"நன்றியும், வாழ்த்துகளும்!"
"நன்றியும், வாழ்த்துகளும்!"
தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்,
படைக்கத் தூண்டிய நண்பர் இளவஞ்சிக்கும்,
போட்டியை நடத்திய தேன்கூடு/தமிழோவியத்துக்கும்,
எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதை, கட்டுரைகளை விட, கதைகளே மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது எனப் புரிகிறது.
'லிவிங் ஸ்மைலின்' கவிதை வேறு நிகழ்வு!
நல்ல அனுபவம்.
அனைவருக்கும், குறிப்பாக 14 வலை நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி!
வெற்றி பெற்றவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
மீண்டும் வருவேன்!!
81 பின்னூட்டங்கள்:
//தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், //
எஸ்.கே
கலைஞர் ஒவ்வொரு தேர்தலில் தோற்றபிறகும் வாக்களித்த 80 லட்சம் பேருக்கு நன்றி சொல்லியே அடுத்த தரம் ஆட்சியை பிடித்துவிடுவார்:-)))
அதே போல் ஆக வாழ்த்துக்கள்.:-)))
கதை எழுதினால் தான் கவனிப்பார்கள் என்றில்லை.கட்டுரை எழுதினாலும் போதும்.நம் மக்களுக்கு கவிதை என்றால் அவ்வளவாக பிடிக்காது.
(பதினாலில் ஒருவன்)
You are welcome. :-)
நானும் 14லில் ஒருவன் என சொல்லிக்கலாமுன்னா, நீங்க ஜெயிச்ச பார்ட்டி இல்லையே....
அதனால நான் 14ல் ஒருத்தன் இல்லை என சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். :-D
//நன்றி சொல்லியே அடுத்த தரம் ஆட்சியை பிடித்துவிடுவார்:-)))//
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, செல்வன்!
எழுதத் தூண்டுதில்லியா, அதான் மீண்டும் வருவேன்னு சொன்னேன்.
//(பதினாலில் ஒருவன்) //
மீண்டும் தனிப்பட்ட முறையில் நன்றி!
//தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்//
சரியாகத் தான் சொல்கிறீர்கள் ! எனக்கும் 16 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. முகம் தெரியாதவர்களின் வாக்குதான் நடுநிலை வாக்கு ! மற்றதெல்லாம் போக்கு :))
நன்றி, குமரன்!
Again!
:-x :-x !!
இ.கொ. உங்களைக் கவனிச்சுக்கிறேன் இருங்க!
:))
என்னை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள், கோவியாரே!
மேலும், கவிதைகள் மக்களை அதிகம் கவரவில்லை என நினைக்கிறேன்.
SK அய்யா,
வாக்களிக்கும் பக்கம் நான் செல்லாமல் விட்டுவிட்டேன்.. எனக்கு தெரியவில்லை எனக் கூறலாம்.. நீங்கள் உங்கள் பதிவோடு சேர்த்து சுட்டியைக் கொடுத்திருக்கலாம்..
எனினும் வாழ்த்துக்கள்.. இனி வெற்றி பெற..
அதுக்காக உங்க கவிதை புரிஞ்சி வாக்கு கொடுத்த 14 பேருக்கு நன்றியை இப்படி உரைநடைல சொல்லி ஏமாத்திட்டீங்களே எஸ்கே !! :)
ஆனாலும் உங்க அக்குறும்புக்கு அளவே இல்லையா?
நீங்க - //தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்,...//
கோவி.கண்ணன் - //எனக்கும் 16 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. //
நீங்க - //என்னை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள், கோவியாரே!//
நல்ல வேளை. வீட்டில் பசங்களுக்கு தங்கமணி கணக்கு சொல்லிக் குடுத்தாங்களோ, அவங்க தப்பிச்சாங்க டோய்!
(கடுப்பான் எல்லாம் போட்ட இப்படித்தான் பப்ளிக்கா காலை வாருவோம்!)
//வாக்களிக்கும் பக்கம் நான் செல்லாமல் விட்டுவிட்டேன்.. எனக்கு தெரியவில்லை எனக் கூறலாம்.. நீங்கள் உங்கள் பதிவோடு சேர்த்து சுட்டியைக் கொடுத்திருக்கலாம்..//
நீங்க இப்படி சொன்னதே எனக்கு வெற்றி பெற்ற மகிழ்வைக் கொடுக்கிறது, சிவபாலன்!
'உதவி வரைத்தன்று உதவி உதவி
செய்ப்பட்டார் சால்பின் வரைத்து. [105]
என்னும் குறள் இந்த உங்கள் சொற்களால் மேலும் நன்கு விளங்கிற்று.
ஹையா, கோவியாரே! சிவபாலன் சொன்னதைக் கவனீத்திர்களா!
இப்போது நானும் தார்மீக முரையில் உங்களோடு இணையாக வந்து விட்டேன்!!
:)))!
//ஆனாலும் உங்க அக்குறும்புக்கு அளவே இல்லையா?
நீங்க - //தேன்கூடு போட்டியில், என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த பதினான்கு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும்,...//
கோவி.கண்ணன் - //எனக்கும் 16 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. //
நீங்க - //என்னை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று வென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள், கோவியாரே!//
நல்ல வேளை. வீட்டில் பசங்களுக்கு தங்கமணி கணக்கு சொல்லிக் குடுத்தாங்களோ, அவங்க தப்பிச்சாங்க டோய்!
(கடுப்பான் எல்லாம் போட்ட இப்படித்தான் பப்ளிக்கா காலை வாருவோம்!)//
அட நீங்க ஒண்ணுங்க,இ.கொ. !
உடனே பாயுறீங்களே!
விழுந்தது என்னமோ 15 வாக்குகள்!!
அதுல ஒண்ணு நம்முது!
நம்மை நாமே நன்றி பாராட்டிக்க வேணாமேன்னு மத்த 14 பேரை அடக்கமா சொன்னா, இப்படிப் பாய்ஞ்சு வர்றீங்களே!
உங்க அக்குறும்புக்குத்தான் அளவே இல்லை!!
:-x :-x :-x
இப்போ மூணு போட்டிருக்கேன்!
இதுக்கு என்ன சொல்லப் போறீங்க!
:)
//ஹையா, கோவியாரே! சிவபாலன் சொன்னதைக் கவனீத்திர்களா!
இப்போது நானும் தார்மீக முரையில் உங்களோடு இணையாக வந்து விட்டேன்!!//
sk,
இது ஞாயமா ? நீங்களே தான் ஒரு வாக்கு வித்யாசத்தில் நான் வென்றதாக சொல்லி பாராட்டிவிட்டு, நீங்களே இணையாக வந்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். ம்ம்ம் ஆசை யாரை விட்டிச்சி ! இதுல கூத்து என்ன என்றால் அப்ப அப்ப வரும் திருகுறள் மேற்கோள் தான் :)))))))))
அடுத்த போட்டிக்கு இப்பவே தயார் பண்ணிக்க வேணாமா, பொன்ஸ்!
கலகம் மூட்டறீங்களே!
:)
sk கவலைப் படாதீர்கள் ! யானைக்கு (பொன்ஸ்) ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்டும் :)))
//இது ஞாயமா ? நீங்களே தான் ஒரு வாக்கு வித்யாசத்தில் நான் வென்றதாக சொல்லி பாராட்டிவிட்டு, நீங்களே இணையாக வந்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். ம்ம்ம் ஆசை யாரை விட்டிச்சி ! இதுல கூத்து என்ன என்றால் அப்ப அப்ப வரும் திருகுறள் மேற்கோள் தான் :))))))))) //
நான் என்ன போட்டியில வென்றதாகவா சொன்னேன்!
உங்களுக்கு இணையாக வருவது நல்ல ஆசைதானே கோவியாரே!
அது ஒரு மகிழ்வான நிகழ்வு.... எனக்கு !
அதை உங்களுடந்தானே பகிர்ந்து கொண்டேன்?
அது உங்களுக்குப் பொறுக்கலியா?
:)
//அது ஒரு மகிழ்வான நிகழ்வு.... எனக்கு !
அதை உங்களுடந்தானே பகிர்ந்து கொண்டேன்?
அது உங்களுக்குப் பொறுக்கலியா?//
பொறுத்துக் கொண்டால் பின்னூட்டத்தை எப்படி பில்டப் பண்ணுவது ? :))
நானும் இப்படி ஏதாவது சொல்லித்தானே வளர்க்கணும்!!:)
பதிவு போட்டு பத்தே நிமிடத்தில் 20 பின்னூட்டம் வாங்கும் கலையை எங்கு பயின்றீர் எஸ்.கே?:-))
தேன்கூடு தளம் சென்று பார்த்தேன்.அருமையாக ஓட்டு வாங்கியிருக்கிறீர்கள்.
தமிழ்மணத்தில் குறிப்பிடத்தக்க பதிவராக வளர்ந்து வருகிறீர்கள் என தோன்றுகிறது.
மேன்மேலும் வளர்க,வாழ்க
அய்யா அடுத்த முறை வெற்றிக்கனியை தட்டி 'லபக்' கொன்று பிடிக்க வாழ்த்துக்கள்.
சிவபாலன் கதைதான் எனக்கும் நானும் ஓட்டு போட போகலை.
ஆனா, எனக்கும் 10 பேரு ஓட்டு போட்டுறுங்கான்னு போயி பார்த்தப்ப 'அட' அப்படின்னு இருந்துச்சு...
இங்க வச்சு அவங்களுக்கு என் நன்றியை சொல்லிப்புடறேன்.
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி, செல்வன்!
//பதிவு போட்டு பத்தே நிமிடத்தில் 20 பின்னூட்டம் வாங்கும் கலையை எங்கு பயின்றீர் எஸ்.கே?:-))//
இதற்கும் வள்ளுவரையே அழைக்கிறேன்!
"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு."
இப்படிப்பட்ட நண்பர்களை இணையம் பெற்றுத் தந்திருப்பதால்!
//அய்யா அடுத்த முறை வெற்றிக்கனியை தட்டி 'லபக்' கொன்று பிடிக்க வாழ்த்துக்கள்.
சிவபாலன் கதைதான் எனக்கும் நானும் ஓட்டு போட போகலை.
ஆனா, எனக்கும் 10 பேரு ஓட்டு போட்டுறுங்கான்னு போயி பார்த்தப்ப 'அட' அப்படின்னு இருந்துச்சு...
இங்க வச்சு அவங்களுக்கு என் நன்றியை சொல்லிப்புடறேன்.//
நான் சொன்ன கருத்தையும் தவறாக எண்ணாமல், கதையினை உடனே திருத்தி, "கிழவியின் இனிக்கும் மரணம்" அளித்த உங்களுக்கும் அதே வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன், நண்பர். தெ.கா.
இம்முறை ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்கும் வாக்களிக்கச் செய்தது போல, இன்னும் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார்கள் என நம்புவோம்.
//பதிவு போட்டு பத்தே நிமிடத்தில் 20 பின்னூட்டம் வாங்கும் கலையை எங்கு பயின்றீர் எஸ்.கே?:-))//
எல்லாம் செல்வக் குமரன் கைவண்ணம்!
ஆரம்பித்து வைத்த நேரம்!
//"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு."
//
///உங்களுக்கு இணையாக வருவது நல்ல ஆசைதானே கோவியாரே!//
இதுக்கு ஒரு குறளைப் போட்டு என் வாயடைக்க வைத்திருக்கலாமே என்று நினைத்து.. அட அட இப்பத்தான் அதே குறளை நினைத்தேன் அதுக்குள்ள் போட்டு அசத்திட்டிங்க எஸ்கே. செல்வனுக்கு சொல்லியிருந்தாலும் எனக்கும் பிடித்துவிட்டது :))
உங்களையெல்லாம் மனதில் கொண்டே அக் குறளைச் சொன்னேன்!
உங்களுக்கும் பிடிக்கும் எனவும் நினைத்தேன்!
//SK said...
உங்களையெல்லாம் மனதில் கொண்டே அக் குறளைச் சொன்னேன்!
உங்களுக்கும் பிடிக்கும் எனவும் நினைத்தேன்!
//
ம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ; உள்ளத்தில் உள்ளது வார்த்தையில் வருகிறது :))
இது தான் நல்ல fun பாடு :)
முயற்சியை விடாதீர்கள்.அடுத்தமுறையும் உங்களுக்கு வோட்டளிக்கும் வாய்ப்பைத் தாருங்கள்.அது எப்படி அந்த 14 பேரில் நானும் ஒருவன் என்று 18பேர்கள் பின்னுட்டம் அளித்தார்கள்
"ஆர்வலர் புண்கண் நீர் பூசல் தரும்." [71]
இதற்கு ஹரிகிருஷ்ணனின் பதிவைப் படித்திருக்கிறீர்களா?
மிக அருமையாக இந்த 'தாழ்' எனும் சொல்லை வைத்து பின்னியிருக்கிறார்.
அவசியம் படியுங்கள்!
இல்லீங்களே, தி.ரா.ச. ஐயா!
செல்வக்குமரன் தானே சொல்லியிருந்தார்கள்!
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, ஐயா!
போட்டியிலே கலந்துக்கறதே என்னைப் பொருத்தவரை பெரிய விஷயம். அதுக்கே உங்களைப் பாராட்டலாம்.
தோல்விதான் வெற்றிக்கு முதல் படியாம்.
அடுத்தமுறை வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
தெகா சொன்னதைப் பார்த்தீங்களா?
//'லபக்' கொன்று ......//
அவர் பேச்சைக் கேக்காதீங்க. நாம் ஏங்க 'கொல்லணும்?':-)))))))
இதுதாங்க!
இந்த நகைச்சுவை உணர்வு இருக்கற வரை, பரிசு மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான்!
இந்த மகிழ்வு எதுல வருங்க?
அதுக்குத்தானே மாஞ்சு மாஞ்சு எழுதறோம்?
இப்படியாவது வந்து போனதோட நிக்காம ஒரு சொல்லும் சொன்னீங்க பாருங்க!
அதுக்கு நன்றி!
தெ. கா.! ஓவர் டு யூ!
//மிக அருமையாக இந்த 'தாழ்' எனும் சொல்லை வைத்து பின்னியிருக்கிறார்.//
sk,
சுட்டிக் காட்டினால் மட்டும் போதுமா ? 'சுட்டி' காட்ட வேண்டாமா ?
தேடிக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் சுட்டிக் கொடுக்கிறேன் சுட்டி!
இதோ அது இங்கே!
அப்பாடா! இனிமேல் அதை மீண்டும் படிக்க வலையில் தேட வேண்டாம்!
என் பதிவிலேயே இருக்கும்!
நன்றி, கோவியாரே!
தமிழ்க் காதல் கொண்ட அனைவரையும் இதனைப் படிக்க அழைக்கிறேன்!
http://www.harimozhi.com/article.asp?id=838
14 வளர்ந்து 114 ஆகி மேலும் பெருக வெற்றிகள் உங்கள் வாசல் தேடி வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி...
அன்புடன்,
தேவ்.
//தமிழ்க் காதல் கொண்ட அனைவரையும் இதனைப் படிக்க அழைக்கிறேன்! //
நன்றி... நட்பிற்குள் உண்டோ கடிக்கும் தேள் ! :)
நன்றி... நட்பிற்குள் உண்டோ கொட்டும் தேள் ! :)
SK அய்யா,
//போட்டியிலே கலந்துக்கறதே என்னைப் பொருத்தவரை பெரிய விஷயம். அதுக்கே உங்களைப் பாராட்டலாம்.
தோல்விதான் வெற்றிக்கு முதல் படியாம்.அடுத்தமுறை வெற்றிபெற வாழ்த்து(க்)கள். //
துளசி அம்மையார் அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.
உங்களைப் போன்றோரின் அன்பும் ஆதரவும் உள்ளவரை பரிசுக்காக அல்லாமல் எழுதுவேன், நண்பர் தேவ்!
மிக்க நன்றி!
இ.கொ. விடமிருந்து கலாய்த்து ஒரு பதிவு நிச்சயம்; நான் இவ்வளவு முறை நன்றி சொன்ன பிறகு!!
தேள் கடிக்குமா,.... கொட்டுமா?
[நாயகன் ஸ்டைலில்]!!
// SK said...
தேள் கடிக்குமா,.... கொட்டுமா?
[நாயகன் ஸ்டைலில்]!!
//
ஹலோ தப்பா எழுதி பின் திருத்தி இரண்டாவது முறை கொட்டும் என்று எழுதி ஒரு பின்னூட்டம் போட்டேன், அதை விட்டுவிட்டு ... இதை விட்டு கொட்டுகிறீர்களே சாரி குட்டுகிறீர்களே !
:))
உங்கல்[து.கோபாலும் கூட!] கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன், திரு. வெற்றி.
கலந்து கொண்டதே ஒரு மகிழ்வான நிகழ்வுதான், நிச்சயமாய்!
இது அதற்கான நன்றியும், வென்றவர்க்குப் பாராட்டும் தெரிவிக்கும் பதிவே!
பி.கு.: திருதம்பலேச்வரம் பதிவைத் தொடரச் சொல்லுங்கள், திரு. மலைநாடானிடம்!
//கலைஞர் ஒவ்வொரு தேர்தலில் தோற்றபிறகும் வாக்களித்த 80 லட்சம் பேருக்கு நன்றி சொல்லியே அடுத்த தரம் ஆட்சியை பிடித்துவிடுவார்:-)))//
:)))
தல..இதுக்கும் இந்த மீண்டும் வருவேனுக்கும் சம்பந்தம் உண்டா?
:))
வாழ்த்துக்கள் எஸ்.கே உங்க கவிதை வழமையாக இருந்தது.இன்றுதான் படித்தேன்.
சரி, [சாரி![Sorry]] இதோ போட்டு விட்டேன்!
வந்தவுடன் பதித்ததால் வந்த தவறு!
நீக்கி விடட்டுமா?
[முதல் பதிவைத்தான்! :))))))))))]
//தல..இதுக்கும் இந்த மீண்டும் வருவேனுக்கும் சம்பந்தம் உண்டா?//
அட! அது ஒரு தமிழார்வத்துல சொன்னதுங்க, மு. தமிழினி!
உங்களுக்குத் தெரியாதா என்ன?
நமக்கு இந்த உ.கு. விவகாரம்லாம் வரவே வராது!
வெள்ளிடை மலை!!
பட்! படார்!
[முதல் 'பட்' நான் சொல்றது! இரண்டாவது 'படார்' அதுக்கு நான் வாங்கற அடியோட சத்தம்!:)]
வந்து பாராட்டினதுல ரொம்ப மகிழ்ச்சி!
நன்றியும் கூட!
//வந்தவுடன் பதித்ததால் வந்த தவறு!
நீக்கி விடட்டுமா?
[முதல் பதிவைத்தான்! :))))))))))]//
அதை நீக்கிவிட்டால் பின்னூட்டங்களில் தொடர்பில்லாமல் போய்விடும் அதான் வெளக்கம் கொடுத்து பின்னூட்டம் போட்டாச்சே... விட்டுவிடுங்கள் [அந்த பின்னூட்டத்தை தான்] :)
//[முதல் 'பட்' நான் சொல்றது! இரண்டாவது 'படார்' அதுக்கு நான் வாங்கற அடியோட சத்தம்!:)]//
ஆமாம் வீட்டில உங்களுக்கு கெடச்சது இங்க வரைக்கும் கேக்குது :)))
இன்னிக்கு திருஆடிப்பூரமாம் எஸ்கே உங்களுக்கு சிவராத்திரியா ?
http://koodal1.blogspot.com/2006/07/blog-post_27.html
//இன்னிக்கு திருஆடிப்பூரமாம் எஸ்கே உங்களுக்கு சிவராத்திரியா ?//
அது எப்படிங்க நான் நெனைச்சதை உடனே பதிவிட்டிருக்கீங்க!
மணி 2 ஆயிடுச்சு, 6 மணிக்கு எழுந்து ஓடணும்னு ஒரு சொல் சொல்லிட்டு விடை பெறலாம்னு நினைத்தேன்!
நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க!
வர்றேங்க!
[பி.கு.: நமக்கு வீட்டில எல்லாம் அடி விழாது. அதுக்கும் சேர்த்துத்தான் இங்கே வாங்கிக்கிட்டு இருக்கேனே! உங்க அன்பு அடிகளும், மற்ற.... அடிகளும்! :))}
SK
உங்கள் பாடலுக்கு லிங்க் எங்கே?
நான் இதை முன்னம் படிக்கவில்லை. ஓட்டு போடவும் இல்லை. (இன்னும் வயசாகல)
இப்ப படிக்க ஆசையா இருக்கு. தோத்து போன பாட்டை ஜெயிச்ச பாட்டை வைச்சு பாக்க போறேன்.
சில தமிழர்கள் மாதிரி தோத்து போன பிறகு மடையன், சோத்தால் அடித்த முண்டம், சுரணை கெட்ட தமிழன் என்றெல்லாம் வாழ்த்தாமல் இந்த பதிவு போட்டிட்டீங்கல்ல, இனிமே நான் உங்களுக்கு தவறாம ஓட்டு போட்டுடறேன். நீங்க என்னத்த வேணா எழுதுங்க. பாதகமில்ல.
ஓட்டு போட்டவங்க வீட்டுக்கு கொஞ்ச பணம், சேலை, வேட்டி, வீட்டு சாமான் கொஞ்சம் அனுப்பி வெச்சுடுங்க. அதான் நம்ம ஊர் வழக்கம்.
//அது எப்படிங்க நான் நெனைச்சதை உடனே பதிவிட்டிருக்கீங்க!//
நெஞ்சத்து அகமது நட்பது நட்பு !
ஒருவரிடம் நன்றாக பழகும் போது, பல்வேறு கருத்துப் பரிமாற்றம் மூலம் எண்ண ஓட்டம் புரியவரும்... அது புரிந்து விட்டால் 'இந்த சூழலில் இவர் எண்ண நினைப்பார்' என்பது தெரிந்துவிடும்.
'ஒருவரின் நோக்கம் மட்டுமல்லாது உள் நோக்கத்தையும் கூட கண்டுபிடித்து விடலாம்' இது மகிழ்ச்சியான விசயமல்ல :))))))))))))))))
நான் மு. தமிழினிக்கு எழுதியதைப் படித்த பின்னரும் இப்படிச் சொல்லியிருக்கிறீர்களே, கோவியாரே!
அதெல்லாம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்க்கு வேண்டுமாயின் மகிழ்வில்லாததாய் இருக்கலாம்.
எனக்கு மகிழ்ச்சியே!
மிக்க நன்றி, திரு. ஜெயராமன்!
அடுத்தமுறை கண்டிப்பா மறக்காம சொல்லிடறேன் உங்களிடம்!!!
இதோ அதன் சுட்டி!
http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_09.html
படித்துவிட்டு சொல்லுங்கள்!
இதுக்குதான் அடிக்கடி வரணும்கறது!
அடுத்த நகைச்சுவைக்கதை எப்போது?
வாசு சுகமா?
:))
http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_09.html
எங்கே என் பின்னூட்டம் ? வெள்ளிக் கிழமை இரவு ... நாளை விடுமுறை கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு இருக்கிறேன் :)
எல்லவற்றையும் போட்டுவிட்டேனே?
பதில் கூடச் சொல்லியிருக்கிறேனே!
வேறு எதைக் குறிப்பிடுகிறீர்கள், கோவியாரே!
ஓ! உங்கள் பதிவில் சொல்லுகிறீர்களா?
அங்கும் போட்டுவிட்டேன்!!
SK
Thanks for dropping by and btw give the link for your poetry.
I have also planned to upload few thirupugazh songs very soon.
For now I have sung Bharathiyar song in my blog check it out when you have time.
பின்னூட்டம் மிஸ்ஸிங்.
உள்நோக்கம் பற்றி எழுதினேன். நான் உங்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்லவில்லை. நான் பொதுவாக சொன்னேன் ! எனக்கு என் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இதனால் தான். அவர்கள் எதை நினைத்துச் சொன்னார்கள் என்று சில சமயம் சரியாக சொல்லிவிடுவேன். அவர்கள் முகத்துக்கு நேராக சொல்வதால் சில சமயங்களில் பிரச்சனை ஆகிவிடும். அதனால் சில விசயங்கள் தெரிந்தாலும் வெளியேறாமல் ஒன்பது வாசலையும் மூடி வைத்துக் கொள்வேன்.
:)))
மனசு அறிவது கஷ்டமா என்ன ?
உண்மை நண்பர்கள் நேராகச் சொல்லுவதையே விரும்புவர்; முக்கியமாக நிகழ் வாழ்வின் ஆலோசனைகளை!
வேறு யாரையும் விட நண்பரிடமிருந்தே எதிர்பார்ப்பார்கள்; ஒப்புக்கொள்வார்கள்; தான் ஏன் மாறுபடிகிறேன் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லவும் செய்வார்கள்!
நட்பு ஒன்றுதான் தரம் பிரிக்காது!
மூடினால் அது நட்பல்ல!
மதம்!
அனைத்து மதங்களும் அழிந்து நட்பு மதம் என்ற ஒன்றுதான் இன்றையத் தேவை!
செல்வனின் புதிய கடவுள் வந்து செய்வாரா?!!
Thank you, Mr. GanEsh.
You may view my other posts in this same link.
http://aaththigam.blogspot.com
ee some common known friends from your profile.!
Pl. keep me posted!
//வேறு யாரையும் விட நண்பரிடமிருந்தே எதிர்பார்ப்பார்கள்; ஒப்புக்கொள்வார்கள்; தான் ஏன் மாறுபடிகிறேன் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லவும் செய்வார்கள்!//
வெளிப்படையாக சொல்வதல்ல... நாம் வெளிப்படையாக இருப்பது சரி என்றால்... அடுத்தவர்கள் வெளிப்படையாக இருக்கும் போது ஏற்க முடியாமல் போகிறதல்லவா ?...குறைகளை பொறுத்துக் கொள்வதில் தொடர்கிறது நட்பு. இது என் நம்பிக்கை தான்.
ஆத்திகம் நாத்திகம் பதிவுல ஒருத்தர் நாரதர் வேலை செய்றார். பாத்தீங்களா ஜிகே மற்றும் எஸ்கே?
அதுவே நான் சொல்வதும்!
இது ஒரு கை ஓசையல்ல.
இருமனமும் ஒத்துப் போகவேண்டும்.
'கை கொடுத்த தெய்வம் என்று ஒரு சிவாஜி படம்.
அவசியம் பாருங்கள்!
மிக அழகாகச் சொல்லியிருப்பார், கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
அற்புதமாக நடித்திருப்பார்கள் சிவாஜி, சாவித்திரி,எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ் மற்றும் பலர்.
நட்புக்கு இலக்கணம் என்றால் அந்தப் படத்தையே சொல்லுவேன்.
பிற இன்னும் சில கருத்துகள் உண்டு.
பணி அழைக்கிறது!!
சற்று நேரத்தில் வருகிறேன்.
இன்று உங்களுக்கு சிவராத்தியாகட்டும்!
:))
/ஆத்திகம் நாத்திகம் பதிவுல ஒருத்தர் நாரதர் வேலை செய்றார். பாத்தீங்களா ஜிகே மற்றும் எஸ்கே?
//
//ஆனால் நடைமுறையில் ஆஸ்திகமும் நாஸ்திகமும் நேர் எதிரான கொள்கைகள் என்று தானே இருக்கிறது. அதனால் அந்த மாதிரி விளக்கம் கொள்கிறேனோ என்னவோ? நீங்கள் சொன்ன முறையில் பார்த்தால் சரியே. கோவி.கண்ணன் கவிஞர் என்று சொன்னால் அது எஸ்.கே. கவிஞர் இல்லை என்று பொருள் படாது தான். :-) (யாருப்பா அது. கோவி.கண்ணனும் எஸ்.கே.யும் நல்ல நண்பர்கள். அவர் இருவரும் நேர் எதிர் மாதிரி சொல்லி நாரதர் வேலை பாக்குறதுன்னு சத்தம் போடுறது?)
http://solorusol.blogspot.com/2006/07/blog-post_26.html
//
:))))))))
//அவர் இருவரும் நேர் எதிர் மாதிரி சொல்லி நாரதர் வேலை பாக்குறதுன்னு சத்தம் போடுறது?) //
பார்த்தேன் ! பார்த்தேன் !
'என்ன குமரன் நான் sk வை நேரடியாக தாக்குவதை வீடவா ? உங்கள் நாரதர் வேலை பலமாக இருக்கிறது என்று பின்னூட்டமிடலாம் என்று இருந்தேன். சரி நம்ப குமரன் ஆச்சே பிழைத்துப் போகிறார் என்று (பிராண்டாமல்) விட்டுவிட்டேன் :))
நன்மையில் தானே முடிந்திருக்கிறது :))
//சரி நம்ப குமரன் ஆச்சே பிழைத்துப் போகிறார் என்று (பிராண்டாமல்) விட்டுவிட்டேன் :))//
ஃபிரண்டென்பதால் பிராண்ட வில்லையோ!
:))))))))))))
//sk said...ப்ரண்டென்பதால் பிராண்ட வில்லையோ!
:)))))))))))) //
ஆமாம்.. ஆமாம் நாமெல்லாம் ஒரே
brand அல்லவா ?
:)) அதாவது வம்பு சண்டைக்கு போகதவர்கள் :)))
போட்டியில் கலந்து கொள்வதே சிறப்பு. தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சி. ஆகையால் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
ஊக்கப்படுத்தி வாக்களித்த நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
//:)) அதாவது வம்பு சண்டைக்கு போகதவர்கள் :)))//
ஆனால்,
:)) வந்த சண்டையை விடமாட்டோம் :))
என்கிற உ.கு. புரிகிறது!
//sk said ...ஆனால்,
:)) வந்த சண்டையை விடமாட்டோம் :))
என்கிற உ.கு. புரிகிறது! //
இல்லை இல்லை அப்படி ஒருவேளை சண்டை வந்தால் சமாதணம் ஆகிவிடுவோம். அதுதான் சரி :))
நான் நாற்பது வரிகளில் சொன்னதை, நாலே வரிகளில் நச்சென்று சொல்லி விட்டீர்கள், ஜி.ரா.!
அதுதான் நம் இருவரின் தனிக்குணம்!
நான் வளவளா!
நீங்கள் 'சுருக்'!
பாருங்களேன்!
இதையே எப்படி விளக்கிச் சொல்லுகிறேன்!!! :))
வாலை நிமிர்த்த முடியாது!
கட்டபொம்மன் பேசுவான்..
"எல்லாம் உடன் பிறந்தவை... ஒழியாது"
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்! :(
பழமொழியை மாற்றுகிறீர்கள்! சரி! இருக்கட்டும்!
அவ்வண்ணமே நானும் கோருகிறேன்!
//பாருங்களேன்!
இதையே எப்படி விளக்கிச் சொல்லுகிறேன்!!! :))//
இப்படி விளக்கி எழுதவில்லை என்றால் ஒருமுறை வந்தவர்கள் மறுமுறை வரமாட்டார்கள். அப்பறம் திருவிளையாடல் தருமி மாதிரி மண்டபத்தில் யாராவது வரமாட்டார்களா என்று காத்து பூத்து இருக்க வேண்டியது தான். நீங்கள் செய்வது முற்றிலும் சரியே சரியே சரியே என்று தீர்ப்பு அளிக்கிறேன்
:))
வரிக்கு வரி, மறுமொழிக்கு மறுமொழி, மனமுவக்கச் செய்கிறீர்கள்!
நன்றி!
//SK said...
வரிக்கு வரி, மறுமொழிக்கு மறுமொழி, மனமுவக்கச் செய்கிறீர்கள்!
நன்றி!//
உவக்க வைக்கிறேனா ? துவர்க்க வைக்கமால் இருக்கிறேன் என்று சொல்லும் வரையும் தொடரும் :))
அந்த பதினான்குயில் அடியேனும் ஒருவன்.
வாழ்த்துக்கள்.
மகிழ்ந்தேன் சேதியறிந்து!
நவின்றேன் நன்றியினை இன்று!
பேசி நாளாச்சு, சிவா!
அடுத்த பதிவு பார்த்தீர்களா?
பார்த்தேன் எஸ்.கே!
இதற்கான மூலத்தையும் பார்த்தேன். பதில் இட தோன்றவில்லை. சிரிப்பும், வேதனையும் தான் வருகின்றது.
"தமிழ்க் காதல் கொண்ட அனைவரையும் இதனைப் படிக்க அழைக்கிறேன்!
http://www.harimozhi.com/article.asp?id=838"
அப்பா!
அடைத்த மதகில் தன்ணீர் கசிவது போலக் கண்ணீர் வருவதை கண் முன்னால் நிறுத்தி விட்டார், ஹரிகிருஷ்ணன் ஐயா.
நல்ல சுட்டி. நன்றி எஸ்கே ஐயா.
அன்புடன்,
மா சிவகுமார்.
SK ...
தமிழ் செய்யுள் பற்றி நான் ஒரு பதிவு போட்டு இரண்டு நாட்கள் ஆச்சு,
உமக்கு தெரிந்தால் உதவுங்கள்
பதிவிற்க்கான சுட்டி
http://unkalnanban.blogspot.com/2006/07/blog-post_30.html
அன்புடன்...
சரவணன்.
Post a Comment