பெயர் சூட்டு விழா--VSK[வீயெஸ்கே]
பெயர் சூட்டு விழா!!
நிகழும் விய வருடம் பங்குனி மாதம் 9-ஆம் நாள் வெள்ளிக்கிழமை நன்நாளில்,
இதுவரை "எஸ்கே" என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட சங்கர்குமார் என்கின்ற நான்,
ஏற்கெனவே வலைப்பூவில் இன்னொரு எஸ்.கே என்கின்ற "புள்ளி" வைத்த மூத்த பதிவர் இருக்கின்ற காரணத்தால்,
இன்று முதல்,
வீயெஸ்கே[VSK]
என புதுப் பெயரால் உங்கள் அனைவரின் ஆசியோடும், அன்போடும் வரவிருக்கிறேன்
என்பதை அறிவித்துக் கொள்கிறேன்!!!
மறந்துவிடாதீர்கள்!
எஸ்கே, இனிமேல்
வீயெஸ்கே!!!!!!!!!!!! [vsk]
அனைவரும் வந்து அன்பளியுங்கள்!
40 பின்னூட்டங்கள்:
என்னோட மொய் US$ 10,000/-
:)
விஎஸ்கே - we sk ?
எங்கள் எஸ்கே வா !
வாழ்த்துக்கள் !
Hello!
This work is very nice. thank you
have a good wekend
ஆமாங்க கோவியாரே!
முதலில் நூறு பாடல்களுக்கு ஒன்றாக சடையப்பரை வைத்தாரம் கம்பர்.
இது மிகவும் அதிகம் எனச் சொல்லி ஆயிரம் பாடல்களுக்கு ஒன்றாக வைக்கச் சொல்லி கோரிக்கை வர,
"ஆஹா! நான் அவரை நூற்றில் ஒருவராக நினைத்தேன்! நீங்களெல்லாம் சேர்ந்து அவரை ஆயிரத்தில் ஒருவராக்கி விட்டீர்கள்" என மகிழ்ந்தாராம் கம்பர்!
அது போல வெறும் "எஸ்கே"யாக இருந்த நான், இன்று முதல் "வீயெஸ்கே"[we SK]!!
மிக்க நன்றி!
Thank you, David!!!
இதைப் பார்க்காமல் போன இடுகையில் கேள்வி கேட்டு விட்டேனே. மாப்பு மாப்பு!
கொஞ்சம் வலது காதைக் காமிங்க.
வீயெஸ்கே, வீயெஸ்கே, வீயெஸ்கே.
இதுதானே செய்யணும்?
அதென்ன நினைச்சவுடனே மாத்திக்கிறீங்க? கெஸட்டுலே போடவேணாமா? :-)))))
அதான் படத்துலியே போட்டுக் காமிச்சாச்சே!
இன்னும் ஏன் காதைக் கடிக்கறீங்க, கொத்ஸ்!
உங்க அட்ரஸ் கொடுங்க!
ஒரு கேஸட்டுல போட்டு உங்களுக்கு அனுப்பிடறேன்!
:))
ஸாரி! துளஸி!
கெஸட்டுன்னு சொன்னின்ங்அளா?
நான் சரியா கவனிக்கலை!
கேஸட்டுன்னு நினைச்சுட்டேன்!
:))
அது என்னமோ புனித நீரில் முக்கி எடுக்கும் காட்சி மாதிரி இல்ல இருக்கு. எங்க வீட்டில் குழந்தை வலது காதில் மூணு வாட்டிப் பேரைச் சொல்லுவாங்க. அதைத்தான் செஞ்சேன்.
கிடைச்ச படம் அதான்!
கொஞ்சம் நம்ம கண்ணோட்டத்துல பாருங்க!
ஒருத்தர் தலையைப் பிடிச்சுக்க, அடுத்தவர் காதைக் குத்தற மாதிரி இமாஜின் பண்ணிக்கங்க!
:))
அடப் போங்க SK, SKவே ரொம்ப நல்லார்ந்திச்சு.. :(
எங்கள் உறவுக்கார தாத்தா ஒருவர் பெயர் VSK. ரொம்பவும் வம்பு பேசிக் கொண்டே இருப்பார். எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது..
அதனால் நான் உங்களை SK என்று தான் கூப்பிடுவேன். இப்பவே சொல்லிட்டேன்.. VSK எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது..
உங்கள் புதுப்பெயர் பொலிவாக அமைய முருகப்பெருமானை வணங்குகிறேன்.
இதுல இன்னொரு குழப்பம் வந்தது. எஸ்.கே அப்படீன்னு ஒருத்தர் வந்து பதிவு போடுறாரு. நான் கொழம்பிப் போய்த்தான் இருந்தேன். நல்லவேளை. VSKஆகீட்டீங்க. V for Victory.
வாழ்த்துக்கள் எஸ்.கே.
சாரி சாரி வி.எஸ்.கே.
இந்தக் குழப்பம் இப்ப புதுசா வந்தது இல்லீங்களே. தொடக்கத்துல இருந்து இருக்கிறது தானே. ஒரு பக்கம் திருப்புகழ் இன்னொரு பக்கம் ... என்று சொன்னவர்களும் இந்தக் குழப்பத்தில் தான் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். அவர்களும் அவர்களின் நண்பர்களும் மெதுமெதுவாக நீங்கள் இருவரும் வெவ்வேறு ஆட்கள் என்று புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்; இல்லை என்றால் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.
இணையத்தில் இந்தக் குழப்பம் இயற்கை. அறிவியல் தமிழன் (இப்ப ஆளைக் காணோம்) செந்தில் குமரன் முதலில் குமரன் என்ற பெயரில் தான் வந்தார். ஐயா. நீங்களும் குமரன்னு வந்தா குழப்பம் வருமேன்னு சொன்னேன். அவர் என்னை எல்லாரும் குமரன்னு தான் கூப்புடுவாங்க; ஆனா நீங்க சொல்றது சரி தான்; அதனால குமரன் எண்ணம்ன்னு வச்சுக்கிறேன் என்றார். அதிலும் சில நண்பர்கள் குழம்பினார்கள். அந்தக் குழப்பத்தைப் பார்த்து அவரே பின்னர் செந்தில் குமரன் என்று போடத் தொடங்கிவிட்டார்.
நான் எப்பவுமே எஸ்.கே.ன்னு தான் எழுதுறது. இனிமே வி.எஸ்.கே.ன்னு எழுதணுமா? சரி. அப்படியே செஞ்சுடலாம்.
//அதனால் நான் உங்களை SK என்று தான் கூப்பிடுவேன். இப்பவே சொல்லிட்டேன்.. VSK எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.. //
எனக்கும்தாங்க பொன்ஸ்!
ஆனா, என்ன பண்றது?
அவரே வந்து கேட்டுட்டாரு.
மறுக்க முடியலை.
ஆனா, இது வந்து பதிவுகளைப் பதியறதுக்கும், நான் போய் பிற இடங்களில் பின்னூட்டம் இட மட்டுமே!
உங்களுக்கெல்லாம் நான் எப்பவும் எஸ்கேதான்!:)
நீங்களும் அப்படியே கூப்பிடலாம்.
அதில் ஒன்றும் குழப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
சரிதானே!
:))
//நல்லவேளை. VSKஆகீட்டீங்க. V for Victory.//
வாழ்த்தியதற்கு மிக்க நன்றி, ஜி.ரா.
அவர் வந்து அடிக்கடி பதியாததால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என இருந்தேன். ஆனால், நேற்று ரொம்ப பேர் வந்து நீங்களா அதுன்னு கேக்க ஆரபித்ததும், இந்த முடிவெடுத்தேன்! பொன்ஸுக்குச் சொன்னதையும் பார்க்கவும்.
//சாரி சாரி வி.எஸ்.கே.//
வாழ்த்துக்கு நன்றி, திரு. சிவமுருகன்.
ஸாரில்லாம் எதுக்குங்க!
:))
//நான் எப்பவுமே எஸ்.கே.ன்னு தான் எழுதுறது. //
இந்தப் பெயர் மாற்றம் எனக்குத்தாங்க. பதிவிலும், பின்னூட்டத்திலும் அவரிலிருந்து வேறுபடுத்திக் காட்ட மட்டுமே!
என் பதிவில் நீங்க என்னை எப்பவும் போல எஸ்கேன்னு கூப்பிட்டா ஒண்ணும் குழப்பம் வராதுன்னு நினைக்கிறேன்!
:)
சார், புதுப்பெயர் நன்றாக இருக்கிறது!
உங்களை அடையாளங் காட்டுவது -'யாமிருக்க பயமேன்' என்று சொல்லும் (சங்கரனார்) குமரனின்
படம்தான்.
அதைமட்டும் யாருக்காகவும் மாற்றிவிடாதீர்கள்!
அவர் மொய் எழுதினார் சரி?
நீங்க வந்து வாழ்த்தினீங்களே!
அதைச் சொல்லுங்க!
மகிழ்வா இருக்கு ஆசானே!
//உங்களை அடையாளங் காட்டுவது -'யாமிருக்க பயமேன்' என்று சொல்லும் (சங்கரனார்) குமரனின்
படம்தான்.
அதைமட்டும் யாருக்காகவும் மாற்றிவிடாதீர்கள்!//
செல்வம் தந்த பழனியாண்டி அவன்!
என்னுடன் எப்போதும் இருப்பான்!
முருகனருள் முன்னிற்கும்!
அட இந்தியப் பயணம் போய் வரதுக்குள்ளாற இத்தினீ மாற்றமா? (சென்னைத் தமிழும் கூடவே பயணப்பட்டு விட்டது)
விஎஸ்கே என்றால் வித்தகர்.எஸ்கே
திருப்புகழ் வித்தகர் அல்லவா?
அதனால் மிகவும் பொருத்தம் தான்!
V for Victory
V for Visagan - விசாகனும் முருகன் தானே!
அட! இன்னாபா! வண்ட்டியா!
எப்போ வந்தே!
மெட்றாஸ்ல நம்மளைக் கண்டுக்காமப் பூட்டியேப்பா!
சரி வுடு!
நம்மாளு பேரை மாத்திக்கிட்டானாம்.
அவண்ட்ட ஸொல்லிடு!
அது வள்ளுவர்எஸ்கேன்னு நான் நினைக்கிறேன்னு!
சீக்கிரம் எதுனாச்சும் நல்ல எலக்கியப் பதிவோட சீக்கிரம் வா ரவித்தம்பி!
VSK ஐயா,
/* உங்கள் புதுப்பெயர் பொலிவாக அமைய முருகப்பெருமானை வணங்குகிறேன். */
அருமை நண்பர் கோ.இராகவன் சொன்னதை வழிமொழிகிறேன்.
ஐயா, ஒரு சின்னக் கேள்வி.
இப் பதிவில் இரண்டாவதாகப் பின்னூட்டம் இட்டுள்ளவர் யாரென உங்களுக்குத் தெரியுமா?
மனுசன் வேற்றுமொழிக்காரர் போல் இருக்கு. மொழி புரியாவிட்டாலும் சிலரின் பதிவுகளுக்கு வந்து பாராட்டிச் செல்கிறார். தமிழ்மணத்தில் வேறொரிவரின் பதிவிலும் இந்த அன்பர் பின்னூட்டம் எழுதியிருந்தார்.
மொழி புரியாவிட்டாலும், வந்து நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
வாழ்த்துக்கு நன்றி, திரு.வெற்றி.
அந்த இரண்டாவதாகப் பின்னூட்டமிட்ட அன்பர் யாரென எனக்குத் தெரியாது.
சொன்ன சொற்கள் வாழ்த்தி இருந்ததாலும், தவறாக ஒன்றும் இல்லையென்பதாலும் அனுமதித்தேன்.
:))
இனி எஸ்கே, வீயெஸ்கே.
பேரில் என்னாருக்கு. உள்ளே இருக்கும் விஷயத்தில் அன்பிருக்கு. அது போதும்.
ஆரம்பத்தில் நானும் குழம்பியிருக்கிறேன்.
எலாருக்கும் vக்கு அர்த்தம் சொல்லறாங்க. நானும் சொல்ல வேண்டாமா? V for Vambu! ஹாஹாஹா!
எஸ்கே சார்,
நீங்கள் வேல்முருகனருள் பெற்ற எஸ்கே என்பது ஆத்திகம் வாயிலாக எல்லோரும் அறிந்ததுதான் என்றாலும் VSK எனும் நாமகரணம் கொண்டு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றீர்கள்!
நன்றி!
அன்புக்கு என் மனமார்ந்த நன்றி, திரு. ஹரிஹரன்!
வம்புக்கு மொத்தக் குத்தகையும் எடுத்திருக்கிற கொத்தனாரா என்னைப் பார்த்துச் சொல்வது?
வேண்டுமானால், "வம்பில்லா"எஸ்கே என வைத்துக் கொள்ளலாம்!
:))
அச்சச்சோ இவ்ளோ லேட்டா இதைப்பாக்றேனே? வீஎஸ்கே நல்லாதான் இருக்கு! மூணு எழுத்துல பேர் இருந்தா ஒரு ராசிதான்னு சொல்வாங்க.எம்ஜிஆர்.ரஜினி, சிவாஜி,கமல்,சுஜாதா,ஷைலஜா(ஓவர்தான் இல்ல?:))
அந்தக் கடைசிப் பெய்ர ஓக்கே!
மத்ததெல்லாம் நிஜமாவே ஓவர்தான், ஷைலஜா!
என்னைப்ப ொறுத்தவரை நீங்கள் என்றும் எப்போதும் "DSK (Dear Sk)".
எஸ்கே விஎஸ்கே ஆனமாதிரி அனானி ஆப்ஷனை திறந்துவிட்டு அனானி பதிவர்களையும் களத்தில் இறக்குங்கள்:))
//விடாதுகருப்பு said...
இப்போ புரியுது அய்யா. சைபர் பிராமனா நடத்துற ஆள்தான் காரணமா? நீங்கள் நல்லவர் அய்யா. அந்த ஆள் ** ** ******.//
உங்களது நல்ல மனதுக்கு மிக்க நன்றி, திரு. வி.க.
ஆனால் தனி மனிதத் தாக்குதலை நான் என் பதிவில் அனுமதிக்க இயலாததற்கு வருந்துகிறேன்.
மன்னிக்கவும்.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்!
உங்களது பின்னூட்டம் எதுவும் எனக்கு வரவில்லையே திரு. ஆதிசேஷன்.
வாழ்த்தியதற்கு நன்றி.
//அனைவரும் வந்து அன்பளியுங்கள்//
நியாமான வேண்டுகோள்தான். பலருக்கு மொய்யிட்டவர் தனக்கு மொய்யிடச் சொல்வதுபோல் இருக்கிறது.
மற்றவர்கள் பரவாயில்லை. அவரவர்கள் வசதிக்கு செய்தால் போதும். ஆனால் இந்த பெயர் மாற்றத்துக்கு ஒரு வகையில் பலமான காரணமாகவே இருந்துவிட்ட நான் எவ்வளவு அன்பளிக்கவேண்டும்?
எனக்கு மிகமிகப் பிடித்த திரைப்பாடல் வரிகள்:
"உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது அதன்
உள்ளிருந்து வாழ்த்துவது உன்னருளன்றோ - கந்தா
உன்னருளன்றோ - முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா...."
வழக்கமாவாவது சொந்தக்கவிதை மொய் வரும்.
நிறையக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, கண்ணதாசன் வரிகள் சொல்லி இருக்கீங்க!
நிறையவே அன்பு கொடுத்ததாக "வைத்துக்" கொள்கிறேன்!
மிக்க நன்றி, ஓகையாரே!
வாழ்த்துக்கள் !
தென்றலுக்கு நன்றி!
ஓகே! தகவலுக்கு நன்றி :-)
Thanks for leeting us know
அன்புக்கும், வருகைக்கும் நன்றி, சேதுக்கரசி, தங்கவேல் அவர்களே!
Post a Comment