மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!
மன்மோஹன்சிங் மனம் வெதும்பட்டும்!
மிக, மிகக் கேவலமான அரசியல் நடத்துபவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்!
அவர்களைத் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அரசியல் நடத்தி காங்கிரஸுக்கே பாடம் போதித்தவர்கள் திமுகவினர்.
1967 முதல் நாம் கண்டுவரும் பாடம் இது.
துரதிர்ஷ்டவசமாக நாம் தமிழராய்ப் பிறந்து இதைக் கண்டு வருகிறோம்.
தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, சோனியா காந்தியின் ஆணைக்கிணங்கி, உலகிலேயே பெரிய ஜனநாயகநாடு எனப் பெருமை பீற்றிக்கொள்ளும் அரசின் பிரதமர் தன் மனச்சாட்சியை அடகு வைத்து தயாநிதி மாறனின் ராஜிநாமாவைப் பரிந்துரை செய்திருக்கிறார் ஜனாதிபதிக்கு..... ஒரு விளக்கம் கூடக் கேட்காமல்!
தனது மந்திரி ஒருவர் ராஜிநாமா செய்கிறார்.
தனது கட்சிக்கு எதிராக சதி செய்ததாக இந்தத் தாத்தா சொல்கிறார்.
அச்சடித்த உரையைக் கையில் அடக்கியடியபடி தாத்தா வருகிறர்ர்.
தான் நினைத்த முடிவினைத் தவறாது சொல்லித் தளர்கிறார்
தன் துறையில் இதுவரை ஒரு தவறும் செய்யாத அமைச்சரை நீக்க, தன் ஆட்சிக்கு உலை வைக்கக்கூடிய கட்சியின் ஆணைக்கு, பிரதமர் இணங்குகிறார்.
ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கிறார்.
நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தன் பதவியைப் பற்றி மட்டுமே!
அதுவும் சோனியாவின் உத்தரவுக்கிணங்க பாரதப் பிரதமர் ஆடுவது வெட்கத்திலும் வெட்கம்!
மக்களே புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் முக்கியமில்லை மன்னர்களுக்கு!
ஆம்!
அவர்கள் இந்நாட்டு மன்னர்கள்!
நீங்கள் எந்நாளும் அடிமைகள்தாம்!
பிராமணர், வைசியர், க்ஷத்திரியர், சூத்திரர் என்ற பேதம் அரசியலில் இல்லை!
அதைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வியாதிகளுக்குத்தான் அது!
இன்னமும் ஏமாந்து போகாமல், இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள், எம் தமிழர்களே!
மனம் பிறழ்ந்த மன்மோஹன்சிங்கே!
இனித் தூங்க முடியாது உம்மால்!
59 பின்னூட்டங்கள்:
//அதுவும் வேற்றொரு நாட்டுப் பெண்ணின் உத்தரவுக்கிணங்க ஒரு இந்தியன் ஆடுவது வெட்கத்திலும் வெட்கம்!//
ஆடுவது என்று சொல்வதற்கு ஆட்சேபம் இல்லை... இங்கே வேறொரு நாட்டுப் பெண் என்பது இடறுகிறது... பெண்களுக்கு புகுந்த வீடுதான் எல்லாமுமே என்பது இந்திய பண்பாடு. ஒரு பெண் ஒரு ஆனை முறைப்படி திருமணம் செய்துக் கொண்டால் அவனுக்கு உரியது எல்லாம் அவளுக்கும் என்று ஆகிறது. நடுநிலையுடன் எழுதும் எஸ்கே ஐயாவும் பாஜக தொண்டர் போல் பேசுவது வியப்பாக இருக்கிறது.
:(
அப்பாடியோவ்!!
சூடு அதிகமாக இருக்கு..இங்கு.
VSK அய்யா,
நிரம்ப கோபமாக எழுதி இருக்கிறீர்கள். ஏற்கனவே மன்மோகன் தூங்கி பல வருடம் இருக்கும். நல்லவர்களும், படித்தவர்களும், நயமாய் நடப்பவர்களுக்கும் பொருந்தாத இடமாய் இந்திய அரசியல் இருக்கிறது. அது நம் சாபம்.
-சத்தியா
பிராமின் தாத்தா,
இத்தனை நாள் தயாநிதி மாறனை இகழ்ந்தீர்கள். அவர் கொண்டு வந்த ஒரு ரூபாய் தொலைபேசித் திட்டத்தையும் காறி உமிழ்ந்தீர்கள்.
இன்றைக்கு திமுகவின் உட்கட்சிக்குள் சண்டை என்றதும் கருணாநிதிக்கு எதிரி என்றதும் தயாநிதியை புகழ்கிறீர்கள்.
பாப்பானை நடிப்பில் மிஞ்ச இந்த உலகத்தில் ஆட்களே இல்லை!
ஐயா கோவியாரே!
இந்தப் பதிவில் என் கோபத்தைப் புரிந்து கொண்டு இடும் பின்னூட்டங்களுக்கு மட்டுமே பதிலிடுவதென கொண்டிருக்கிறேன்.
எனவே, உங்களின் அர்த்தமற்ற பிதற்றலை ஒதுக்குகிறேன்.
மன்னிக்கவும்.
சூடு சொரணை இருப்பதால் சூடும் கொஞ்சம் அதிகமே குமார்!
ஆனால், நிதானம் இழக்கவில்லை.
உங்களின் நியாயமான வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன் திரு. சத்தியா அவர்களே!
நன்றி.
தயாநிதியை இகழ்ந்து நான் இட்ட ஒரு பின்னூட்டத்தை நீங்கள் காட்டினாலும், உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க நான் தயார்!
இல்லையென்றால், மீண்டும் இங்கே வந்து நீங்கள் சொல்லியது தவறென்று சொல்லத் துணிச்சலுண்டா திரு. வால்ட்டேர் வெற்றிவேல்?
துணிவிருந்தால் வாருங்கள்!
//VSK said...
ஐயா கோவியாரே!
இந்தப் பதிவில் என் கோபத்தைப் புரிந்து கொண்டு இடும் பின்னூட்டங்களுக்கு மட்டுமே பதிலிடுவதென கொண்டிருக்கிறேன்.
//
தினமலரே ஓடி ஓடி திமுகவுக்கு சப்போர்ட் பண்ணுவதை ஐயா படிக்காமல் அவசரப்பட்டு எழுதிட்டிங்களோன்னு தோணுது !
