Thursday, July 26, 2007

"திருந்தாத பேயோட்ட நீயிங்கு வாடி!"


"திருந்தாத பேயோட்ட நீயிங்கு வாடி!"

இன்று இரண்டாம் ஆடிவெள்ளி!

இதோ எனக்குப் பிடித்த ஒரு அருமையான பாடல்!

இதைப் படிக்கும் போது, கூடவே ஒலி இணைப்பையும் இயக்கி கூடவே பாடிப் பாருங்கள்!

அற்புதமாய் இருக்கும்!

மறக்காமல் கூழ் ஊற்றுங்கள்.... இல்லை....போய்க் குடியுங்கள்!

அன்னை அருள் புரிவாள்!!.......நிச்சயமாய்!


http://raretfm.mayyam.com/stream//tvserial/Raja_rajeswari-end_credits.rm



"மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி

உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி

கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி

மாயவரம் அபயாம்பிகா.



மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி

காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி

சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா

திருவாரூர் கமலாம்பிகா



நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா

பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா

சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி

ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி

அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி

பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி

ஆரல்வாய் இசக்கி அம்மா,

வாடீ! ஆரணி படவேட்டம்மா!

திருவாங்கூர் மேகவல்லி, தாயி!

திருக்கூடல் மதுரவல்லி!



புதுக்கோட்டை புவனேஸ்வரி

நங்கநல்லூர் ராஜேஸ்வரி

மண்ணடியில் மல்லீஸ்வரி

மாதேஸ்வரம் மாதேஸ்வரி

அலங்காரக் கல்யாணி

நாமக்கல் அரசாணி

அங்காளி, செங்காளி

சந்தோஷி மாதா.



மயிலாப்பூர் கற்பகமே

மலைக்கோட்டை செண்பகமே

செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா !



கஞ்சனூர் வனதுர்கா

மாவூரு ஸ்ரீகாளி

கைலாசப் பார்வதி

மைசூரு சாமுண்டி

வலங்கைமான் திருமாரி

வழி காட்டும் திருப்பாச்சி

உமையாம்பா, தேனாம்பா

மலையம்மா, வேலம்மா

திருவத்தூர் வடிவுடையாள்

காளாஸ்தி ஞானாம்பா

மகராசியே! எங்கள் பாளையத்தம்மா !



விராலிமலை வேக்கண்ணாள்

முக்கூடல் பாவாயி

காரைக்குடியம்மா

பொற்கூடையம்மா !



ஸ்ரீசக்தி ஜய சக்தி

சிவசக்தி நவசக்தி

பாஞ்சாலி, ராக்காயி

பைரவி, சாம்பவி

திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி

திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி!



ஓம் சக்தி, ஓம் சக்தி

மருவத்தூர் ஓம் சக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி

உலகாளும் ஓம் சக்தி

வா சக்தி வா சக்தி

வா சக்தி வா சக்தி

உயிர் காக்க வா சக்தி !"

6 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Thursday, July 26, 2007 9:24:00 PM  

ஒலி இணைப்பு வேலை செய்யவில்லை.

ராஜராஜ ராஜேஸ்வரி மெகாதொடர் பாடல் தானே இது ?

பாடியது சித்ரா என்று நினைக்கிறேன்
சரியா ஐயா ?

VSK Thursday, July 26, 2007 9:49:00 PM  

அதான் சாட்டில் வந்து முழுப்பாட்டையும் போட்டுக் காண்பித்தாகிவிட்டதே!

இன்னும் என்ன குறை?

அன்னை எப்படியும் அருள்வாள்!.... எவருக்கும், எல்லாருக்கும்!

VSK Thursday, July 26, 2007 9:51:00 PM  

ராஜ ராஜேஸ்வரி என்னும் ஸன் டிவி தொடரின் இறுதியில் ஒவ்வொரு வாரமும் வரும் பாடல் இது.


பாடியவர் யார் எனச் சரியாகத் தெரியவில்லை.

நன்றி, கோவியாரே!

வல்லிசிம்ஹன் Friday, July 27, 2007 12:35:00 AM  

பாட்டு நிச்சயமாகப் பேயை ஓட்டிவிடும் அப்படி ஒரு உடுக்கை ஒலி.

கண்ணன் சார் பிறந்த நாளுக்குச் சரியா ஆடி வெள்ளி வந்திருக்கிறதே.
நன்றி எஸ்.கே சார்.
வாழ்த்துக்கள் கண்ணன்.

VSK Friday, July 27, 2007 3:20:00 PM  

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, வல்லியம்மா.

கோவியாருக்கு இன்று பிறந்தநாளா?

அப்படியா கோவியாரே!?

சொல்லவே இல்லையே!

வாழ்த்துகள்!

அப்போ டிசம்பர்ல பிறந்த கோவி. கண்ணன் யார்?

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, July 27, 2007 8:14:00 PM  

//கோவி.கண்ணன் said...
ஒலி இணைப்பு வேலை செய்யவில்லை//

GK சார்.
Real Player தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். Real Player இல் நன்றாக வேலை செய்கிறது!

கடினமாக இருப்பின் சொல்லுங்கள்..mp3 செய்து அனுப்புகிறேன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP