Wednesday, July 04, 2007

"கலங்க வைத்த காவல்காரர்"


"கலங்க வைத்த காவல்காரர்"

இன்று ஜூலை 4 - ம் தேதி

அமெரிக்க சுதந்திர தினம்.

காலை 4 மணிக்கே எழுந்து, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என் 75 வயது அக்காவையும், 78 வயது அத்தானையும் டெக்ஸாஸ் அனுப்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தேன்.

என் மனைவியையும் உடனழைத்துச் சேன்றேன், கடைசி நேர முடிவாக!

விமான நிலையத்தில் வழக்கமான கெடுபிடிகள்.

காரை நிறுத்தியதும், கீழிறங்கி, அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம், "ஒரு 5 நிமிடங்கள் இந்த வயதான தம்பதியரை உள்ளழைத்துச் சென்று, விட்டு வரலாமா?" என் பணிவுடன் கேட்டேன்.

அப்போது அவர் ஒரு ஆளில்லா காரின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து, சற்று கடுப்பாக, "இங்கு நிறுத்தக் கூடாது. காரை எடுங்க!" என்றார்.

நானும் சற்று ஏளனமாக அந்த ஆளில்லாக் காரைக் காட்டினேன்.

"ஆம்! அதற்கு ஒரு டிக்கட் கொடுக்கப் போகிறேன். உனக்கும் வேண்டுமா?" என்றார் அவர்!

எனக்குச் சற்று கோபம் வந்தது.

"நிறுத்தக்கூடாது என்றதும் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்து 'டிக்கட் தரட்டுமா?' எனக் கேட்பது சற்று அதிகமாய் இருக்கு! இது முறையல்ல! எனச் சொன்னேன்.

அதற்கு அவரும் கோபமாக, "இங்கு நின்றுகொண்டு வாதம் செய்தால் அதுதான் கிடைக்கும்" எனச் சொல்ல, நான் அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, என் மனைவியை இறங்கச் சொல்லி என் உறவினருடன் அனுப்பி, அவர்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, காரை விருட்டென ஓட்டி ஒரு வலம் வந்தேன், விமானநிலையத்தை.

இன்னமும் என் மனைவி வெளியில் வரவில்லை.

அதே போலீஸ்காரர் தன் டார்ச் லைட்டைக் காட்டி என்னை புறப்படச் சொல்ல, என் மனதில் வேகம் அதிகரித்தது.

இந்த முறை ஒரு பெரிய வட்டமடித்து வந்தேன்!

அப்போது மனதில் ஒரு எண்ணம்.

அவர் தன் கடமையைச் செய்கிறார்.

நான் தான் அவரிடம் முறையின்றி நடந்திருக்கிறேன்.

இப்போது கோபம் கூட படுகிறேன்.

திரும்ப அங்கு செல்லும் போது, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு எண்ணியவாறு, மீண்டும் வெளிவாயிலுக்கு வந்தேன்.

இன்னமும் என் மனைவி வரவில்லை.

சரி, அவரிடம் பேச்சு கேட்க வேண்டாம் என நினைத்து, காரைக் கிளப்ப ஆரம்பிக்கையில், என் பக்க கண்ணாடியை யாரோ தட்டுவதை உணர்ந்து, பார்க்க,.... மீண்டும் அதே காவல்காரர்!

என் மனதில் ஒரு உதறல்!

சரி, என்னைப் புள்ளி வைத்துவிட்டார், ஏதோ ஒரு டிக்கெட் நிச்சயம்! என நினைத்து, சற்று பயத்துடனேயே கண்ணாடியை இறக்கினேன்.

"நான் சற்று அதிகக் கடுமையாகப் பேசிவிட்டேன். நீங்க நல்லவராயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு ஒரு தவறான கார் போதும், பிரச்சினையைக் கிளப்ப. இருந்தாலும் நான் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக் கூடாது.என்னை மன்னிக்கவும்." என்றார் அந்தக் காவல்காரர்.

எனக்கு வார்த்தையே வரவில்லை.

நாத்தழுதழுக்க, "நான் செய்ததுதான் தவறென உங்களீடம் நான் மன்னிப்பு கேட்க இருந்தேன். உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்களும் என்னை மன்னிக்கவும்." என்றேன்.

"இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும்" எனச் சொல்லி அகன்றார் அவர்.

என் மனதில் பாரம்.

அவரது பண்பையும், அதை அவருக்கு அளித்த இந்த நாட்டின் மாண்பையும் எண்ணி வியந்தவாறே, மீண்டும் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.

இப்போது என் மனைவி காத்திருந்தார்.

காரில் அவர் ஏறியதும் இன்னொரு ஆச்சரியம்.

எங்கிருந்தோ அந்தக் காவல்காரர் அங்கு தோன்றி, வருகின்ற கார்களை நிறுத்தி, என் காரை வெளியே செல்ல கை காட்டி, சிரித்த வண்ணம் அனுப்பி வைத்தார்!

பெருமையுடனும், பெருமிதத்துடனும் நான் என் மனைவியிடம் நடந்த நிகழ்வைச் சொல்லியபடியே வீடு திரும்பினேன்.

அமெரிக்கா! ஓ அமெரிக்கா!!

உன் சுதந்திரம் உலகெங்கும் பரவுக!


31 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Wednesday, July 04, 2007 7:43:00 PM  

எஸ்.கே. இன்றைக்கு அவர்களின் விடுதலை நாள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த வேகத்தில் தான் அவர் அப்படி பேசியிருப்பார். அப்புறம் அதனை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். நல்ல மனிதர்.

இப்படி ஒரு நல்ல மனிதரை பெங்களூர் விமான நிலையத்தில் இந்த முறை சென்ற போது பார்த்தேன். குடியேற்ற அதிகாரியிடம் முத்திரை பெற்று தானே விமானம் ஏறமுடியும். வரிசையிலும் அதிக கூட்டம் இல்லை. ஆனால் கைக்குழந்தையுடன் என் மாமியார் நிற்பதைப் பார்த்து பெட்டியில் அமர்ந்திருந்த ஒரு அதிகாரி வந்து என்னை மட்டும் வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டு மற்ற எல்லாரையும் அழைத்துக் கொண்டு அவர் பக்கத்தில் இருந்த நீள்சதுர நாற்காலியில் உட்காரச் சொன்னார். எனக்கோ மிக வியப்பு. இப்படியெல்லாம் செய்ய நம்மவர்க்குத் தோன்றுகிறதே என்று. என் முறை வந்த போது வழக்கம் போல் எல்லா கேள்விகளும் கேட்டுவிட்டு 'உங்கள் பயணம் நன்கு அமையட்டும்' என்று வாழ்த்தியும் அனுப்பினார் அந்த அதிகாரி. அவர் எல்லோரையும் அப்படி வாழ்த்துவதைக் கேட்டேன். மகிழ்ந்தேன்.

இலவசக்கொத்தனார் Wednesday, July 04, 2007 7:46:00 PM  

ரெண்டு பேரும் சேர்ந்து சண்டையும் போடவேண்டாம் சமாதானமும் ஆக வேண்டாம். என்ன ஆட்களோ என முதலில் எண்ண வந்தாலும், பொதுவாக காவல்துறையினரின் நடவடிக்கையை நினைக்கும் பொழுது அவர் செய்தது ரொம்ப நல்ல விஷயம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்று இருக்கும் கெடுபிடிகளில் (லண்டன் சம்பவங்கள் காரணமாக) நீங்கள் செய்ய நினைத்தது எல்லாம் செய்யக் கூடாது. அம்புட்டுதான்.

VSK Wednesday, July 04, 2007 8:01:00 PM  

நல்ல மனது தான் வேண்டும் என்பதற்கு நீங்கள் சொன்ன உதாரணமே சாட்சி, குமரன்!

