"பாடி, ஆடி, எழுந்தருளாயே!"
"திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி"
மாணிக்கவாசகர் அருளியது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்பேசும்போது
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
மாலறியா நான்முகனுங் காணா மலையினை
மானே நீ நென்னலை நாளை வந்துங்களைஅன்னே இவையுஞ் சிலவோ
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
பைங்குவளைக்கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20
போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !
அருணண் இந்திரன் திசை அணுகினன்
கூவின பூங்குயில்; கூவின கோழி
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
பூதங்கள் தோறும் நின்றாய்
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
அது பழச்சுவையென, அமுதென
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே
புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்போக்குகின்றோம் அவமே
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [30]
[ திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]
"திருச்சிற்றம்பலம்"
14 பின்னூட்டங்கள்:
எஸ்கே ஐயா,
நேற்றோடு பாவை முடிந்தது என்று நினைத்தேன் ... கன்னிப் பொங்கலுக்கு போனஸாக இந்த பாடல் ?
நன்றாக இருக்கிறது !
ஆமாங்க! இது மாட்டுப் பொங்கல்!
நாளை ஒரு காணும் பொங்கலும் உண்டு!
பதிவை ரசிடா என்றால்..
பின்னூட்டத்தை ரசிக்கிறது எனது மனது.
:-))
நல்ல கேள்வி,அருமையான பதில்.
நீங்களும் பொங்கல் போனஸ் அப்படின்னு பேரு வெச்சிருக்கணும் போல இருக்கே.
நம்+தீ = நந்தீ,
நந்தி என்றாகியது என்றார் ஆன்றோர்.
ஊழித்தீயாம் பூரணத்துடன் நம் தீயும் கலந்திடும் நாளும் வந்திடாதோ?
சத்தமில்லாமல் படித்துப் போவேன் எனச் சொன்னதை மறக்காமல்,
குறும்பாக இப்படி ஒரு பின்னூட்டமா, திரு.குமார்!
:))
ஏற்கெனவே இரண்டு பேர் [உங்களையும் சேர்த்துதான்!] இந்தப்பெயரில் பதிவிட்டு விட்டார்கள்!
அதான், கோவியார் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லி விட்டாரே!
முதல் வரிகளைக் கோர்த்து மாட்டிய 'மாட்டுப் பொங்கல்'!!
அப்படியே வைத்துக் கொள்வோம்!
:)
//
ஊழித்தீயாம் பூரணத்துடன் நம் தீயும் கலந்திடும் நாளும் வந்திடாதோ? //
நம் தீ எரிந்தழிந்து
நந்தியுடன் கலந்து
சிந்தியாமல் இருக்க
எந்தையும் அருள்வான்!
நன்றி ஐயா!
// SK said...
ஆமாங்க! இது மாட்டுப் பொங்கல்! //
ஆமாம் எஸ்.கே. மாட்டுப் பொங்கல்தான். இறைவனின் அருளோடும் திருவடியோடும் நம்மை மாட்டுப் பொங்கல்தான். :-)
தமிழை முத்தாக்கி அதற்கு சைவநெறி என்னும் ஒளிச்சத்தாக்கி தன் விளக்கம் என்னும் தங்கக் கம்பியில் கொத்தாக்கித் தந்த எஸ்.கே அவர்களுக்குத் தமிழர்கள் அனைவர் சார்பிலும் நன்றி.
கொடுப்பவனும், எடுப்பவனும் அவனே ஆகும் போது, அனைத்தையும் அறுக்கச் செய்பவனும் அவனாகத்தானே இருக்கமுடியும் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், ஜிரா!
இப்பதான், வேறொரு பதிவில், "பதிவுலக வாரியார்" எனத் தங்களுக்குச் சூட்டப்பட்ட பட்டத்தைக் கண்டு மகிழ்ந்து வந்தேன்!
வந்தவுடனேயே, வாரியார் கையால் ஒரு வாழ்த்து!
மிக்க நன்றி, பதிவுலக வாரியார் அவர்களே!
மு.மு.
// SK said...
இப்பதான், வேறொரு பதிவில், "பதிவுலக வாரியார்" எனத் தங்களுக்குச் சூட்டப்பட்ட பட்டத்தைக் கண்டு மகிழ்ந்து வந்தேன்!
வந்தவுடனேயே, வாரியார் கையால் ஒரு வாழ்த்து!
மிக்க நன்றி, பதிவுலக வாரியார் அவர்களே! //
ஆகா! இதென்ன கூத்து! அதெந்தப் பதிவில்?
மழை பொழியும் காரியார் போலத் தமிழ்மழை பொழியும் வாரியார் எங்கே! நான் எங்கே! வாழ்த்துவதைக் கூட வெண்பாவில் வாழ்த்தும் அந்த ஆசிரியப்பா எங்கே. நான் வெறும் களிப்பா!
பாவையும்,எழுச்சியும் முடிந்தது. இனி ஆரம்பம் என்ன.
போனஸ் ஒரு நாளோடு கழிவதில்லையே.
தினம்தோறும் முடிந்தபோது பதிக்க வேண்டுகிறேன்.
//நான் வெறும் களிப்பா!//
ஜிரா,
உங்களோடும் எஸ்கே ஐயாவோடும் களிப்பு !ப்பா !
:)
Post a Comment