
ஆட்டோவில் ஒலிபெருக்கி அலற வீதி வீதியாக முழக்கங்கள் இல்லை!
சுவரெங்கும் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் இல்லை!
தெருவடைத்து பந்தல் போட்டு, வயதானவர், நோயாளிகள், படிக்கும் மாணவர்கள் இவர்கள் பற்றிய கவலையே இல்லாமல், டப்பா குத்துப் பாடல்கள் காதை கிழிக்க, அதைத் தொடர்ந்து பேச்சாளர்களின் நாராசப் பேச்சுகள் இல்லை!
கூட்டணி பேரங்கள் இல்லை!
இலவச வாக்குறுதிகள் இல்லை!
பிரியாணி பொட்டல விநியோகம் இல்லை!
நள்ளிரவில் வீடு வீடாக பணம், குத்துவிளக்கு, பிளாஸ்டிக் குடம், வேட்டி, சட்டை, புடவை லஞ்சம் இல்லை!
ஓசி சாராயம் தண்ணீராக ஓடவில்லை!
வெட்டுக்குத்து இல்லை!
சைக்கிள் பேரணி இல்லை!
ஆட்டோவில் ஒலிபெருக்கி அலற வீதி வீதியாக முழக்கங்கள் இல்லை!
சுவரெங்கும் விளம்பரங்களும், சுவரொட்டிகளும் இல்லை!
தெருவடைத்து பந்தல் போட்டு, வயதானவர், நோயாளிகள், படிக்கும் மாணவர்கள் இவர்கள் பற்றிய கவலையே இல்லாமல், டப்பா குத்துப் பாடல்கள் காதை கிழிக்க, அதைத் தொடர்ந்து பேச்சாளர்களின் நாராசப் பேச்சுகள் இல்லை!
கூட்டணி பேரங்கள் இல்லை!
இலவச வாக்குறுதிகள் இல்லை!
பிரியாணி பொட்டல விநியோகம் இல்லை!
நள்ளிரவில் வீடு வீடாக பணம், குத்துவிளக்கு, பிளாஸ்டிக் குடம், வேட்டி, சட்டை, புடவை லஞ்சம் இல்லை!
ஓசி சாராயம் தண்ணீராக ஓடவில்லை!
வெட்டுக்குத்து இல்லை!
அட, இதெல்லாம் கூட பரவாயில்லை!
வாக்கெடுப்பு நாளன்று, ........,
ஆட்டோ, கார் என வீட்டுக்கு வந்து வாக்குச் சாவடிக்குக் கூட்டிச் செல்லவில்லை.
வாக்குச்சாவடி கைப்பற்றல், சாவடிக்குள் புகுந்து மிரட்டுதல், சைக்கிள் செயின், சோடாபுட்டி, கல்லெறி இல்லை!
போலீஸ் தடியடி இல்லை!
வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை இல்லை!
சரி, அதுதான் போகட்டும்!........,
வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நான்கு மணி நேரத்தில், முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன!
தோற்றவர் வென்றவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
பின்னர் பொதுமேடையில், நான் தோற்றுவிட்டேன்! வென்றவருக்கு என் வாழ்த்துகள்! இனி அனைவரும் ஒன்றாக நாட்டு நலனைப் பற்றி சிந்திப்போம்! என அறிவிக்கிறார்!
வென்றவரும் தோற்றவரின் திறமைகளைப் பட்டியலிட்டு, அனைவர்க்கும் நன்றி தெரிவித்து மனைவியை முத்தமிடுகிறார்.
மறுநாள்.........,
அலுவல் வழக்கம்போல் இயங்குகிறது!
விலகும் அதிபர் வரப்போகும் மாற்றத்திற்கு அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக வாக்களித்துப் பாராட்டுகிறார்!
வீதிகளில் ஒரு மகத்தான சரித்திர நிகழ்வு நடந்ததற்கான அறிகுறிகளே இல்லாமல், நாடு வழக்கம்போல் இயங்குகிறது!
வென்ற கட்சியின் தொண்டர்கள் கடை கடையாய் ஏறி, 'இனி எங்க ஆட்சிதான்! நம்மளை நல்லா கவனிக்கணும் இனிமே!' என அச்சுறுத்தவில்லை!
வீதிகளில் ஒரு மகத்தான சரித்திர நிகழ்வு நடந்ததற்கான அறிகுறிகளே இல்லாமல், நாடு வழக்கம்போல் இயங்குகிறது!
வென்ற கட்சியின் தொண்டர்கள் கடை கடையாய் ஏறி, 'இனி எங்க ஆட்சிதான்! நம்மளை நல்லா கவனிக்கணும் இனிமே!' என அச்சுறுத்தவில்லை!
அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!
என்னய்யா நடக்குது இங்கே!
நம்ம ஊருக்கு வந்த நாம நடத்துற தேர்தலெல்லாம் பார்த்ததில்லியா இவங்க!
அதான், அவரவரும் துணிச்சலா கிண்டல் பண்றாங்க!
அதான், அவரவரும் துணிச்சலா கிண்டல் பண்றாங்க!
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கு வாழ்த்துகள்!
வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!
வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!
28 பின்னூட்டங்கள்:
அங்க மாதிரி ஆம்பளையும் ஆம்பளையும் கல்யாணம் பண்ண முடியல, பொம்பளையும் , பொம்பளையுஞ் சேர்ந்து குடும்பம் நடத்த முடியல . வருசத்துக்கு நாலு கல்யாணம் , நாலு பொண்டாட்டி,
எட்டு புருசன்னு வாழ முடியல.கட்டுன உடனே கழட்டிவிட முடியல.
என்னய்யா ஊரு நம்ம ஊரு.
நேர்மையான தேர்தல் நடத்த முடியாத இந்தியா, இப்படி சொல்லித்தான் ஆறுதல் பெற வேண்டும்!
நீங்கள் சொல்லியது சரிதான் ஒரிஜினல் மனிதரே!:))
இதுக்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்க வேண்டியதுதானே!
ஒரிஜின மனிதன், உங்களை மாதிரி ஆளுங்களைதான், நான் இப்பெல்லாம், லகுடபாண்டியரேன்னு கூப்பிட ஆரம்பிச்சிருக்கேன்.
எல்லாத்துலயும் குத்தம் படிக்கரதே பொழப்புய்யா. ;)
//வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை இல்லை!//
இது தான் ஹைலைட்!
நம்ம ஆளுங்க மனசில ஒண்ணு வச்சிக்கிட்டு வெளிய ஒண்ணு பேசாம, மனசுல பட்டத அப்படியே சொல்லுறாங்க. நல்ல விஷயம்தானே?
லகுட பாண்டியர்.... ம்ம்ம்....நல்ல பெயராத்தான் இருக்கு!:)
//வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை இல்லை!//
இது தான் ஹைலைட்!//
இதுவும் ஹைலைட் தான் நண்பர் சிவமுருகன்!
//நம்ம ஆளுங்க மனசில ஒண்ணு வச்சிக்கிட்டு வெளிய ஒண்ணு பேசாம, மனசுல பட்டத அப்படியே சொல்லுறாங்க. நல்ல விஷயம்தானே?//
நீங்க ஜோக்கா சொன்னீங்களோ, இல்லை, சீரியஸா சொன்னீங்களோ தெரியாது, சரவணகுமரன்!
ஆனா, இந்த அவலத்தை இப்படியும் நியாயப் படுத்த முடியும்னு நான் தெரிஞ்சுகிட்டேன்!
நன்றி!
////அட! என்னப்பா தேர்தல் இது... உப்புசப்பில்லாம!/////
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்!
வெட்கப்பட முடியவில்லை. மரத்துப்போய்விட்டது:-))))
//அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கு வாழ்த்துகள்!
//
மெக்கைன் பாணி வாழ்த்துகள் தானே ? :)
//நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்!
வெட்கப்பட முடியவில்லை. மரத்துப்போய்விட்டது:-))))//
அப்படிச் சொல்லாதீங்க ஆசானே!
எதுனாச்சும் செய்யணும்!
//மெக்கைன் பாணி வாழ்த்துகள் தானே ? :)//
மெக்கைய்ன் பேச்சைக் கேட்டீங்கதானே!
மேலும், அமெரிக்க ஜனநாயகம், தம்மிழகம் மாதிரி ஒரு தலைவனை வைத்து இல்லாமல், கட்சி அடிப்படையில் இயங்குகிறது.
இன்று நடந்த சில ரேடியோ நிகழ்ச்சிகளில், அவரது கட்சி ஆட்களே, அவர் செய்த தவறுகளை புட்டு புட்டு வைத்ததைக் கேட்டிருந்தால் நிலைமை புரியும் உங்களூக்கு!
என்ன செய்வது?
நாம்தான், நம் சூழலில் ஊறிப் போய்விட்டோமே~!
ஏதோ புரட்சி வந்துதான் எல்லாம் சரியாகணும். ஜனநாயகம் படிச்சவங்க நிறைய இருக்கிற நாடுகளுக்கு. பாடிப்பை மதிக்காத நமக்கு இல்ல.
ஏங்க நீங்க வேற......நானும் முந்தாநாள் ஓட்டுப்போட்டுட்டு ஒன்னும் ஆகலைன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்...
அமெரிக்காவுலே அட்லீஸ்ட் அந்தந்தக் கட்சி ஸ்டேடியத்துலே கூட்டமெல்லாம் போட்டுச்சு. இங்கே அதுக்கும் வழி இல்லை(-:
எப்பத்தான் இவுங்களுக்கு (நம்ம) நாகரீகம் தெரியப்போவுதோ?
//ஆனா, இந்த அவலத்தை இப்படியும் நியாயப் படுத்த முடியும்னு நான் தெரிஞ்சுகிட்டேன்!//
போன தடவை நடந்த தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிளைப பார்த்து உலகமே அமெரிக்காவைக் காரித் துப்பியது. இன்னும் அங்கே அந்த முறைகள் மாற்றப்படாமலேயேதானே இருக்கிறது.
ஆக நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லதாகவே நடக்கும். இந்தியாவைப் போன்றே அமெரிக்காவிலும் மாற்றம் தேவை இல்லையா?
ஆக, படிப்புதான் முக்கியம்னு சொல்ல வரீங்க, இல்லியா திவா!
ஒத்துக்கறேன்!
//எப்பத்தான் இவுங்களுக்கு (நம்ம) நாகரீகம் தெரியப்போவுதோ?//
அதான் என் கவலையும் டீச்சர்!
என்ன நாகரீகம் வந்தா என்ன?
நம்மளை பீட் பண்ண முடியுமா?
:)))
// இந்தியாவைப் போன்றே அமெரிக்காவிலும் மாற்றம் தேவை இல்லையா?//
இந்தியாவில் என்ன மாற்றம்னு கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்களேன் திரு. சுலதான்!
நான் தோற்றுவிட்டேன்! வென்றவருக்கு என் வாழ்த்துகள்! இனி அனைவரும் ஒன்றாக நாட்டு நலனைப் பற்றி சிந்திப்போம்! என அறிவிக்கிறார்!
இது தான் எனக்கு மிகவும் பிடித்திருந்த செயல்.
:))
பதிவு அருமை! பின்னூட்டங்களும்!
//இந்தியாவில் என்ன மாற்றம்னு கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்களேன் திரு. சுலதான்!//
கேப்டன் அரசியலுக்கு வந்ததைப் பத்தி சொல்றாரோ என்னவோ?
//இந்தியாவில் என்ன மாற்றம்னு கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்களேன்//
டாக்டர். குழப்பிட்டேனோ?
//இந்தியாவைப் போன்றே அமெரிக்காவிலும் மாற்றம் தேவை இல்லையா?//
இந்தியாவில்(தமிழ்நாட்டில்) தேர்தல் நடத்தைகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் தேவை என்பதைப் போலவே அமெரிக்காவின் தேர்தல் நடத்தைகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் தேவை இல்லையா?
இப்படி சொல்ல வந்ததுதான் - அப்படி புரிதலைத் தந்து விட்டது.
நாமக்கல் சிபி - சரிதானுங்களா.
//இது தான் எனக்கு மிகவும் பிடித்திருந்த செயல்.//
அரசியல் நாகரீகம் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கு, திரு. குமார்!
////:))
நாமக்கல் சிபி said...
:))
பதிவு அருமை! பின்னூட்டங்களும்!//
இப்படி நீங்க ரெண்டுபேரும் சிரிக்கும்படியா ஆயிருச்சு, கொத்ஸ், சிபியாரே!:))
//கேப்டன் அரசியலுக்கு வந்ததைப் பத்தி சொல்றாரோ என்னவோ?//
இங்ககூட ரீகன் வந்தாரே சிபியாரே!
//இந்தியாவில்(தமிழ்நாட்டில்) தேர்தல் நடத்தைகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் தேவை என்பதைப் போலவே அமெரிக்காவின் தேர்தல் நடத்தைகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் தேவை இல்லையா?
இப்படி சொல்ல வந்ததுதான் - அப்படி புரிதலைத் தந்து விட்டது.
நாமக்கல் சிபி - சரிதானுங்களா//
270 என்கிற மந்திர எண்ணிக்கை வரும் வரைதான் அத்தனையும்.
இந்தமுறை, அது வெகு விரைவிலேயே கிட்டியதால், கலிஃபோஓர்னியாவில் வாக்குப்பதிவு முடிந்த அரை மனிக்குள், முடிவு வந்ததே, பார்க்கலீங்களா நண்பரே!
//270 என்கிற மந்திர எண்ணிக்கை வரும் வரைதான் அத்தனையும்//
மந்திர எண்ணிக்கை வராவிட்டால் தந்திரத்தால் வெல்லலாம் என்பதும் தவறுதானே டாக்டர்.
//மந்திர எண்ணிக்கை வராவிட்டால் தந்திரத்தால் வெல்லலாம் என்பதும் தவறுதானே டாக்டர்.//
தவறுதான்.
இது ஒன்றும் தவறே நிகழாத நாடு என நான் சொல்லவில்லையே நண்பரே!
அப்படிப் பார்த்தால் எங்குதான் தவறு நிகழவில்லை?
தேர்தலே நடத்தாத நாடுகளுக்கு நடுவில், குறைந்தபட்சத் தவறு நிகழும் நாடு சொர்க்கபுரிதானே!
Post a Comment