VSK Wednesday, July 04, 2007 8:03:00 PM  

அதான் நானே உணர்ந்து மன்னிப்பு கேட்க தயாரா இருந்தேன் எனச் சொல்லியிருக்கேன்ல!

அவர் முந்திக்கிட்டார்!

இன்னுமா கலாய்ப்பு!!
பண்ணுங்க கொத்ஸ்!

வடுவூர் குமார் Wednesday, July 04, 2007 8:35:00 PM  

இதையே நீங்கள் முதலில் சொல்லியிருந்தால் அதற்குப்பிறகு அவரும் இப்படித்தான் வருத்தப்பட்டிருப்பார்.
என்ன இருந்தாலும் நாம் முதலில் கேட்கவில்லையே என்ற நெருடல் கொஞ்ச நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

VSK Wednesday, July 04, 2007 9:51:00 PM  

அவர் கை கொடுத்தபோது எனக்கும் இதேதான் தோன்றியது இளா அவர்களே1

VSK Wednesday, July 04, 2007 10:01:00 PM  

அவர் இதில் முந்தியதுதான் பெரிய ஆச்சரியம், திரு. குமார்.

VSK Wednesday, July 04, 2007 10:02:00 PM  

நல்ல பதிவெனச் சொல்லியதற்கு நன்றி, கோவியாரே!

jeevagv Thursday, July 05, 2007 8:23:00 PM  

முதலில் விட்டுக் கொடுப்பவரே
முன்னவர் மூத்தவர்
பாரம் தன்னை இறக்கி
இன்னொருவர் மனதை
நெகிழ்த்தியவர்...
ஒவ்வொரு நாளும் அவராக
நாம் இருக்க
முருகனருள்
முன்னிற்கட்டும்!

மிக்க நன்றி!

VSK Thursday, July 05, 2007 9:55:00 PM  

ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும்
அப்படி நடக்க முயற்சித்தால்
உலகில் பகையேது?

அன்பே மலரும்.

முருகனருள் முன்னிற்கட்டும்!

நன்றி, திரு.ஜீவா.

நந்தா Friday, July 06, 2007 12:19:00 AM  

வெகு நிச்சயமாய் அந்த போலிஸ் அதிகாரியின் செயல் பாராட்டுதலிற்குரியதே. தவறுகளை மறந்து மன்னிப்பு கேட்கும் குணம் போற்றுதலிற்குரியது.

ஆனால் இது ஒரு தனிப்பட்ட நல்ல மனிதரின் செயலாகத்தான் தோன்றுகிறது.

//அதை அவருக்கு அளித்த இந்த நாட்டின் மாண்பையும் ....

அமெரிக்கா! ஓ அமெரிக்கா!!

உன் சுதந்திரம் உலகெங்கும் பரவுக! //

இதை என்னால் 0.1% ஏற்றுக் கொள்ள முடியாது. இது எனது கருத்து அவ்வளவுதான்.

VSK Friday, July 06, 2007 1:06:00 AM  

//இது எனது கருத்து அவ்வளவுதான்//

நீரளவே ஆகுமாம் நீராம்பல் என ஒரு தமிழ்ச் செய்யுள் உண்டு நண்பரே!

ஒரு மனிதனின் செயல் ஒரு நாட்டினைப் பிரதிபலித்ததாக நான் நம்புகிறேன்.

இதுவும் எனது கருத்துதான்!

VSK Friday, July 06, 2007 8:33:00 AM  

யாரையும் புகழ்வதற்காகவோ, காயப்படுத்தவோ நான் இந்தப் பதிவை எழுதவில்லை.

நான் அனுபவித்த ஒரு நிகழ்வைப் பதித்தேன்.

அதன் மூலம், அந்த காவல்காரரின் மனிதத் தன்மை, அவர் சார்ந்த நாட்டின் பாங்கு என நான் உணர்ந்ததைச் சொன்னேன்

அவ்வளவே.