:))))
அட ..அட..அட.. என்ன லாஜிக்..என்ன வாதம் ..பின்னுறீங்க VSK சார் ..அப்பப்ப இந்த மாதிரி ஏதாவது எழுதுங்க ..நல்ல ஆத்திக கருத்துக்கள்.
தினமல்ரும், நீங்களும் ஒன்றென சொல்லியிருப்பது மகிழ்வளிக்கிறது, நண்பர் கோவியாரே!
அதற்கெல்லாம் நீங்கள் போய் மதிப்பளியுங்கள்!
என்னைத் துணைக்கழைக்க வேண்டாம்.
உங்களுக்கே தெரியும்... நான் எதற்குத் துணை வருவேனென்று!
நல்லதற்கு மட்டுமே!!
http://bunksparty.blogspot.com/2006/03/blog-post_30.html
இதெல்லாம் உங்கள் மன பாதிப்பின் உருவம் என நான் நினைக்கிறேன்.
கலைஞருக்கு வயதாகி விட்டது.
இம்முறை தோற்றால், மீண்டும் எழ நேரம் இருக்காது.
மற்ற தலைவர்களும் ஒன்றும் இளவயதுக்காரர்கள் அல்ல; ஸ்டாலினைத் தவிர.
கருணாநிதி இல்லாத தி.மு.க., ஸ்டாலினை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ளும் என்பதும் சந்தேகமே.
ஜெ. திரும்பி வந்ததற்கு அவர் காரணமல்ல.
கலைஞரின் ஆணவ அரசியலே காரணம்.
இப்போது மாற்றுக் கட்சிகளும் வந்து விட்டன.
மக்கள் கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
எனவே, 'ஜெயித்தாலும் தோற்றாலும் இவை இரண்டும் மீண்டும் மீண்டும் மலரும்' என்பது ஒரு சுகமான 'கனவு' அவ்வளவுதான்!
மக்கள் தொடர்ந்து மடையராக இருக்க மாட்டார்கள்!
இரு கழகங்களையும் தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்தே விட்டது!!
குடும்பமரத்தின் வேர்களோ, கிளைகளோ எங்கு போனால் என்ன?
தமிழகத்தை அழிக்க மட்டுமே அவை செல்கின்றன என்பதே உண்மை!@
http://msathia.blogspot.com/2007/05/blog-post_14.html
http://satrumun.blogspot.com/2007/05/flash-news.html
ஒரு மத்திய அமைச்சர் பிரதமரின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுதான் இந்திய அரசியல் சட்டம் சொல்வது.
ஒரு கட்சிக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கட்சிக்கு அதிகாரம் உண்டு.
ஆனால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி மக்கள் கொடுத்தது, அது ஒரு கட்சியின் மூலமாக நடந்திருந்தாலும்.
இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும், பிரதமர் விரும்பினால்.
நடப்பது கேலிக்கூத்தின் தொடர் நிகழ்வுகளே!
பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.
சட்டப்படி, அமைச்சராக நீடிக்க முடியும் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் இப்படிச் செய்தால் கூட்டணிக் கட்சிகளின் விரோதத்தைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அறிவேன்.
:))
http://satrumun.blogspot.com/2007/05/flash-news.html
பல நல்ல கருத்துகளை பலவிடத்தினின்றும் எடுத்து இங்கு வைத்த திரு. வால்ட்டேர் வெற்றிவேலுக்கு என் மனமார்ந்த நன்றி!
[பி.கு.: இதையே உங்களது எல்லாப் பின்னூட்டங்களுக்கும் கொள்க!]
// ஜோ / Joe said...
அட ..அட..அட.. என்ன லாஜிக்..என்ன வாதம் ..பின்னுறீங்க VSK சார் ..அப்பப்ப இந்த மாதிரி ஏதாவது எழுதுங்க ..நல்ல ஆத்திக கருத்துக்கள். //
இப்பவாவது இந்த ஆத்திகக் கருத்துகளை ஒத்துக் கொண்டீர்களே!!
மிக்க நன்றி, திரு.ஜோ!
நிச்சயம் எழுதுகிறேன் ஐயா!
சபாஷ் எஸ்.கே சார், வெட்கம் கெட்டவர்கள் இந்திய அரசியல்வாதிகள். உங்கள் ஆத்திரத்திற்கு அர்த்தம் உண்டு
நெஞ்சு பொறுக்கவில்லையே ஐயா
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து!
என் நியாயமான கோபத்தைப் புரிந்திட்ட பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி, திரு. சிவா.
ஏ அப்பா!தமிழராய்ப் பிறந்தவர்--நால் வருணப் பேதம் அரசியலில் இல்லையாம்-பரதேசிகளிடம்தான் இருக்கிறதாம்.
காங்கிரசு வேண்டாம்,தி.மு.க வேண்டாம் அவர்கள் அயோக்கியர்கள்.பூணுலையும்,கீதையையுங் கொடுக்கும் உத்தமர்கள்தான் வேண்டுமாம்.ராமர் கோயில் கட்டலாம்,இந்துத்துவா என்று பார்ப்பன ஆதிக்கம் செய்து மற்றவர்களை ஏமாற்றலாம்.
பாகிஸ்தானில் பிறந்தவர்கள் இந்தியர்கள் தானே(அத்வானி,மன்மோகன்).
அன்னிபெசண்டை என்ன செய்தீர்கள்?
அன்னை தெரசாவை என்ன செய்தீர்கள்?
அரசியிலில் பார்ப்பனரை ஆதரித்திருந்தால் இந்நேரம் அன்னை
சோனியா ஆயிருப்பார்.
ஆடுங்கள் நாட்டியம்.கட்சிகள் தங்கள் வேட்பாளரை வைத்திருப்பதும்,வேண்டாமென்பதும் அவர்கள் விருப்பம்.காரணங்கள் இருக்கும்.தாண்டிக்குதித்து வாரி வீசுவதற்கு அந்தக் கழக உறுப்பினர்கள் கூட இல்லாதவர்கள் குதிப்பது நாடகமாடத்தான்.
ஐயா தமிழனே!
[நானும் தமிழன்தான்!]
இப்பின்னூட்டத்தை மட்டுறுத்தாமல் பிரசுரித்தது உங்களுக்கும், உங்களைப் போல் நினைத்திருக்கும் மற்றவருக்கும் என் பதில் கூறத்தான்.
எனவே உங்களுக்கு நன்றி!
நான் எந்த ஒரு கட்சியின் அனுதாபியும் அல்லன்... நீங்கள் நம்ப மறுத்தாலும்.
ஆனால், தமிழகத்திற்கு இந்த இரு [தி.மு.க.; அ.தி.மு.க.] கழகங்களும் செய்த துரோகங்களால் மனம் வெதும்பி நிற்கும் பல கோடி மக்களுள் ஒருவன் நான்.
ஆரியர், திராவிடர், பார்ப்பனர், பறையர் என்ற உங்கள் வழக்கமான கோஷங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
நான் அதையெல்லாம் தாண்டி வந்தவன்.
என்னிடம் வேண்டாம் அது!
கட்சி, ஒரு உறுப்பினரைத் தள்ளி வைத்தால் அது பற்றிப் பேச எனக்கோ உங்களுக்கோ அருகதை இல்லையென நன்குணர்ந்தவன் நான்.
ஆனால், இங்கு நடந்திருப்பது அதுவா, நண்பரே!?
குடும்ப நலனுக்காக, தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டு ஒரு 85 வயதுத் தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்.
அதனைத் தட்டிக் கேட்க வக்கில்லாமல் என்னிடம் வருணபேதம் காட்டிப் பம்முகிறீர்கள்.
எனக்கு வயது 50க்கும் மேலே!
எனக்கு ஒன்றுமில்லை.
ஆனால், மாறிவரும் உலகச் சூழ்நிலையில் பாதிக்கப்படப்போவது உங்கள் மகனும், என் மகனும்தான்.
இதனை உணர ஏன் மறுக்கிறீர்கள்?
நாட்டிற்கு நல்ல பணி ஆற்றி வந்த நல்லவரை நடுவிலே கழற்றிவிட்டு, தன் குடும்ப நலனுக்கு என வாழ்பவரை ஏன் பின் பற்றிச் செல்லுகிறீர்கள்?
உங்கள் மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்கள்!
நடந்ததில் உங்களுக்குப் பூரண சம்மதமா?
ஆறவில்லை மனது!
கொதித்துக் கிடக்கிறேன்.
ஆற்றியதற்கு, கொட்ட வைத்ததற்கு நன்றி!
நாளைய உலகம் சொல்லும் இதன் விளைவுகள் என்னவென்று.
மன்மோஹன்சிங்குக்கு என்ன!
.....ரே போச்சு!
இன்னொரு ஆளை நியமித்து விட்டு தமிழகத்திற்கு பெப்பெப்பே காட்டிடுவார்!
மாய்வது தமிழகம் தான் நண்பரே!
உணருங்கள்!
//நாட்டிற்கு நல்ல பணி ஆற்றி வந்த நல்லவரை நடுவிலே கழற்றிவிட்டு, தன் குடும்ப நலனுக்கு என வாழ்பவரை ஏன் பின் பற்றிச் செல்லுகிறீர்கள்?//
நாட்டுக்கு நல்ல பணி ஆற்றி வந்த நல்லவரை கலைஞர் அமைச்சராக்கிய போது கலைஞர் வெறுப்பாளர்கள் இதே குடும்ப நலன் என்று பக்கம் பக்கமாக குமுறியது ஞாபகம் வந்து தொலைக்கிறது.VSK சார் ..உங்களைச் சொல்லவில்லை..நீங்க ரொம்ப நல்லவர்..அவ்வ்.
விஎஸ்கே ஐயா !
கவலையை விடுங்க ஒரு தயாநிதி மாறனை உருவாக்க முடிந்த கலைஞரால் அது போல் 10 பேரை உருவாக்க முடியும். தமிழக அமைச்சர் பதவி நீங்கினால் கூட்டணி ஆட்சியில் அதே மாநிலத்துக்குத் தான் பதவியை தருவார்கள். கலைஞர் - மாறன் பிரச்சனை குடும்ப அரசியல் என்பது மன்மோகனுக்கு தெரியும் அவர்ர் நன்றாகவே தூங்குவார்.
நம்ம அரசியல் தலைவர்கள் பார்லிமெண்டில் குண்டு வெடித்தாலே குறட்டை விட்டு தூங்குவார்கள்...இதுக்கெல்லாமாக அவர் அலட்டிக் கொள்ளப் போகிறார்.
எப்படியோ திமுக மத்திய அமைச்சர் ஒருவர் நன்கு செயலாற்றினார் தமிழகம் நன்மை அடைந்திருக்கிறது என்று உங்கள் பதிவின் மூலம் புரிந்து கொண்டுள்ளேன்.
மீண்டும் வந்து நல்லவர் எனச் சொன்னதற்கு மிக்க நன்றி, திரு. ஜோ1
மற்றவர் குமுறியிருக்கலாம்.
திரு.தமிழனிடம் சொல்லியது போல, தயாவைக் குறை சொல்லி ஒரு சொல்லும் நான் சொன்னதில்லை.
மாறாக, தெய்வாதீனமாக இப்படி ஒரு திறமையாளரை எப்படி கலைஞர் கொண்டு வந்தார் எனவே வியந்தேன்!
நல்லது இவரிடம் நெடுநாள் தங்காதே; தங்கமுடியாதே எனவும் நினைத்தேன்.
அப்படியே நிகழ்ந்திருக்கிறது!
நன்றி.
இப்படியெல்லாம் சொன்னால்தான் உங்களைப் போன்றவர்கள் புரிவார்கள் என்றால், அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்ல நான் தயார், கோவியாரே!
தலைவர்மேல் அத்தனை நம்பிக்கையின்மை!!!!
:))))))))))))))
இந்தத் தலைப்பிலே நால் வருணத்தைக் கொண்டு வந்தது நீங்கள்தான்.அதற்குத்தான் கேட்டேன்.
வேற்று நாட்டுப் பெண்மனி--இந்தியன் ஆடுவது இதெல்லாம் என்ன பொறுப்பான பேச்சா?
நடு நிலையாக இருந்து கருத்தைச் சொல்லியிருந்தால் யாரும் குறை சொல்லமாட்டர்கள்.
காவிச் சாயத்தில் பேசும்போதுதான் காலித்தனமாகத் தெரிகிறது.வார்த்தைகள் தடிக்கும்போது உணர்ச்சிகள் தான் வருகிறது,
உள்ளே என்ன நடந்தது என்பது தெரியாமல் பிரதமரையும்,சோனியா அம்மையாரையுந் தாக்குவது,அதுவும் மட்டரகமாகத் தாக்குவது ,அதிலே தமிழர என்றும்,நால் வருணத்தையும் உள்ளே நுழைப்பது அசல் பார்ப்பனீய,ஏமாற்று வேலை.
ஆம்.உங்கள் மனசாட்சிதான் உங்களுக்குப் பதில் சொல்ல முடியும்.
ஆமாம்....பரதேசின்னு நீங்க திட்டலாமா?, நீங்களல்லவா பரதேசி...இந்திய தேசத்தில் டாக்டர்களுக்கு வேலை இல்லாதமாதிரி அமெரிக்காவில் போய் $ சம்பாத்தியம், ஆனால் பேச்சு என்னமோ அரசியல்வாதிகளால் மட்டுமே அதிலும் குறிப்பாக கருணாநிதி-ஜெ ஆகியோரால் மட்டுமே தமிழகம் கெட்டழிந்த மாதிரியான பேச்சு. நீங்க அரசியலுக்கு வரவேண்டாம், உங்களது தொழிலை இங்கு நடத்தி வந்தாலாவது உங்களுக்கு இந்த கோபம் வருவதை ஞாயம் எனக் கொள்ளலாம். சும்மா உங்க வயசயெல்லாம் சொல்லி மரியாதை எதிர்பார்க்க வேண்டாம். வயசுக்கேற்ற விவஸ்தையுடன் இருக்கப் பாருங்க.
தயாநிதி அரசியலில் நுழைந்த ஒரு காரணியே இப்போது அவரை பதவியிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறது.
அது குடும்ப அரசியல் என்கிற காரணிதான்.
ஆனால், தயாநிதியின் அரசியல் பிரவேசத்துக்கு காரணமான அந்த குடும்ப அரசியல் ஒரு நல்ல திறைமையான அமைச்சரை நாட்டுக்கு கொடுத்தது உண்மைதான். அது ஒரு நல்ல விளைவு. ஆனால், அதன் கருவாக இருந்தது ஒவ்வாத இந்த குடும்ப அரசியல்தானே. முடிவு மட்டும் சரியாக இருந்தால் போதாது. அந்த முடிவை எய்தும் வழியும் சரியாக இருந்தால்தான் ஒரு நிலையான நன்மையை நமக்கு தரும் என்பதே நான் இதில் அறிந்த பாடம்.
"எங்கள் கட்சியான திமுகவுக்கு தகவல் ஒலிபரப்பு துறை தருகிறோம் என்று லெட்டரில் கையெழுத்து போட்டிருக்கிறார் காங்கிரஸ் என்று எப்போது கருணாநிதி அந்த லெட்டரை எல்லா பத்திரிக்கைகார்ருக்கும் காண்பித்தாரோ அப்போதே இந்த மன்மோகன் சிங்கின் லட்சணம் வெளிப்பட்டு விட்டது. ஒரு பிரதம மந்திரியோ, அவர் கட்சி தலைவரோ கூட இல்லை. அந்த லெட்டரை கையெழுத்து போட்டவர் காங்கிரஸ் கூலி. அப்போதே மன்மோகன் சிங் நாக்கை பிடுங்கிக்கொண்டிருக்கவேண்டும். இன்னும் கொஞ்சமும் வெட்கங்கெட்டு அவர் சோனியாவின் முந்தானையிலும், கருணாநிதியின் துண்டுக்கடியிலும் ஒளிந்துகொண்டு விட்டார். மன்மோகன் சிங் ஒரு நல்ல நிதியமைச்சராய் இருந்தார். ஆனால், படு மோசமான பிரதம மந்திரி யாக உருவாகியுள்ளார். காலத்தின் கோலம். இதுவும் நான் கற்ற இரண்டாவது பாடம். ஒரு மனிதன் எல்லா சூழ்நிலையிலும் ஒரே மாதிரி இருக்கமாட்டான் என்பதே அது.
தங்கள் நல்ல பதிவுக்கு நன்றி
ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று அதை மறுத்திட வேண்டும் என்று சொல்கிறீர்களா?
இது தி.மு.க வின் உள்கட்சி அரசியல். சின்னாள் பூசல். நாளை அவரே திரும்பி அமைச்சராக வரவும் வாய்ப்புண்டு.
இதிலே
//ஒரு தயாநிதி மாறனை உருவாக்க முடிந்த கலைஞரால் அது போல் 10 பேரை உருவாக்க முடியும். தமிழக அமைச்சர் பதவி நீங்கினால் கூட்டணி ஆட்சியில் அதே மாநிலத்துக்குத் தான் பதவியை தருவார்கள். கலைஞர் - மாறன் பிரச்சனை குடும்ப அரசியல் என்பது மன்மோகனுக்கு தெரியும்//
என்என்ற 'ஜிகே'யின் கருத்தும் யோசிக்க வேண்டிய விடயம்தான்.
இதனால் ஆட்சியைக் கெடுத்துக் கொண்டால் அதை விட கொடுமையாக பாஜக ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லவைகள் கிடைக்காமல் போகுமே.
அதற்கு இது தேவலாமென்றே தோன்றுகிறது எஸ்.கே ஐயா.
வயசுக்கேற்ற விவச்தை என்றால், கழகங்கலுக்கு தாளம் தட்டுவதுதான, திரு. அனானி.?
என் மனதில் பட்ட நியாயமான கருத்துகளை பொறுப்பாகத்தான் வைத்திருகீறேன்.
ஏற்கெனவே திரு. தமிழனுக்கு விரிவாக பதில் கூறியாகிவிட்டது.
20 ஆண்டுகள் மருத்துவப்பணி தாயகத்தில் செய்துவிட்டுத்தான் புலம் பெயர்ந்திருக்கிறேன்.
உங்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும், பதிவு என்னைப் பற்றி அல்ல.
நன்றி.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வருணபேதம் காட்டி மக்களைத் திசை திருப்பும் இவர்களைத்தான் சொன்னேன்.
ஏன், இவர்க்ளைத் தவிர வேறு எவரும் அதைச் சொல்லக்கூடாதா?
சொன்னல் முத்திரை குத்துவீர்கள் என்பது தெரிந்த ஒன்றுதானே!
விவாதம் என்னைப் பற்றி அல்ல.
நன்றி, திரு தமிழன் அவர்களே!
நான் அப்படி எதுவும் சொல்ல வில்லையே திரு. சுல்தான் அவர்களே!
தட்டிக்கேட்க முடியாமல், தன்னாட்சியைக் காத்துக் கொள்ள ஒரு நல்ல இளம் அமைச்சரை தென் விருப்பமில்லமல் நீக்க நேரிட்ட அவரால் தூங்க முடியாது; மனம் வெதும்புவார் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.
10 பேர் வேண்டாம், திரு. கோவி.க. சொல்லியிருப்பது போல, கலைஞர் அப்படி உருவாக்கிய ஒரு சிலரை அடையாளம் காட்டுங்களேன்.
இந்தக் குமுறல் இந்த ஒரு நிகழ்வைப் பற்றி மட்டுமே!
நன்றி.
//சும்மா உங்க வயசயெல்லாம் சொல்லி மரியாதை எதிர்பார்க்க வேண்டாம். வயசுக்கேற்ற விவஸ்தையுடன் இருக்கப் பாருங்க.
//
அனானி அன்பரே, அவர் வயசை சொல்லி உங்களிடம் மரியாதை எதிர்பார்த்தாரா அவர் அனுபவத்தில் அவர் புரிந்து கொண்டுள்ள அளவில் அவரது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் வயதை தெரிவித்ததன் மறைமுக காரணம் அவ்வளவே. உங்களுக்கு மறுக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் நாகரீகமாக சொல்லுங்கள் அதைவிடுத்து ஒருவர் திமுகவை விமர்சனம் செய்துவிட்டார் என்ற காரணத்தினால் 'விவஸ்தை' குறித்துப் பேச உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது. அனானி பெயரில் கமெண்ட் போடத் தெரிகிறது கீழே பெயரை தட்டச்சி திருநாமத்தை சொல்ல முடியவில்லையோ.
உங்களைப் போல் ஒழிந்து கொண்டு எழுதாமல் ஊர் பெயர் எல்லாம் சொல்லி தனது கருத்துக்களை பதிவு செய்யும் அவருக்கு விவஸ்தை விவேகம் எல்லாமும் இருக்கிறது.
//உங்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும், பதிவு என்னைப் பற்றி அல்ல//
பதிவு உங்களைப் பற்றியதாக இல்லாதிருக்கலாம், ஆனால் யார் எதை தட்டிக்கேட்பதென்பதற்கு ஒரு அளவிருக்கிறது....
நீங்களெல்லாம் அரசியலுக்கு வரமாட்டீர்கள், ஏன் இந்தியாவிலிருந்தால் கூட ஓட்டுப்போட மாட்டீர்கள் ஆனால் இந்த பதிவுமாதிரி பஜனை நன்றாக செய்வீர்கள்....
//தங்கள் நல்ல பதிவுக்கு நன்றி //
அனானியாக வந்து பாராட்டவும் கூடும் எனக் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
நல்லாட்சி தருவேன் என வாக்களித்து ஆட்சிக்கு வருபவர்கள், தன்னாட்சியைக் காப்பாற்றிடவே நேரம் செலவழித்துக் கொண்டு மக்கள் நலனை மறப்பதைச் சுட்டிக் காட்டுவது ஒன்றே இப்பதிவின் நோக்கம்.
இடுக்கண் களையும் நட்பே!
மிக்க நன்றி.
:))
நான் தாயகத்திற்கு செய்ததை உங்களுக்குப் பட்டியலிட எனக்கு அவசியமில்லை .
உங்கள் ஊகங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
பதிவைத் திருப்ப வேண்டாம், திரு. அனானி.
மாநாடு நடத்த அழைக்கிறீங்களோன்னு வந்து பார்த்தா. பா.ஜ.க கட்சி அறிக்கை போல இருக்கு. வாழ்த்துக்கள் நண்பர் எஸ்.கே :)
அம்மா மந்திரிகளை காலையிலும், மாலையிலும் செருப்பு போல மாற்ரினதும் இதில் அடங்குமா அய்யா?
டிஸ்கி: தயாநிதி விவகாரம் பற்றி கருத்து இங்கு சொல்லவில்லை.
தயாநிதி வல்லவர் என்பது உண்மை ஆனால் அவர் நல்லவரா என்பது தான் கேள்வி. அவரால் தி.மு.க விற்கு ஏற்பட்ட அவமானங்கள்.
1. தயாநிதி அமைச்சர் ஆனது முதல் தி.மு.க விற்கு ஏகப்பட்ட தலைவலி.
2. கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து மாவட்ட செயலருக்கும் சுமங்கலி கேபில்விசன் ஏஜன்சி, கார், கம்பியுட்டர் வழங்க முன் வந்தது.
3. ஸடாலின் பிறந்த நாளன்று இன்று குரங்குக்குப் பிறந்த நாள் என்று தினகரனில் எழுதியது. வாழ்த்துத் தெரிவிக்கவிடால் பரவாயில்லை ஆனால் அவமானப்ப்டுத்தக் கூடாது அல்லவா.
4. ஸடாலின் நிகழ்சியை சன் டி.வியில் ஒளிபரப்பாதது.
5. கலைஞர் பலமுறை கேட்டுக் கொண்டும் கருத்துக் கணிப்பை வெளியிட்டது.
இன்னும் உட்க்ட்சிப் பிரச்சனை நிறைய உள்ளது. கொடுத்தவனே பறித்துக் கொண்டான். இந்திய அரசியலமைப்புப் படி ஒரு கட்சி விருப்படும் நபர் தான் அமைச்சராக இருக்க முடியும். ஜனாதிபதி கட்சி தேர்ந்தெடுக்கும் நபரைத்தான் ஆட்சி அமைக்க அழைக்கிறார்.
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. சோனியாஜின் ஆணையில் தான் தமிழகம் இயங்குகின்றது. இது கங்கிராசாருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியர்களும்
வெட்கப்பட வேண்டிய விசயம். உலகில் 100 அதிகாரகிமிக்கவர்கள் பட்டியலில்
சோனியாஜி அடங்குவதாக அமெரிக்க கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதில் மன்மோகன் இல்லையே!!!
மாறனை நீக்க சிபார்சு செய்யும் அதிகாரம் கட்சிக்கு உண்டு.
இந்த அரிச்சுவடி அரசியல் புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
புள்ளிராஜா
மாறனை மந்திரி பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் கட்சிக்கு கிடையாது, சிபாரிசுதான் செய்ய முடியும்.
நீக்குவது, பிரதமரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியே என்பதே நான் சொல்லி வருவது.
இதுதான் அரிச்சுவடி.
நீங்கள் கூறியிருப்பது வேறு.
வருகைக்கு நன்றி.
// தயாநிதி விவகாரம் பற்றி கருத்து இங்கு சொல்லவில்லை.//
நீங்களே சொன்னபிறகு,
பதிவுக்கு தொடர்பில்லாத நிகழ்வுகளைப் பற்றி இங்கு சொல்லுவது தேவையில்லை எனக் கருதுகிறேன், திரு. திரு!
வாழ்த்துக்கு நன்றி.
//சுப்பு said...
தயாநிதி வல்லவர் என்பது உண்மை ஆனால் அவர் நல்லவரா என்பது தான் கேள்வி. அவரால் தி.மு.க விற்கு ஏற்பட்ட அவமானங்கள்.....//
மதுரை வன்முறைப் படுகொலைகளுக்குப் பின்னர் அரங்கேறிய நாடகத்தினைப் பற்றிய கருத்துகளே நான் சொல்லியிருப்பது.
இப்போது நீங்கள் சொல்லியிருப்பதெல்லாம், ஒரு வாரம் முன்பு தங்களுக்குத் தெரியுமா , அப்படியே தெரிந்தாலும் நீங்கள் சொல்லியிருப்பீர்களா என்பதை உங்களிடமே விடுகிறேன், திரு. சுப்பு.
//இதனால் ஆட்சியைக் கெடுத்துக் கொண்டால் அதை விட கொடுமையாக பாஜக ஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லவைகள் கிடைக்காமல் போகுமே.
அதற்கு இது தேவலாமென்றே தோன்றுகிறது எஸ்.கே ஐயா.
//
பாஜக ஆட்சியினால் கிடைத்த அமைதியைவிட குடும்ப சண்டையில் கொலை மற்றும் வெளிநாட்டு பெண்மணியின் கீழ் அடிமை உத்யோகம் செய்யும் பிரதமர் தேவலை என்கிறார் சுல்தான் சார். பலே நல்ல கருத்து
பாஜக ஆட்சியிலும் பெரிதாக அமைதி ஒன்றும் வந்துவிடவில்லை, திரு. சிவா.
அப்போதும் கோத்ரா போன்ற கொடும் சம்பவங்கள் அரங்கேறி, நாட்டின் ஒற்றுமையே சீர்குலையக் கூடிய அபாயம் நிகழ்ந்தது என்பதை மறக்க வேண்டாம்.
இப்போது பேசும் பொருள் தவிர்த்து, பின்னூட்டக் கருத்துகளுக்கு மறுப்பு சொல்லி வேறொரு விவாதம் வளர்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனவே, இந்தப் பதிலோடு இதை விடலாம்.
[இது குறித்த பின்னூட்டங்கள் இனி மட்டுறுத்தப்படும்.]
இப்போது நடந்த நிகழ்வைப் பற்றிய கருத்துகளுக்கு மட்டும் விவாதம் செய்யலாமே!
அதனால்தான் திரு. சுல்தான் அப்படிச் சொன்னபோது அதற்கு பதில் கூறாது தவிர்த்தேன்.
திரு. திருவுக்கும் அதையே செய்தேன்
புரிதலுக்கு நன்றி.
அதற்காக வராமல் இருந்து விடாதீர்கள்!
:))
மக்களுக்கு விழிப்பு வந்து அனைவரும் வாக்களிக்கையில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.
நான் இன்னொரு கோணத்தில் தற்சமயம் பார்க்க விரும்புகிறேன்.
தயாநிதிக்கு எள் அளவு கூட தயை, கருணை, பச்சாதாபம் இல்லை. எப்படி என்றால், முதலில் ஒரு பிரஸ் இன்டெர்வியு கொடுத்தார். அதில், துளி கூட சமீபத்தில் மதுரையில் மூவர் பரிதாபகமாய் கூண்டர்களால் சாகடிக்கப் பட்டதை விமர்சித்து, அவர் அனுதாபத்தை தெரிவிக்க வில்லை. எப்பேர்பட்ட மனிதாபிமானம்!!! எல்லா தமிழர்களும் பெருமை அல்ல, சிறுமைப் பட வைத்துவிட்டார். அவர், புகழ், அவர் பிராபல்யம் இத்யாதி, இத்யாதி அடுக்கிக் கொண்டே போனார். இவரும் மனிதரா?
'பக்ஷிராஜா'
நீங்கள் யாருக்கும் எதுவும் நிருபிக்க வேண்டாம் ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனை முறை ஓட்டளித்தீர்கள் என்று சொல்லிவிடுங்கள்....
யாரு இந்த வால்ட்டர் வெற்றிவேல் என்று குழம்புறீங்களா ? அது தமிழ்மணத்தை பீடித்த வியாதி என்று சொல்லித்தான் தெரியவேணுமோ, அதனால் அதுக்கு எல்லாம் பதில் அளித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிச்சுட்டீங்க.
பதிவை பற்றி என்னுடைய கருத்தை தான் நான் ஏற்கனவே இம்சித்துட்டனே
பெங்களூர் அ.மு.க (புரிஞ்சுப்பீங்க இல்லையா)
//////நீங்க அரசியலுக்கு வரவேண்டாம், உங்களது தொழிலை இங்கு நடத்தி வந்தாலாவது உங்களுக்கு இந்த கோபம் வருவதை ஞாயம் எனக் கொள்ளலாம். சும்மா உங்க வயசயெல்லாம் சொல்லி மரியாதை எதிர்பார்க்க வேண்டாம். வயசுக்கேற்ற விவஸ்தையுடன் இருக்கப் பாருங்க. ////
அனானி
சொந்தப்பெயரில் பதிவு எழுதும் அளவுக்கு விவஸ்தை இருக்கு அவருக்கு..யார் எங்கே தொழில் செய்கிறார்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று கேட்க உனக்கு எந்த விவஸ்தை இருக்கு கேட்கிறே ? அவருக்கு மரியாதை கொடுக்க தெரியாத சொந்தப்பெயரில் எழுதத்தெரியாத ஒருவருக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் வி.எஸ்.கே அவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்...
முதலில் நீ யார் என்று சொல்..பிறகு உன்னுடைய தகுதி தராதரம் என்ன என்று நான் சொல்கிறேன்..
பிற்கு பேசலாம் விவஸ்தை பற்றி...!!
உமது கட்சியை விமர்சனம் செய்துவிட்டால் உடனே எந்த வகையிலாவது காறி உமிழ்ந்து முத்திரை குத்தி அவர்களை அடக்கவேண்டும்...அப்படித்தானே...இதெல்லாம் ஒரு பிழைப்பா அனானி நன்பரே...
வீ.எஸ்.கே...
உங்கள் பதிவை பற்றிய கருத்து எதுவும் இல்லை என்றாலும், அம்மையார் சோனியா புகுந்த வீடு வந்ததவர், இந்திய பாரம்பரியப்படி அவர் இந்திய நாட்டு மருமகள்...
மேலும் தேச ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும், மத சார்பின்மைக்கும், சமய சகிப்பு தன்மைக்கும் உலக நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக விளங்கும் நமது பாரத தேசம் சோனியா அம்மையாரையும் ஏற்றுக்கொண்டது என்பது உண்மைதானே...
அதனால் அவ்வம்மையாரை வெளிநாட்டவர் என்று கூறுவது எனக்கு ஏற்புடையதல்ல...
மற்றபடி ஒரு நல்ல மத்திய அமைச்சரை நாடு இழந்துவிட்டது என்பதை டேக் கேர் தயாநிதி மாறன் என்று ஒரு பதிவிட்டு வருந்தியுள்ளேன்...
பாதி பின்னூட்டங்கள் தான் படித்துள்ளேன்...மீதியும் படித்து முடித்து பிறகு வருகிறேன்...
அட...கோவி.கண்ணன் கூட ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்...:))))
///நீங்கள் யாருக்கும் எதுவும் நிருபிக்க வேண்டாம் ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனை முறை ஓட்டளித்தீர்கள் என்று சொல்லிவிடுங்கள்.... ///
அனானி,என்னுடைய ஓட்டு கதை அனானியா வருது பாரு கீழா..
நான் சொல்லவா...என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலிலேயே இல்லை...ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவுக்கு வாக்களிக்க வரும் வாக்காளருக்கு பூத்.சிலிப்பே கொடுக்க மாட்டேன்...ஒன்லி ஏ.டி.எம்.கே ஓட்டர்ஸ் மட்டும்தான் பூத் சிலிப்...கேட்டா பேரே இல்லைன்னுடுவோம்...போதுமா...
ஏன்னா அந்த பூத் சிலிப் இருந்தாத்தான் 50 ரூவா கொடுப்போம்..அதனால தி.மு.கவுக்கு ஓட்டளிக்க வரும் கிழவிகள் உட்பட கிடந்து அடிச்சுக்கும்க...
சும்மாவா...உலகமே இடிஞ்சாலும் அதிமுகவை தவிர வேற கட்சியை தேர்ந்தெடுக்காத தொகுதிங்கறது எப்படி ?
இப்படித்தான் இருக்கு இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்...அதுல நடக்குது இது மாதிரி குடும்ப அரசியல் நாடகம்...
இதை எல்லாம் நாம கண்டுக்கப்படாது.
மிக்க நன்றி, திரு. செ. ரவி!
நான் சொல்ல வேண்டியதைப் பதிவிலும், இன்ன சில பின்னூட்டங்களிலும் தெரிவித்து விட்டேன்.
இனி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.
சோனியா காந்தியைப் பற்றிச் சொன்னது, மன்மோகன்சிங்கைக் குறித்துதான்.
அது தவறு எனில் வருந்துகிறேன்.
இன்று மலை அதனை நீக்கி விடுகிறேன்.
யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கில்லை.
ஆட்சிக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் அரசியல் தலைவர்கள், நாம் தெரிந்தெடுத்தவர்கள்; ஒரு சிலராவது இதனை உணரட்டுமே என்ற ஆதங்கத்தில் எழுதியது.
மீண்டும் நன்றி.
அனானியாக வந்து கருத்து அளித்தவர்களுக்கும் நன்றி!
பூத் கதையைப் படிக்கையில் வருத்தமாகவும், சிரிப்பாகவும் இருந்தது.
:))
//அம்மையார் சோனியா புகுந்த வீடு வந்ததவர், இந்திய பாரம்பரியப்படி அவர் இந்திய நாட்டு மருமகள்...//
VSK ஐயா
இது இந்த பதிவிற்கு பொருந்துமா என்று தெரியவில்லை.. பொருந்தாவிட்டால் தயை கூர்ந்து நீக்கிவிடவும்..
சோனியா, நேரு வீட்டு மருமகள்.. அவ்வளவே!!.. ஒரு வெளிநாட்டவர் ஒரு கட்சியை தலைமை தாங்குவது நிச்சயமாக தவறல்ல...
ஆனால், அவர், எதாவது ஒரு சிறு பதவியில் இருந்து, இந்திய அரசியலை புரிந்து, படிபடியாய் உயர்ந்திருக்கலாம்.. அதைவிடுத்து, ராஜீவின் மனைவி, நேரு வீட்டு மருமகள் என்ற அந்தஸ்தால் வந்தது சிறிது உறுத்தலாய் இருக்கிறது.. ஒரு சிறு பதவியில் இருந்து பின்னர் வந்திருந்தால், அனுபவத்தினால், சிறப்பாய் செயலாற்றியிருக்க முடிந்திருக்கலாம்...
தயாநிதி மாறனும் இப்படி திடீரென வந்தாலும், அவர் வகித்த துறையில் சிறிது காலம் பணியாற்றி வந்திருந்ததால், சோபிக்க முடிந்தது.. அனுபவம் இல்லாமல் வந்திருந்தால், அவரும் தத்தளிக்க வேண்டியிருந்திருக்கும்..
எல்லா அனானிகளையும் அனுமதித்திருக்கிறேன்.
நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கு!@
உங்கள் கருத்துக்கு என்னிடம் மறுப்பேதும் இல்லை!
:))
செந்தழலாரே, என்ன செந்தழலை வாரி இறைக்கிறீர். விவஸ்த்தை என்ற வார்த்தை அவ்வளவு மட்டமானதா?, இல்லை நீங்களும்-நானும் இந்த அரசியல்வியாதிகளை திட்டுவது மட்டும்தான் செய்கிறோமே தவிர வேறு எந்த மாற்று ஏற்ப்பாட்டிலும் பங்கு பெறுவதில்லை என்ற தோனியில் கேட்ட கேள்வியான ஓட்டுப்போட்டது பற்றிய கேள்வியில் மரியாதை குறைவா?...
நீங்க பதிலளிப்பதாக இட்டிருந்த பின்னூட்டத்தை விட நான் மரியாதையாகத்தான் கேள்வி கேட்டிருக்கிறேன் ரவி. உங்களுக்கும் சேர்த்தே கேட்கிறேன், நீங்களும் ஓட்டு போட மாட்டீர்கள், அரசியலுக்கும் வரமாட்டீர்கள் ஆனால் எங்கோ உட்கார்ந்துகொண்டு ஓட்டுப் போட்டவர்களையும், பல யுத்தங்களுக்கு நடுவில் வெற்றி பெற்ற்வர்களையும் பரதேசி-பன்னாடை என்று மட்டும் திட்டுவீர்களாக்கும்....
ஆமா ரவி, அனானிகளுக்கு கதவு திறக்க பாடுபட்ட ரவிக்கு இங்குமட்டும் ஏன் நான் அனானியாக வந்ததில் கோபம்?....
//Anonymous said...
செந்தழலாரே, என்ன செந்தழலை வாரி இறைக்கிறீர். விவஸ்த்தை என்ற வார்த்தை அவ்வளவு மட்டமானதா?, இல்லை நீங்களும்-நானும் இந்த அரசியல்வியாதிகளை திட்டுவது மட்டும்தான் செய்கிறோமே தவிர வேறு எந்த மாற்று ஏற்ப்பாட்டிலும் பங்கு பெறுவதில்லை என்ற தோனியில் கேட்ட கேள்வியான ஓட்டுப்போட்டது பற்றிய கேள்வியில் மரியாதை குறைவா?...
நீங்க பதிலளிப்பதாக இட்டிருந்த பின்னூட்டத்தை விட நான் மரியாதையாகத்தான் கேள்வி கேட்டிருக்கிறேன் ரவி. உங்களுக்கும் சேர்த்தே கேட்கிறேன், நீங்களும் ஓட்டு போட மாட்டீர்கள், அரசியலுக்கும் வரமாட்டீர்கள் ஆனால் எங்கோ உட்கார்ந்துகொண்டு ஓட்டுப் போட்டவர்களையும், பல யுத்தங்களுக்கு நடுவில் வெற்றி பெற்ற்வர்களையும் பரதேசி-பன்னாடை என்று மட்டும் திட்டுவீர்களாக்கும்....
ஆமா ரவி, அனானிகளுக்கு கதவு திறக்க பாடுபட்ட ரவிக்கு இங்குமட்டும் ஏன் நான் அனானியாக வந்ததில் கோபம்?....
//
ஐயா அனானி,
விவஸ்தைக்கு விளக்கம் வேண்டுமென்றால் சொல்கிறேன். வயதைச் சொன்னதை வேறுவிதமாக திரித்து விவஸ்தை இல்லாமல் சாடியதையும் பெரும்தண்மையோட கருத்துக்கு மதிப்பு அளித்து வெளியிட்டு இருக்கிறாரே அதுதான் விவஸ்தை !
20 ஆண்டுகள் தாயகத்தில் பணி புரிந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் கணக்கு தெரிந்தால் விவஸ்தை இல்லாமல் அதே கேள்வியான எத்தனை முறை ஒட்டுப் போட்டீர்கள் ?' என்ற கேள்வியை திரும்பவும் இங்கே வந்து ஞாயப்படுத்த முயலமாட்டீர்கள். சொன்னது தவறு என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள் விவஸ்தைக்கு கொடுக்கும் விளக்கத்தில் விவஸ்தை இல்லை விஷ(ம)ம் தான் இருக்கிறக்கிறது.
அனானியக வருவது தன்னைக் காட்டிக் கொள்ளாமல் தன் கருத்தைக் கூற மட்டுமே பயன்படுத்தும் அனானிகளால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், முகம் காட்டமல், முறையற்ற, சம்பந்தமில்லத சொற்களிடுவது, அவரவர் தரத்தையே காட்டுகிறது.
இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம் என அன்பு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
கோவி, நான் உங்க பக்கமே வருவதில்லை. (நீங்களும் என் பின்னூட்டத்திற்கு பதிலளித்தாலும்), பிறகேன் நீர் உள்ளே புகுந்து புறப்படுகிறீர் என்று எனக்கு தெரியவில்லை?.
கூட்டணி தர்மம் தலைவிரித்தாடுகிறது வேற ஏதும் சொல்வதற்கில்லை.
அன்பு விஎஸ்கே, நீங்கள் மனம்பிறழ்ந்த என்ற வார்த்தை மன்மோகனுக்கு கூறலாமா?...
இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலியவரல்லவா அவர்?....இன்று கைப்பாவையாக இருக்கிறார் என்பதால் அவரை மனம்பிறழ்ந்தவர் என்றும் மற்றவர்கள் பரதேசிகள் என்றும் நீங்கள் சொல்லுவது சரியென்றால் நான் விவஸ்த்தை என்ற வார்த்தையையும் வயதையும் சேர்த்ததை சரியென்றே கொள்கிறேன்.....நீங்க அதனை நீக்கியோ இல்லை அது உணர்ந்த மறுகணமே நானும் தங்களிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்.
மேலும் என் தரத்தைப்பற்றி நீங்கள் சான்றிதழ் தரவேண்டுமென்ற ஆசையும் எனக்கில்லை. சான்றிதழ் யார் தந்தால் அதற்கு மரியாதை இருக்குமென்று எனக்கு தெரியும்.
இன்னும் ஒன்று, எனக்கென்று ப்ளாக்கர் கணக்கெதுவும் வைத்துக்கொள்ளாத ஒரே காரணத்தால்தான் இவ்வாறு அனானியாக வருகிறேன். இதனை நீங்களோ இல்லை உங்கள் மனசாட்சி கோவியோ நம்பவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
செந்தழல் ரவி சற்று யோசித்துப் பார்த்தால் நான் யாரென்று தெரிந்துகொள்வார்.
இதுபற்றி நானும் இனி எந்த பின்னூட்டமும் இடுவதாக இல்லை. நன்றிகள் உங்களுக்கும் உங்களது உடன்பிறவா..../ மனசாட்சிக்கும்.
சரியல்ல என என் நண்பர்களும், நீங்களும் சொன்ன சில சொற்களை மாற்றிவிட்டேன், திரு. அனானி......, எனக்கும் அதுவே சரியெனப் பட்டதால்.
கோவியார், செந்தழலார் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.
ப்ளாக்கர் கணக்கு இல்லையென்பதால் அனானியாக வருது புரிகிறது.
ஆனாலும், பின்னூட்டத்தின் முடிவில் தங்கள் பெயரை இட எந்தத் தடையும் இல்லையே!
இது உங்களுக்குப் புரியும் என நானும் எதிர்பார்க்கவில்லை!
மன்மோகன்சிங்கின் சாதனைகளைப் பற்றிய பதிவல்ல இது.
அவர் "மனம் பிறழ்ந்த" ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டும் பதிவு என்பதால், அதனை மட்டும் அப்படியே வைத்திருக்கிறேன்.
வருகைக்கு நன்றி.
Post a Comment