Friday, May 05, 2006

arasiyal

'அலை' வீசட்டும்!
'முரசு' ஒலிக்கட்டும்!
நமது சின்னம் 'முரசு'!!
தேர்தல் நாள் மே 8-ம் தேதி!
இரு கழகங்களுக்கும் ஓய்வு கொடுப்போம்!

11 பின்னூட்டங்கள்:

- யெஸ்.பாலபாரதி Friday, May 05, 2006 12:28:00 AM  

தலிவா.. பேசாம.. முருகன் படத்தை தூக்கீட்டு.. மதுரைக்காரர் படத்த வச்சுடுங்க...
:)))))

Unknown Friday, May 05, 2006 12:31:00 AM  

கருத்து கணிப்புபடி விஜய்காந்த் விருத்தாசலத்தில் ஜெயிப்பது உறுதியாம்.ஆனா மத்த இடங்களில் சந்தேகமாம்.4 அல்லது 5 தொகுதிகள் கிடைக்கலாம்.10% ஓட்டு கிடைக்கலாமாம்.

தொங்கு சட்டசபை அமையலாம் என்கின்றனர்.ஒன்றும் புரியவில்லை.கார்த்திக் ஏதோ ஒன்று இரண்டு தொகுதிகளில் ஜெயிப்பார் என நினைக்கிறேன்

குழலி / Kuzhali Friday, May 05, 2006 1:12:00 AM  

//இரு கழகங்களுக்கும் ஓய்வு கொடுப்போம்!
//
எது அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் தானே... கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்

krishjapan Friday, May 05, 2006 1:52:00 AM  

//Wednesday, May 03, 2006 7:44:40 PM மணிக்கு, SK சொன்னது…இராம.கி அய்யா அவர்களின் பதிவில்-
"தனித்து நிற்கும் தைரியம்" ஒன்றே எனக்கு சமாதானம்தான்.

மற்றவர்களை இதற்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு கிண்டல் பண்ண வருமாறு அழைக்கிறேன்!//

இதற்கு
Wednesday, May 03, 2006 9:53:52 PM மணிக்கு, Krishna சொன்னது…

முதல்ல, இவரும் முயற்சி பண்ணினார், எதிர்பார்த்த தொகுதி கிடைக்கவில்லை என்பதால் தனித்து நிற்கிறார் என்ற வாதத்தை, ஆதாரமில்லாததால் ஒதுக்கி வைத்து ஆராய்வோமா.

இவர் யாரோடெல்லாம் கூட்டு சேர்ந்திருக்க முடியும் என்று பார்க்கலாம். பா.ம.க., வி.சிக்களுடன் கண்டிப்பாக முடியாது. காங். மத்தியில் திமுக, பாமக தயவு தேவையென்பதால் இவரோடு சேர வாய்ப்பில்லை. ஆக மூன்றாவது அணி அமைப்பது என்றால் எஞ்சியவை, பா.ஜ.க, மதிமுக, ஓட்டில்லா லெட்டர் பேட் கட்சிகள்.

ஒரெ வாக்கு வங்கி பிரச்சினையினாலும், ஒரு பலமான கூட்டணியிலிருந்து எதிர்கூட்டணிக்கு செல்வதினால் கிடைக்கக் கூடிய அதிக தொகுதி வாய்ப்பினாலும் மதிமுகவும் இவருடன் கூட்டு சேரவில்லை. பா.ஜ.க. மத்தியிலும் ஆட்சியிலில்லை, சிறுபான்மை ஒட்டயும் இழக்க வேண்டுமென்பதாலும் அக்கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. ஆக மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை.

சரி, திமுக, அதிமுக கூட்டணிக்கு சென்றிருக்கலாமே....