நீங்கள் எழுதிய பின்னூட்டம் அனைவராலும் படிக்க முடியாத ஒன்று என்பதால், அதை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன், அனானியாரே!

தங்கள் கருத்துக்கு நன்றி.

Boston Bala Friday, July 06, 2007 2:30:00 PM  

படித்தேன்... ரசித்தேன்... நன்றி :)

சட்னிவடை Friday, July 06, 2007 8:51:00 PM  

அமெரிக்க அடிவருடித்தனம்!
ஆன்மீக பெரியவர் கைத்தடி வியெஸ்கே அவர்கள் அமெரிக்காவுக்கு அடிவருடி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதனைப் படிக்க படிக்க எனக்கு கண்ட கண்ட இடங்களில் எல்லாம் வேர்த்து வடிந்தது! அடப் பாவிகளா! இப்படியுமா மனித மிருகங்கள்? சொல்லவே எனக்கு நாக்கூசுகிறது! அங்கே அவர் சொல்கிறார்,பெருமையுடனும், பெருமிதத்துடனும் நான் என் மனைவியிடம் நடந்த நிகழ்வைச் சொல்லியபடியே வீடு திரும்பினேன். அமெரிக்கா! ஓ அமெரிக்கா!!உன் சுதந்திரம் உலகெங்கும் பரவுக!


வியட்நாமிய போரில் மக்கள் பட்ட கஷ்டங்களை மறந்து விட்டாரா இவர்? இவர் ஏன் மனம் கஷ்டப்படப் போகிறார்? வியட்நாமியர்கள் பார்ப்பனர்கள் இல்லை. ஒருவேளை இஸ்ரவேல் காரர்கள் கஸ்டப்பட்டால் மனம் வருந்தி இருப்பாரோ? பச்சைக் குழந்தைகள் என்றும் பாராமல் சின்ன மொட்டுக்களை ஆடையை அவிழ்த்து விட்டு நடுரோட்டில் துரத்தித் துரத்தி... அடச்சே சொல்லவே நாக்கூசுகிறது!வீட்டுக்கு வீடு எல்லா மக்களும் அமெரிக்க அரக்கனுக்கு எதிராக போரில் குதித்து பதுங்கு குழிகள் அமைத்து கொரில்லா போர் இட்டனர். அதனைப் பார்த்து தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்க மிருக அரசு வெறி பிடித்து சொந்த நாட்டுக்கு ஓடியதை மறந்து விட்டாரா சங்கர் குமார்?ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை அழித்து நாட்டைப் பிடித்தது மக்களைக் காக்கவா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அங்கே இருக்கும் ஒசாமாவைப் பிடிக்கவும் அவனது படைகளை ஒழிக்கவும் மட்டுமே! இன்றளவும் நாளைக்கு பத்து பேராக அமெரிக்க வீரர்கள் அங்கே செத்துக் கொண்டிருப்பது சங்கர் குமாருக்கு தெரியுமா? முன்னொரு காலத்தில் அமெரிக்காவுக்கு மிக நெருக்கமாக ஒசாமா இருந்தான், பின்னாளில் எதிரியானான். ஏன் ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரி ஆனான் என்று தெரியுமா எஸ்கேவுக்கு?

ஈராக்கிய எண்ணெய் வளத்தை கைப்பற்ற நினைத்து, அதற்கு துணை போகாத சதாமை ஒழித்துக் கட்ட நினைத்து போர் தொடுத்தான் அமெரிக்க அரக்கன். நாட்டையே கைப்பற்றி, ஒட்டுமொத்த எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் குடித்த பின்னரும் அப்பாவி ஏழைச் சிறுமிகளை அவர்கள் பெற்றோர் முன்பே பெண்டாண்டு, பிறகு குடும்பத்தோடு கொலையும் செய்தனர். அந்த கொடிய கயவன் சபீபத்தில் ஆயுள் தண்டனை பெற்றான். அதாவது தெரியுமா சங்கர் குமாருக்கு?ஈராக்கிய படைவீரர்களையும் அப்பாவி பொதுமக்களையும் ஆடையின்றி அம்மணமாக விட்டு கொஞ்சுகளில் துப்பாக்கியை விட்டு விளையாடினார்களே அமெரிக்க பெண்வீரர்கள்? அது தெரியாதா எஸ்கேவுக்கு? இதுவரை எத்தனை ஆயிரம் அமெரிக்க வீரர்களும் எத்தனை ஆயிரம் பிரிட்டீஷ் படையினரும் கோடிக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் செத்தார்கள் என்றாவது தெரியுமா சங்கர் குமாருக்கு?அடுத்து ஈரானிலும் வடகொரியாவிலும் வயசுக்கு வந்த மற்றும் வராத நிறைய சிறுமிகள் இருக்கிறார்கள் சங்கர் குமார் அவர்களே. பெற்றோர் கண்முன் அங்கும் உங்கள் அமெரிக்காவின் படைகளை அனுப்பி வைத்து கற்பழிக்கச் சொல்லுங்கள். அங்கே உங்கள் ஜாதியைச் சேர்ந்த யாருமில்லை. உங்கள் சொந்த பந்தங்கள் யாருமில்லை. எவன் குடி கெட்டா உங்களுக்கென்ன? மாதாமாதம் டாண் டாண்ணு கைநிறைய சம்பளம் அள்ளிக் கொடுக்கும் அமெரிக்க அரசு வாழ்க என்று பேஷா கோஷம் போடுங்க!

Unknown Saturday, July 07, 2007 6:51:00 AM  

சில நேரங்களில் இது மாதிரி நிகழும்போது 'இது போன்ற நல்லவர்கள் இன்னும் இருப்பதால்தான் உலகம் வாழ்கிறது' என்ற பாட்டி சொற்கள் நினைவுக்கு வருகிறது.

கடந்த வியாழன் இரவு mbc action TVயில் worlds amazing..... இதே போன்ற ஒரு சாலை நிகழ்வைக் காண்பித்ததார்கள். அதுவும் அமெரிக்காவில் நடந்ததுதான்.

சமீபத்தில் என் குடும்பத்தார் விஷாவுக்காக, வரிசையில் நின்ற போது, (எப்போதும் போல் இல்லாமல்)அங்கு அலுவலில் இருந்த ஒரு அரபியின் அபரிதமான உதவியும், அன்பான பேச்சும் மனதில் நிற்கிறது.

(என்னையும் சேர்த்து) எல்லோரும் இப்படி ஆகிவிட்டால் உலகம் எவ்வளவு அழகான இடமாயிருக்கும்!.

VSK Saturday, July 07, 2007 11:36:00 AM  

நான் எழுத வந்த பொருள் எது எனக்குட்ட புரிந்துகொள்ள மனமில்லாமல், மனம்போனபடி சேற்றை வாரி இறைத்திருக்கும் அன்பர் 'சட்னிவடை'யின் பின்னுட்டத்திற்கு, இதனைச் சரியாகப் புரிந்துகொண்டு, இதேபோல தனக்கு நிகழ்ந்த ஒரு வேறு நாட்டு அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொண்ட என் இனிய நண்பர் திரு. சுல்தான் அவர்களின் பின்னுட்டமே சரியான பதில் என்பதால் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VSK Saturday, July 07, 2007 11:37:00 AM  

திரு. நந்தா வின் பின்னூட்டத்துக்கு பதிலளிக்கையில், அனானி என தவறாக எழுதியமைக்கு எனது வருத்தங்களை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

VSK Saturday, July 07, 2007 11:38:00 AM  

மிக்க நன்றி, திரு. பா.பா.!

Anonymous,  Saturday, July 07, 2007 11:53:00 AM  

//ஒரு மனிதனின் செயல் ஒரு நாட்டினைப் பிரதிபலித்ததாக நான் நம்புகிறேன்.
//

உங்களுக்கு அப்படி நம்புவதற்கு எந்த வித உரிமையும் இல்லை பெரியவரே. ஆனால் ஒரு மனிதனின் கருத்து அவன் பிறந்த ஜாதியைப் பிரதிபலிப்பதாக நம்பி அதைக் கொண்டு அடிவருடி, கைத்தடி, கூட்டிக் கொடுப்பது என்றெல்லாம் கண்டபடி பேசுவதற்கு மட்டும் சிலருக்கு உரிமை உண்டு. நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது. நீரளவே ஆகுமாம் நீராம்பல், கற்றாரைக் கற்றாரே காமுறுவார், போன்ற முதுமொழிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

பெயர் சொல்ல விரும்பாத ஒருவன்.

VSK Saturday, July 07, 2007 2:17:00 PM  

மிகச் சரியாகச் சொன்னீர்கள், 'பெயர் சொல்ல விரும்பாத ஒருவரே!'

கூடவே "பல கற்றும் கல்லாதார்" , "முகத்தில் இரண்டு புண்ணுடையார்" "நீட்டா நின்றான் நெடுமரம்" இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்!
:))

VSK Saturday, July 07, 2007 4:23:00 PM  

பெயர் சொல்ல விரும்பாத வேறு இரு அனானிகள்[அல்லது ஒரே அனானி??] அனுப்பியிருக்கும் பின்னூட்டங்கள் பதிவைத் திசை திருப்பும் வண்ணம் அமைந்திருப்பதால், அவற்றைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

நன்றி.

Anonymous,  Saturday, July 07, 2007 10:59:00 PM  

//பெயர் சொல்ல விரும்பாத வேறு இரு அனானிகள்[அல்லது ஒரே அனானி??] அனுப்பியிருக்கும் பின்னூட்டங்கள் பதிவைத் திசை திருப்பும் வண்ணம் அமைந்திருப்பதால், அவற்றைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

நன்றி. //

இது அப்பட்டமான புளுகு, பதில் சொல்ல முடியாத பின்னூட்டங்களாக அவை இருப்பதால் அதை திசைதிருப்பி திசைத்திருப்பும் பின்னூட்டம் என்று சொன்னதற்கு கண்டனம். படிப்பவர்கள் தான் அதை திசைத்திருப்பும் பின்னூட்டமா ? என்று சொல்ல வேண்டும். பதிவை போடும் உரிமை இருக்கும் தாங்கள், அருவிருப்பு இன்று வரும் பின்னூட்டங்களை தாங்கள் அனுமதித்திருக்க வேண்டும். உங்களின் தகாத செயலால் நீங்கள் ஒரு நேர்மையற்றவராக புரிந்து கொண்டேன்.

நன்றி


தனிமனித செயல் ஒரு நாட்டை பிரதிபலிப்பத்தாக சொல்லும் தாங்கள் கருத்தும், 'ஆனால் ஒரு மனிதனின் கருத்து அவன் பிறந்த ஜாதியைப் பிரதிபலிப்பதாக நம்பி அதைக் கொண்டு' என்ற அனானியின் கருத்தும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது. அதற்கு நீங்கள் ஜால்ரா அடித்து இருப்பதிலிருந்தே உங்களுக்கு ஆதராவாக பேசி உங்கள் கருத்தை மறைமுகமாக மறுத்தால் உங்களுக்கு தெரியாதுபோலும்.

சொல்லும் கருத்திலாவது நிலைபாட்டைக் கொள்ளுங்கள்.

- பெயர் வெளி இடவிரும்பாத வேறு ஒரு (அதே) அனானி

VSK Sunday, July 08, 2007 12:50:00 AM  

மிக்க நன்றி, "அ.பே.சொ.வி. அனானி.

Anonymous,  Wednesday, July 11, 2007 6:19:00 AM  

வளமான நாட்டில் மட்டுமே வளமான சிந்தனைகள் தோன்றும் என்றில்லாமல், நல்ல இதயம் எங்கோ அங்கே நல்ல சிந்தனைகளும் செயலாக்கமும் தோன்றும் என்று எனக்கு தோன்று(?)கிறது...

:)))

வாழ்க அந்த காவல்காரர்...இங்கேயும் அதுபோன்ற நிகழ்வுகள் பலவுண்டு....

VSK Wednesday, July 11, 2007 1:02:00 PM  

உங்கள் கருத்தை அப்படியே ஒப்புக்கொள்கிறேன், திரு. ரவி.

இது நடந்த தினம் அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் அந்தக் கடைசி வரிகள்!
:))

திரு. சுல்தான் கூட அரேபிய நாட்டில் நிகழ்ந்த ஒருநிகழ்வைச் சொல்லியிருந்தாரே!

நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள்.

அதே சமயம், நாட்டின் வளமும், சில வகைகளில் உதவுகிறது எனவும் கருதுகிறேன்.

VSK Wednesday, July 11, 2007 1:02:00 PM  

உங்கள் கருத்தை அப்படியே ஒப்புக்கொள்கிறேன், திரு. ரவி.

இது நடந்த தினம் அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் அந்தக் கடைசி வரிகள்!
:))

திரு. சுல்தான் கூட அரேபிய நாட்டில் நிகழ்ந்த ஒருநிகழ்வைச் சொல்லியிருந்தாரே!

நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள்.

அதே சமயம், நாட்டின் வளமும், சில வகைகளில் உதவுகிறது எனவும் கருதுகிறேன்.

திருவடியான் Thursday, July 12, 2007 5:55:00 AM  

அமெரிக்காவில் மட்டுமா, எல்லா நாட்டிலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு நல்லவர் இருப்பதற்காக, அதுவும் எஸ்கேவிற்கு உதவி செய்த அந்த போலீஸ்காரருக்காக அமெரிக்காவே மிகச்சிறந்த நல்ல நாடாகிவிடும் என்றால், ஏதோ ஓரிருவர் செய்யும் தவற்றிற்காக ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தையோ, இனத்தையோ, மதத்தையோ, நாட்டையோ குறைசொல்கிறார்களே, அது மட்டும் சரியா?

VSK Thursday, July 12, 2007 3:43:00 PM  

முதலவதாக, அவர் எனக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை. முதலில் கடுமையாக நடந்து கொண்டவர், சற்று நேரத்தில், தானகவே வந்து வருத்தம் தெரிவித்த மனிதப் பண்பையே போற்றியிருக்கிறேன், இந்தப் பதிவில்.

இரண்டாவதாக, அன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால், அதனைக் குறிக்கும் வகையில், அந்தக்கடைசி வரிகளை அமைத்தேன்.

மூன்றாவதாக, இது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல; இந்நாட்டில் இருந்த பல ஆண்டுகளில், பொதுவாகக் காணப்படும் ஒரு மாண்பென்பதால் இப்போது எழுதினேன்.

இதன் மூலம், மற்ற நாடுகளில் இல்லையென்றோ, இங்கு மட்டும் தான் இருக்கிறது எனவோ சொல்ல இப்பதிவை நான் எழுதவில்லை. நண்பர்கள் குமரன், சுல்தான், செந்தழல் ரவியின் பின்னூட்டங்களைப் பார்க்கவும்.

கடைசியாக, ஓரிருவர் தவறு செய்தாலும், ஒட்டு மொத்த சமுதாயம், இனம், மதம், அல்லது நாடு, அதனைக் கண்டிக்காமல், மௌனமாகவோ, ஆதரவாகவோ நடக்கையில், அவைகளும் குறையாகிப் போதல் தவிர்க்க முடியாமல் போகிறது.

இது சரியா, தவறா என்பதை பாதிக்கப்பட்டவர் கண்ணோட்டத்திற்கே விடுகிறேன்.

விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கும் வண்ணம் ஒரு கேள்விப்பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, திரு. திருவடியான்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP