"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]
"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி" [2]
[முதல் பாகம் இங்கே!]
"இப்ப நான் இன்னாத்துக்கு பூராக் கதையும் வெலாவாரியா சொல்றேன்னா" எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார், ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டே!
"இன்னாத்துக்குன்னா, அப்பத்தான் ஒனக்கு இதுக்கப்பால நடந்தது என்னான்றது புரியும்.
ம்ம்ம்ம்! எங்க விட்டேன்?.... ஆங்!ஆபிசருங்கல்லாம் கையப் பெசஞ்சுகிட்டு நின்னாங்க!
ஏன்னா, வுடறேன்னு சொன்னது 15 டிஎம்சி; அப்பிடி இப்பிடி ஆவியாப் போனாக்கூட ஒரு 12 டிஎம்சி தண்ணியாவுது பூண்டிக்கு வந்து சேந்ந்திரும்னு நம்ம ஆளுங்கள்லாம் கணக்கு போட்டு வெச்சிருந்தாங்க!
ஆனா, நடந்தது இன்னான்னா, தொண்ணித்தாறுலேர்ந்து, டூ டவுசண்டு வரைக்கும் [1996 - 2000]வர்ஷந்தோரும் வந்த தண்ணி இத்த வுட ரொம்ப கம்மி!
ஒரு ரெண்டு தபா வெறும் அரை டிஎம்சி கூட வரலை இந்த நாலு வர்ஷத்துல.
அத்தத்தான் இவனுக போய் பார்த்திட்டு வந்து 'லபோ-திபோ'ன்னு அடிச்சிகிட்டானுங்க.
ஆக மொத்தம், தெலுங்கு கங்கை,..... வெளங்கலீங்க!
சனத்தொகை கூடிப்போயி, மானமும் பொய்யாப் போயி, மெட்ராஸ் சனங்கல்லாம் தண்ணிக்கு ஆலாப் பறக்க ஆரம்பிச்சாங்க!
இப்பதான் நான் சொன்ன அதிசயம் நடந்துச்சு!
பொங்கல் களிச்சு ஒரு 4 நாளு போயிருக்கும் 2002-ல,... சனவரி பத்தொம்பதாந்தேதி.
பெங்களுர்ல சாமி கட்டின ஆசுபத்திரிக்கு மொதலாம் ஆண்டுவிளா!
பெரிய பெரிய ஆளுங்கள்லாம்.. வாஜிபாயி என்ன, கவுனர் என்னான்னு அத்தினி பேரும் குந்திருக்காங்க!
சாமி எளுந்து பேசறாரு. ஆசுபத்திரியோட நோக்கம், ஒடம்பை எப்பிடி சரியா கவனிசுக்கணும்னுல்லாம் பேசிகினே வந்தவரு, டபார்னு ரூட்டை மாத்தினாரு.
மெட்ராஸ் சனங்களோட தண்ணிக் கஸ்டத்தைப் பத்தி பேச்சு திரும்புது.
எப்டில்லாம் கஸ்டப்படறாங்க, வூட்டுக்குப் பக்கத்துல ஓடற அயுக்கு தண்ணியைவெல்லாம் கொணாந்து பொம்பளைங்க சமைக்கறதுக்கும், குடிக்கறதுக்கும் யூஸ் பண்றாங்கன்னு கேக்கறவங்க மனசெல்லாம் கரையற மாரி பேசறாரு.
கூடவே, ஆருமே எதிர்ப்பாக்கத, ஒரு அறிவிப்பையும் வுடறாரு.
இந்தமாரி, சாமி... அல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்காரு; துட்டு படைச்சவன்லாம், லாரி, டேங்க்ல தண்ணி சப்ளை பண்ண வெசுகிட்டு குஷாலா கீறாங்கோ. ஏளைபாளைங்களைப் பத்தி ஆரும் கவலப்படற மாரி தெரியல. அதுனால.... இவங்க கஸ்டத்தை போக்கறதுன்னு தான் முடிவு பண்ணியாச்சுன்னு!
அவ்ளோதான்.. அங்க இருக்கறவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம்!
சாமி ஒரு நல்ல வார்த்தை சொன்னார்னா, முடிக்காம வுடமாட்டாரு. இனிமே தீந்துது சென்னையோட கஸ்டம்லாம்னு.
மளமளன்னு காரியம் சும்மா மிலிடரி வேகத்துல ஆரம்பிச்சுது.
மொதல்ல ஒரு குரூப் ஆளுங்க, இன்னாடது. ... அகிலபாரத சத்யசாயி சேவா ட்ரஸ்டு... அதிலேர்ந்து போயி, ஆந்திரா கவர்மெண்டைப் பாத்தாங்க.
நம்ம என்டிஆர் மாப்ள சந்திரபாபு நாயுடுதான் சீப்மினிஷ்டர். ஏற்கெனவே, ஆந்திராவுல இதுமாரி ஏகப்பாட்ட வாட்டர் ப்ராஜெக்டுல்லாம் இந்த ட்ரஸ்டு பண்ணி ஒரு 20 லச்சம் பேருங்களுக்கு தண்ணிவசதி பண்ணினதுல்லாம் அவருக்குத் தெரியும்.
ஒடனே சரி, இதுக்கு இன்னா டெக்னிகல் எல்பு[ஹெல்ப்] வோனுமோ அத்தெல்லாம் தாரேன்னுட்டாரு.
எப்பிடியாவது, சென்னைக்கு தண்ணி கிடைக்கும்னா, எது வோணும்னாலும் செஞ்சுக்கலாம்னும் சொல்லிட்டரு.
இப்போ இஞ்சினியருங்கல்லாம் போயி, எதுனால தண்ணி கண்டலேறுலேர்ந்து பூண்டிக்கு போய் சேரலேன்னு டெஸ்டு பண்ணினாங்க. முன்னியே சொன்ன மாரி, காவா[கால்வாய்] சரியாத் தோண்டலை; தோண்டினதும் தூந்து போச்சு; அங்கங்க தேங்கற தண்ணியும் அடுத்தவன் வயப்பக்கமா பூடுது..... இப்படி அல்லாத்தையும் கண்டுபிடிச்சு லிஸ்டு ஒண்ணு தயார் பண்ணினாங்க.
(சில படங்கள்]
கடைசில, ஒரு ரிப்போர்டு தயார் பண்ணினாங்க.
கண்டலேருலேர்ந்து, பூண்டி வரைக்கும் திரும்பவும் புதுப்பிச்சாலொளிய, இந்த கால்வாய்க்கு இனிமே விமோசனமே இல்லேன்னு கண்டிஷனா இருக்கு அதுல!
மொத்த நீளம் இம்மாம் தெரியுமா?
150 கிலோமீட்டரு.
புதுப்பிக்கறதுன்னா இன்னான்னு நெனச்சே!
கண்டலேறு ரிசர்வாயரைப் பலப்படுத்தி, மளை பெய்யாத காலத்துலியும், தண்ணியைத் தேக்கி வைக்கற அளவுக்கு வலுவாக் கட்டணும்
ஏற்கெனவே நோண்டி, தூந்து போன வாய்க்காலை ஆளமாக்கணும்.
கரையை அகலப் படுத்தணும்.
தண்ணி கசியாமப் பாத்துக்கணும்.
இதுக்கான மொத்தச் செலவையும் ட்ரஸ்டே எடுத்துக்கும்னு சொல்லச் சொல்லி சாமி உத்தரவு போட்டுட்டாரு.
ஒர்த்தர்கிட்ட ஒரு நயாபைஸா கேக்கலை. ஒரு நோட்டிசு வுடலை.
லார்சண்ட் டுப்ரோ [L&T] கம்பெனி இந்த வேலைய தானே செஞ்சு தரேன்னு சொல்லிச்சு.
இப்பிடியே பல பேரு முன்னுக்கு வந்தாங்க.
வேலை ஜரூரா ஆரம்பிச்சு அல்லாம் முடிஞ்சுது.
ஒரு வெள்ளோட்டம் போல தண்ணியத் தொறந்து வுட்டுப் பாத்தாங்க!.........
.........பாதித் தண்ணி கூட பூண்டி வந்து சேரலை!!!!
ஏன்???????????!
[நாளை முடிவுறும்!]
ஜெய் சாய்ராம்!
6 பின்னூட்டங்கள்:
முதன்மையான கதையை நல்லா சொல்லியிருக்காரு மன்னாரு. ஆக இந்த அறிவிப்பை சுவாமி செய்தது 2002ல். அதனை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கு?! நடப்பது நடக்கும் போது தானே நடக்கும். தன்னை வாழ்க்கை முழுக்கத் திட்டியவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அவர்கள் வீட்டிற்கே சென்று வந்த பின் தான் தமிழக அரசு இந்த உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுவாமியின் எண்ணம் போல.
அப்படி நீங்க நினைக்கிற மாதிரி இல்லீங்க, குமரன்!
எல்லாரும் நல்லவரே!
இன்னும் ஒருநாள் பொறுங்க!
நாளையப் பதிவு உங்களுக்குக் கூட ஆச்சரியமா இருக்கும்!
சாய்ராம்.
இந்த கூத்து ஏற்கனவே ஒரு தபா வேற நடந்தாச்சா? இந்த மன்னாருக்கு சஸ்பென்ஸ் வைக்கறதே வேலையாப் போச்சு. சரி நாளைக்கும் வரேன்.
இவ்வளவு பெரிய விஷயம் விவரிச்சு சொல்றேன்.
ஒரே ஒரு வரிதான் பின்னூட்டமா, கொத்ஸ்!
ரொம்ப அநியாயம்!
:)
என்னது எல் அன்ட் டி,அங்கு போச்சா?
நான் அங்கு இல்லை அப்போது அதனால் தெரியவில்லை.
நீங்கள் சொல்லியிருந்த பல விஷயங்கள் (தரக்கட்டுப்பாடுகள்) அடையவேண்டுமென்றால் தவறாமல் அவர்கள் செய்வார்கள்,ஆனால் என்ன பணம் கொஞ்சம் கூட கேட்பார்கள்.
பெரிய வேலைகள் செய்வதில் அவர்களை மிஞ்ச அவ்வளவாக ஆட்கள் இல்லை.
சாமி அப்படி சொன்னதை நீங்க எழுதின பிறகு தான் எனக்கு தெரியும்.
அவங்க பண்ணின அபாரமான ஒரு வேலையைப் பத்தி தான் நாளைக்கு!
நன்றி, குமார்!
Post a Comment