"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"
"அன்புத்தோழிக்காக என் அடுத்த ஆறுமுகம்!"
யாரென்றும் தெரியாது
எனக்கென்றும் பதியாது
இருந்தாலும் அன்போடு
அழைத்திட்டார் அன்புத்தோழி!
முன்னமே பதிந்தாலும்
எண்ணமெலாம் உரைத்தாலும்
அன்புத்தோழி அழைத்ததால்
மீண்டும் பதிகிறேன் வியர்டு!!
சுருக்கமாகச் சொல்லுகிறேன்
இறுக்கத்தை இன்று விட்டு
விருப்பமான வியர்டுகளை
பொறுத்திருந்து கேட்டிடுவீர்!
பெண்களின் பாதம் பார்க்கப் பிடிக்கும்
கண்களின் காதல் தெரியத் துடிக்கும்
நண்பரின் நலம் பேணப் பிடிக்கும்
துன்பத்தில் துவளா மனம் பிடிக்கும்
இன்பமாய் என்றும் இருந்திடப் பிடிக்கும்
அன்புத்தோழியின் மனம் பிடிக்கும்!
இதுவே எனது இன்னொரு வியர்டு ஆறு!
பொதுவாகச் சொல்லி விட்டேன்
பதமாக விரித்துரைக்க மனமில்லை
இதமான அன்புத்தோழிக்கென இந்தப் பதிவில்!
நன்றி!
வணக்கம்!
21 பின்னூட்டங்கள்:
//பெண்களின் பாதம் பார்க்கப் பிடிக்கும்//
ஒரு மேட்டர் இருக்கு. தனிமடல் அனுப்பறேன். :))
அ.ஆ வில் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு இங்கு போட்டுவிட்டீர்களோ என்று வந்தேன்.
அட! என்னங்க !
இதையெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு!
அதெல்லாம் சும்மா1
அப்படியாவது நம்மளை யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு ஒரு பில்டப்பு!
:))
கண்டுக்காதீங்க!
நல்லதொரு கவிதையாறு....கவிதை ஆறு...!!!!
:)))
நன்றி, செந்தழலாரே!
கதவு திறந்தாச்சு!
காத்து இனிமேல்தான் வரும் போல!
:))
பரவாயில்லயே, எனக்குகூட 'கவிதை' புரியுதே!
நல்லா இருக்குங்க, அய்யா!
//காத்து இனிமேல்தான் வரும் போல!
//
காத்து நல்லா வருது! கூடவே கொசுவும் வருதே!
தென்றலுக்குத் தெரியாத
தென்றலுக்குப் புரியாத
கவிதையும் உண்டோ?
தென்றலே ஒரு கவிதைதானே!
:))
கொசுவெல்லாம் விரட்டிறலாம்.
வலை, வத்தி, புகை, க்ரீம் இப்படி எதுனாச்சும் போட்டு!
/தென்றலுக்குத் தெரியாத
தென்றலுக்குப் புரியாத
கவிதையும் உண்டோ?
தென்றலே ஒரு கவிதைதானே!
:))
/
ஆஹா...ஆஹா..அருமை-ங்க அய்யா..!
(கவிதை..கவிதை...!)
என் அழைப்பிற்கு இவ்வளவு மதிப்பு கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.
கவிதை அருமையாக உள்ளது. ஒரு மருத்துவருக்குள் ஒரு கவிஞர் புதைந்திருக்கிறார்.
உங்களுடைய கசடற பதிவை படித்துக் கொண்டுருக்கிறேன். அதை படித்துவிட்டு தான் வியர்டு விளையாட்டிற்கு அழைத்தேன். முன்னமே எழுதியிருந்தாலும் மறுபடியும் எனக்காக ஒரு கவிதையே எழுதியதிற்கு மிகவும் மகிழ்ச்சி.
//யாரென்றும் தெரியாது//
:-)). பதிவுலகிற்கு புதியவள் நான். என்னைப் பற்றி அறிந்து கொள்ள என் வலைதளத்திற்கு வாருங்கள். நான் "தமிழோவியத்திலும்" குடும்பம் என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் வலைத்தளம் பற்றிய தகவல் கிடைக்கவில்லையே "அன்புத்தோழி"
:(
//பெண்களின் பாதம் பார்க்கப் பிடிக்கும்//
அண்ணா!
ரொம்ப வெட்கப்படுவீங்க என்பதை "கவிதை நயத்துடன் சொல்லியுள்ளீர்களா?"
உள்ளதைச் சொல்வதில் வெட்கம் என்ன நண்புத் தம்பியே!
இதை முதல் பதிவிலேயே சொல்லியிருக்க வேண்டும்.
அளவு கருதி விட்டுப் போயிற்று.
அன்புத்தோழி கூப்பிட்டது வசதியாய்ப் போயிற்று!
சொல்லிவிட்டேன்!
:)
வணக்கம் எஸ் கே அய்யா,
என்னுடைய வலைதளம் www.anbuthozhi.blogspot.com.
நன்றி
"உள்ளதை உள்ளபடி சொல்லப் பிடிக்கும்
உவகையோடு என்றும் இருக்கப் பிடிக்கும்
உரிமையோடு உதவி கேட்டால் பிடிக்கும்
உமையவள் புகழைப் பாடப் பிடிக்கும்"
உங்களுக்காக எழுதியுள்ளேன்; இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி ஆசானே!
ஆனால், இது என் இயல்பு அல்லவோ!
இதை "வியர்டு" எனச் சொல்லுகிறீர்களா!
அதுவும் நீங்களே!
ஆசான் சொன்னால் அதில் உண்மையிருக்கும் என இதையும் ஏற்றுக்கொள்கிறேன்!
:))
நல்ல பதிவு ..
மிக்க நன்றி, சர்க்கரைப்பொங்கல் அளித்த தூயா அவர்களே!
//ஆசான் சொன்னால் அதில் உண்மையிருக்கும் //
நீங்கள் சொன்னால் இதுவும் சரியாகத்தான் இருக்கும்
சரவணன் பதிவு படித்தீர்கள்தானே!
அதில் உங்களைப் பற்றிச் சொன்னதும் சரியாகத்தான் இருக்கும், சிபியாரே!
:)))))))))))))
Post a Comment