ஏற்கனவே ஓவர்லோடினால், தொகுதிப் பங்கீட்டினால் அல்லோகலோகப்படும் திமுக கூட்டணியில் முதலில் இவரை சீந்துவாரில்லை. வைகோ போனபின்னர், உபயோகப்படுவார் என்றெண்ணி, சீண்டினார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கிடைத்திருக்கக் கூடிய தொகுதிகள் அதிக பட்சம் போனால் 10. இந்த பக்கம், அம்மா, இருபதே கொடுத்தாலும், சென்று சேரும் நாள் மட்டுமே மதிப்பு. அதன் பின் காலடியில் வைத்தே ஒழித்துக் கட்டிவிடுவார்கள் - இன்னொரு சினிமா பிரபலத்தை வளர்த்தால் தனக்கு பின்னால் பெரும் கேடு என்பதால். இருந்தாலும், 20 கிடைக்க வாய்ப்பிருந்தது என்றே வைத்துக் கொள்ளுவோம். அவர் ஏன் அந்த பத்தையும், இந்த இருபதையும் நிராகரித்தார்ர்(!!)

இங்குதானய்யா இருக்குது அவரின் சூட்சுமம். இப்பொழுது அவர் புத்தம் புது கட்சியின் தலைவர். அவரின் பின் இருப்பது அவரின் ரசிகர்கள். அந்த ரசிகர்கள் அவரிடமிருந்து இம்முறை பெரிதாக எதயும் எதிர்பார்க்காத நேரம். அடுத்த முறை மதிமுகவினர் போன்று, நமக்கும் ஏதாவது கிடைக்க வழி செய்ய வேண்டும் கேப்டன் என நினைக்க வைக்க ஆரம்பித்து விடுவார்கள் இந்த தொண்டர்களாய் மாறியிருக்கும் ரசிகர்கள். அவர்களில் ஒரு சிலர் M.L.A. ஆக்குவது அவரது ஆசையல்ல. தான், தன் முனைப்பு ஒன்றே குறி. தனக்கு பின்னாளில் எது பலனளிக்குமோ அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆக, இதில் தைர்யம் எங்கே வந்தது. அவர் தனக்கு எது நலமானதோ அதைத்தான் செய்துள்ளார். தன் கட்சியில் தன்னைத் தவிர ஒரு பிரபலம் இருக்கலாகாது என்றிருக்கும் அவரிடம், ஜனநாயகவதியை அல்ல, சர்வாதிகாரியையே காண்கிறேன். அவர், குறைந்த பட்சம், ஒரு சில தொகுதிகளிலாவது, அத்தொகுதியில் பிரபலமாயிருக்கும் அல்லது, பொதுத் தொண்டு செய்து வரும் நல்லவர்களை ஆதரித்திருந்தாலாவது அவரின் நோக்கம் உயர்வானதென்று கருதியிருக்கலாம்.

ஆனால் ஒன்று. கார்த்திக் போன்று சினிமா அரசியல் செய்து கொண்டில்லாமல், மக்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கும் அவரின் உழைப்பைப் பாராட்டுகிறேன்.//

இதை பார்த்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களை, விருப்பமிருந்தால் கூறவும்.

இவர், சினிமாவால் வந்த பிரபலத்தால் வர நினைப்பதாலேயே, ஆதரிக்க மிகவும் பயமாயிருக்கிறது. இவர் வெற்றி பெற்றால், நாளை ஒவ்வொரு ஹீரோவும் வரப் பார்ப்பார்கள் - தங்களுடைய மார்க்கெட் முடிவடையும் நேரம் நெருங்கும்போது. தோல்வி அடைந்தும் அடுத்த 5 ஆண்டுகளும் இவர் அரசியலில் இருந்து மக்கள் பிரச்சினைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், நிச்சயம் மக்கள் திரும்பிப் பார்ப்பர்.

VSK Friday, May 05, 2006 9:29:00 AM  

இந்தத் தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை இடங்கள் பெற்றாலும், வரவேற்கத்தக்க ஆரம்பம்தானே, 'செல்வன்'?

இன்னும் வேலையிலேயே சேராதவருக்கு, உங்கள் ஊரில் ஓய்வு கொடுப்பார்களா? :-). வருகைக்கு நன்றி, 'குழலி'!

எந்தப் படத்தை வைப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது நானல்லவோ, 'எஸ்.பாலபாரதி'?
மத்தபடி, நமக்கு 'மதுரைவீரன்'தான் குலதெய்வமுங்க! முருகன் இஷ்ட தெய்வமுங்க.
[btw,உங்க போஸ் சூப்பர்!]


எல்லாம் இன்னும் சில தினங்கள்தானே!
அப்புறம், சரியாயிடும்!

மாயவரத்தான் Friday, May 05, 2006 9:36:00 AM  

ம்.. ஒரு இடத்தில வெற்றி நிச்சயம். அப்புறமென்ன.. அடுத்த எலெக்ஷனிலே, அதுக்கடுத்த எலெக்ஷனிலே எப்படியாச்சும் ஜெயிக்கிற கட்சி எதுன்னு பூவா தலையா போட்டு பாத்து சேந்திடுங்க. ரெண்டு தடவ ஜெயிச்சப்புறம், "நாங்க எல்லாம் யாரு..?! நாங்க இல்லாம ஜெயிக்க முடியுமா யாராச்சும்"ன்னு உதார் விடுங்க. என்ன எஸ்கே...இதெல்லாம் தெரியாம தனியா தேர்தலிலே நின்னாக்க இப்படி தான்..! போங்க!

VSK Friday, May 05, 2006 9:46:00 AM  

தி.மு.க., அ.தி.மு.க. ஆதிக்கமே இரு 'நண்பர்'களுக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒரு இரகசிய ஒப்பந்தம் என்று ஒரு கருத்து வலுவாக உலாவி வருவது தெரிந்திருக்கும் என நம்புகிறேன், 'மாயாவரத்தாரே'.

நான் கேப்டனை ஆதரித்து வருவதும் கூட, இந்த அவலம் தொடராமல் இருக்க வேண்டியே!

ஒரு மாற்றம் வரட்டும் முதலில்.

பிறகு, சரி செய்து கொள்ளலாம்!

மூடி, மூடி, புண்ணை மேலும் ஆழமாகப் புரையோடச் செய்யாமல்,
அறுவை சிகிச்சை மூலம் ஆற்றுவது போல!

With LIFE........,
There is always HOPE!!

ஜெயக்குமார் Friday, May 05, 2006 8:55:00 PM  

திமுக , அதிமுக வுக்கு இல்லாத தைரியம் தேமுதிக-விற்கு இருக்கு. இது ஒரு அசட்டு தைரியமாக இல்லாமல் இருந்தால் சரி. சந்திக்கும் முதல் தேர்தலிலேயே , தமிழகம் முழுவதும் மொத்தமாக இரண்டு சதவிகித வாக்குகள் பெற்றாலே பெரிய வெற்றிதான். ஆனால் தேர்தலுக்கு பின்னால் துவண்டு போகாமல் இருக்கவேண்டியது அவசியம். பார்க்கலாம்!

VSK Friday, May 05, 2006 9:26:00 PM  

இந்தக் காலத்தில், தைரியம் என்னும் வார்த்தையே அரிதாயிருக்கிற இந்தக் காலத்தில், இப்படி வருவதே பெரிய விஷயம் இல்லையா!?

வந்து கருத்தளித்ததற்கு நன்றி,'ஜெ.கு'.

தெற்கிலிருந்து இன்னும் நல்ல தகவல்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன!

Sivabalan Friday, May 05, 2006 9:32:00 PM  

SK

Nobody thinks " he will make such impact on election propaganda"

If he gets good number of seats (2006) then we must prepare our self to see Vijakanth as CM in 2011.

I do not want comment whether it is good or bad.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP