Thursday, March 19, 2009

"பற! பற! பட்டாம்பூச்சி! பற! பற!”

"பற! பற! பட்டாம்பூச்சி! பற! பற!”

நானுண்டு என் பதிவுண்டு என சமீப காலமாகத் தனித்திருந்தேன்..... கூட்டுப் புழு போல!

”வந்துன் வண்ணத்தைக் காட்டு!” என
என்னருமை நண்பர் கோவியார் விருதளித்துப் பெருமைப் படுத்தி இருக்கிறார். அவர்க்கு என் முதற்கண் நன்றி! என்னை இப்படி மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று! அதை நன்கே செய்து இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்!

சரி! என் பங்குக்கு ஏதோ சொல்லி வைக்கிறேன்!


பட்டாம்பூச்சி பறக்கிறது!
வண்ணச் சிறகை விரிக்கிறது!
இங்குமங்குமாய்த் திரிகிறது!
எதனை நமக்குச் சொல்கிறது?

சிறகடித்துப் பறக்கின்ற காலமிங்கு வரும்வரைக்கும்
பிறர்மனதைக் கவருகின்ற பட்டாம்பூச்சியின் வாழ்க்கையிங்கு
குறையிலாது வாழவேண்டின், வருங்காலம் வரும்வரையினில்
பொறுமையாகக் காத்திருத்தலின் அவசியத்தைச் சொல்கிறது!

உனக்கென விதித்தது உனக்கென நிகழும்!
அதுவரை பொறுக்க மனமுண்டா உனக்கு?

புழுவாய்ப் பிறந்து அல்லல் படுவாய்
வழியிலே மிதிபட்டு நீயும் சாவாய்
அதனையும் தாண்டி விடிவொன்று உண்டு
இதனை நடத்தும் இறைவன் அருளால்!

புழுவாய் ஊர்ந்தாய் சிலகாலம்
கிடைத்ததைத் தின்றாய் அப்போது
நாளை நிகழும் நிகழ்ச்சியை அன்றே
இறைவன் உணர்த்தினான் உன்னுள்ளே!

உன்னுள் நிகழ்ந்த சில மாற்றம்
உன்னை ஒளியச் செய்ததங்கு!
உன்னால் இனிமேல் எதுவுமில்லை
சும்மா இருப்பாய் என்றான் இறைவன்!

தன்செயல் இனிமேல் இல்லையென்று
தனக்குள் புரிந்த புழுவதுவும்
இலையினைப் பற்றி நின்றங்கோர்
கூட்டினைக் கட்டியே சுருங்கியது!

கூட்டுப் புழுவினுள் ஓர் அதிர்வு!
தன்னுடல் மாறும் விந்தையினைத்
தானே உணராத் தன்மையினை
இறைவன் பார்த்துச் சிரித்திருந்தான்!

விளைந்தது மாற்றம் புழுவினிலே!
வண்ணம் பிறந்தது உடலினிலே!
இறக்கை முளைத்து உடல் விரிய
கூட்டுப் புழுவும் மாறியதே!

முழுமை இதுவெனப் புரிந்தவுடன்
செழுமை உடலினில் ஏறியதும்
கூட்டினைத் தகர்த்துப் பட்டாம்பூச்சி
விட்டு விடுதலை ஆனதுவே!

கட்டுகள் இங்கே தகர்த்துவிட்டால்
விட்டு விடுதலை மிகச் சுகமே!
பட்டாம்பூச்சி நமக்குணர்த்தும்
பாடம் இதுவே! புரிந்திடுவீர்!

வந்தது எல்லாம் சொந்தமில்லை!
வருவது எதுவும் பந்தமில்லை!
தருபவன் ஒருவன் மேலிருக்கான்!
உறவது அவனே என்றுணர்வோம்!

பட்டாம் பூச்சியாய் வாழ்ந்திருப்போம்
கவலைகள் இன்றிக் களித்திருப்போம்!
வருவதை என்றும் வரவில் வைப்போம்!
சென்றதை மறந்து திரிந்திருப்போம்!

இன்னொரு செய்தியும் சொல்லிடுவேன்
நன்நெறி சொல்லிடும் செய்தியிது!
பட்டாம்பூச்சிகள் தேவதூதர்கள்!
நல்லதைச் சொல்லிடும் இறையின் ஏவல்கள்!

நாளை மாலை சோலை செல்கையில்
பட்டாம்பூச்சி பறக்கக் கண்டால்
மனதில் மகிழ்ச்சி கொண்டிடுவீர்
நல்லதே நடக்கும்! நம்பிடுவீர்!


இப்ப யாரையாவது கூப்பிடணுமாமே! யாரைக் கூப்பிடலாம்?

1. வலையுலகப் பட்டாம்பூச்சி
ஷைலஜா! இந்த மாதம் 18-ம் தேதியன்று மீண்டும் பிறந்தவர்!
இயல், இசை, நாடகம் என அனைத்திலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றவர்!

2. என்னருமை நண்பர்
சுல்தான்! துபாயில் பணியாற்றுபவர்! அடக்கம் என்பதன் மறுவுருவம்!
அமைதியாகப் பதிவுலகில் இருந்து,அவ்வப்போது எழுதி வருபவர்! இனியவர்!

3.
நிலாரசிகன்! கனவுலகக் கவிஞன்! கதைகளும் எழுதுவார்! பொருள் பொதிந்த வரிகளிலே
ஓராயிரம் செய்தி சொல்லி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்! கற்பனைவளம் மிக்கவர்! பொருத்தமானவர்!

இவர்கள் மூவரையும் அழைக்கிறேன், பட்டாம்பூச்சி பறக்கவிட!

வாய்ப்பளித்த
கோவியாருக்கு மீண்டும் நன்றி!!

பட்டாம் பூச்சியை எப்படி விடுதலை செய்யலாம் ?



1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

10 பின்னூட்டங்கள்:

ரவி Thursday, March 19, 2009 2:01:00 AM  

பட்டாம்பூச்சியாருக்கு வாழ்த்துக்கள்.........

கோவி.கண்ணன் Thursday, March 19, 2009 2:22:00 AM  

ஆகா, பட்டாம்பூச்சிக்கு இம்மாம் பெரிய கவிதையா ?

இவ்வளவு விரைவாக (கவிதை) எழுதியதற்கு பாராட்டுகள்.

ஆன்மிகம், அறிவியல், மெய்ஞானமெல்லாம் கலந்து எழுதி வண்ணமயமாக்கிட்டிங்க.

//இன்னொரு செய்தியும் சொல்லிடுவேன்
நன்நெறி சொல்லிடும் செய்தியிது!
பட்டாம்பூச்சிகள் தேவதூதர்கள்!
நல்லதைச் சொல்லிடும் இறையின் ஏவல்கள்!
//

சொந்த கருத்து திணிப்பு வன்மையாக எதாவது சொல்லனும்னு தோணுது....
:)))))


நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி Thursday, March 19, 2009 3:17:00 AM  

அருமை ஐயா!
வாழ்த்துகிறேன்!!
விருதுபெற்ற சகோதரி ஷைலஷா, உடன்பிறப்புகள் சுல்தான், நிலா ரசிகன் ஆகியோருக்கு வாழ்த்துகள்!

VSK Thursday, March 19, 2009 9:57:00 PM  

வாங்க செந்தழலாரே!
ரொம்ப நாளாச்சு!
நல்லா இருக்கீங்களா!
மிக்க நன்றி!

VSK Thursday, March 19, 2009 9:58:00 PM  

நன்றி சிபியாரே!

VSK Thursday, March 19, 2009 10:09:00 PM  

//ஆகா, பட்டாம்பூச்சிக்கு இம்மாம் பெரிய கவிதையா ?

இவ்வளவு விரைவாக (கவிதை) எழுதியதற்கு பாராட்டுகள்.

ஆன்மிகம், அறிவியல், மெய்ஞானமெல்லாம் கலந்து எழுதி வண்ணமயமாக்கிட்டிங்க.

//இன்னொரு செய்தியும் சொல்லிடுவேன்
நன்நெறி சொல்லிடும் செய்தியிது!
பட்டாம்பூச்சிகள் தேவதூதர்கள்!
நல்லதைச் சொல்லிடும் இறையின் ஏவல்கள்!
//

சொந்த கருத்து திணிப்பு வன்மையாக எதாவது சொல்லனும்னு தோணுது....
:)))))//

பாராட்டுக்கு நன்றி கோவியாரே!
“சித்தர்” நினைவிலிருந்தால் இதே கருத்தை அங்கும் சொல்லியிருப்பது தெரிய வரும்!
பரபரப்பான இந்த ”காலத்தில்”, அதெல்லாம் எங்கு நினைவிருக்கப் போகிறது?
:))

VSK Thursday, March 19, 2009 10:10:00 PM  

நன்றி, திரு. ஜோதிபாரதி அவர்களே!

கோவி.கண்ணன் Thursday, March 19, 2009 11:52:00 PM  

//பாராட்டுக்கு நன்றி கோவியாரே!
“சித்தர்” நினைவிலிருந்தால் இதே கருத்தை அங்கும் சொல்லியிருப்பது தெரிய வரும்!
பரபரப்பான இந்த ”காலத்தில்”, அதெல்லாம் எங்கு நினைவிருக்கப் போகிறது?
:))
//

பழையன கழிதல் தானே சுழலும் 'காலத்திலும்' கட்டாயம் நடக்கிறது. நானும் அதிலொரு அங்கம் தான்

Anonymous,  Friday, March 20, 2009 12:45:00 PM  

//Legend of the Butterfly (For Butterfly Release)
According to an American Indian Legend - If anyone desires a wish to come true they must first capture a butterfly and whisper that wish to it. Since a butterfly can make no sound, the butterfly can not reveal the wish to anyone but the Great Spirit who hears and sees all. In gratitude for giving the beautiful butterfly its freedom, the Great Spirit always grants the wish. So, according to legend, by making a wish and giving the butterfly its freedom, the wish will be taken to the heavens and be granted//

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP