"ஆறு மனமே ஆறு!"
ஆறு மனமே ஆறு!
ஆறு மனமே ஆறு!--அந்த
சுகாவின் கட்டளை பாரு!
ஆறுமுகன் சோதரனாம்
ஆனைமுகன் அருளாலே
ஆருக்கும் தெரியாத
ஆறு நிகழ்வுகள் கேளு!
"ஆறு"தல் அளித்த ஆறு!
1. நினைவறியாக் காலத்தே
நினைவாகத் தான் வந்து
நித்தமெனைத் தாலாட்டி
நித்திரையில் ஆழ்த்திவைத்து
நிலாச்சோறு காட்டி எனை
நேசமுடன் வளர்த்த தாய்!
2. நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!
3. சாயாமல், சரியாமல்
பாய்கின்ற மனத்தினையே
பேயாகிப் போகாமல்
தாயாக தந்தையாக
நேயனாகத் துணை வந்த
சாயிபாபாவுக்கு வந்தனம்!
4. காலத்தின் கோலத்தால்
பாழாகவிருந்தவெனை
மாளாத் துயரினின்று
மீளச்செய்து வழிகாட்டி
காலமெல்லாம் களிப்புடனே
வாழச்செய்த என் மனையாள்!
5. நன்மக்கட்பேறே நலமென்று
மண்மகனாம் வள்ளுவனும்
அன்றே சொல்லியதுபோல்
இன்பத்தை நான் சுவைக்க
இன்றெனெக்கு வாய்த்திட்ட
நன்மக்கள் நான்கு பேர்!
6. தாயகம் தாண்டி
தனிவழியே வந்தவெனை
தயங்காமல் தாங்கிக்கொண்ட
அயல்நாட்டு மண்ணின்
பெயரறியாப் பல மனிதரை
வியந்து ஒரு பெருவணக்கம்!
"ஆறு" பெருமைகள்
1. என் போல இங்கொருவன்
என் தொழிலை எடுத்தாண்டு
என் பேரைச் சொல்லியெனை
இன்பமுறச் செய்யானோ
என எண்ணிய தந்தையின்
மனமகிழ நான் முடித்த
மருத்துவப் படிப்பு!
2. கண்டவர்கள் பலரெனினும்
காமுற்றது சிலரெனினும்
காதலித்ததுஒரு பெண்ணை!
கரம் பிடித்ததும் அவளையே!
களிப்போடு பலகாலம்
கழித்ததுவும் நிறைவன்றோ!
3. பெற்றவர் ஈன்றதோ ஒன்பது பேர்!
மற்றவருக்கிடையே நான் "ஆறாவது"!
நற்றவ வானினும் நனிசிறந்தவரும்
உற்றவரைப் பிரிந்து சென்றதினால்
பெற்றவன் அன்று போனது இந்த
சிற்றவன் மடியினில்! என் சொல்வேன்!
4. செய்யும் தொழிலைச் சிறப்புறச் செய்து
ஐயம் இன்றி அரும்பணி ஆற்றி
வையம் போற்ற வளமுடன் வாழ்ந்து
கையில் வந்ததை பையினில் வைக்காமல்
உய்யும் வழியாய் மற்றவர்க்கீன்று
தெய்வம் நினைந்து வாழ்ந்திடும் வாழ்க்கை!
5. பிறந்த நாட்டிலும்
புகுந்த நாட்டிலும்
பண்ணும் தொழிலைப்
பண்புறச் செய்து
பயனுற வாழும்
பரிமள வாழ்க்கை!
6. ஒருவாசகம் எனச் சொல்லும்
திருவாசகத் தேனினையே
இசைவாசகமாய்ப் போட
இசைஞானியும் இசைந்தபொது
பணவாசகமாய் அதற்க்குதவ
"பணநாட்டு"ரசிகர்களை
பணவுதவிசெய்யவைத்து
தமிழன்னைக்கு மகுடமென
திருவாசகத்தை உலகுக்கு உரைத்தது
"ஆறு"தல் சொன்ன ஆறு நூலகள்!
1. உலகப் பொதுமறையாம் திருக்குறள்
2. உண்மைக்காட்சியான் கம்பனின் காவியம்
3. உறுதுணையாய்வந்திடும் சித்தார்த்தா
4. உள்ளத்தை அள்ளும் சிலப்பதிகாரம்
5. உசுப்பிவிடும் ஸ்டெயின்பெக்கின் 'தி விண்டெர் ஆஃப் அவர் டிஸ்கண்டென்ட்
6. உன்மத்தமாக்கிடும் ரூமியின் காவியம்
"ஆரது" போறது!
1. பச்சோந்தி
2. முகமூடி
3 மாயவரத்தான்
4. முத்து தமிழினி
5. சிவபாலன்
6. துளசி கோபால்
இவர்கள் அனைவருமே நான் மிக ரசிக்கும், மதிக்கும், விரும்பும் பதிவாளர்கள்!
இன்னும் பலருண்டு!
அவர்களை ஏற்கெனவெ அடுத்தவ்ர்கள் அழைத்துவிட்டார்!
இவர்களின் ஆர்வமும், திறமையும் யாருக்கும் குறைந்ததல்ல1
வருவார்கள் என நம்புகிறேன்.
தனி மடல் அனுப்பி அழைக்க வேண்டுமா எனத் தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்!
பொறுமையுடன் இதுவரை படித்து வந்தீர்களெனில்,......
நன்றி! கோடானு கோடி நன்றி!!
144 பின்னூட்டங்கள்:
//3. பெற்றவர் ஈன்றதோ ஒன்பது பேர்!
மற்றவருக்கிடையே நான் "ஆறாவது"!
நற்றவ வானினும் நனிசிறந்தவரும்
உற்றவரைப் பிரிந்து சென்றதினால்
பெற்றவன் அன்று போனது இந்த
சிற்றவன் மடியினில்! என் சொல்வேன்!
//
:-)
test>
வழக்கம் போல,
பாட்டாகவே படிச்சிட்டீங்களா? :)
நல்லாத் தான் இருக்கு.. இதை எப்படி பாட்டு நடைல படிக்கப் போறீங்கன்னு நினைச்சிகிட்டே இருந்தேன்..
நன்மனம்,
உங்கள் ஸ்மைலியின் பொருள் விளங்கவில்லையே!
அவ்வளவுதானா?
ஒன்றுமே சொல்லாமல், வெறும் 'நல்லாத்தான் இருக்கு'ன்னா எப்படீங்க!
நீங்களும் வழக்கம் போல முதலில் வந்து பாராட்டியதற்கு நன்றி, பொன்ஸ்.
//அவ்வளவுதானா?
ஒன்றுமே சொல்லாமல், வெறும் 'நல்லாத்தான் இருக்கு'ன்னா எப்படீங்க//
எஸ்கே, எதை எடுப்பது எதை விடுவதுன்னு தெரியலியே.. அதான்.. அப்படி.. எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்வது மாதிரி எழுதிட்டீங்க.. :)
//சாயாமல், சரியாமல்
பாய்கின்ற மனத்தினையே
பேயாகிப் போகாமல்
தாயாக தந்தையாக
நேயனாகத் துணை வந்த
சாயிபாபாவுக்கு வந்தனம்!//
//"ஆரது" போறது!
முத்து தமிழினி//
எங்க ஆத்திகம்,
இதுல ஒரு உள்குத்து, வெளிக்குத்து தெரியுதே.!
அய்யா எஸ்.கே!
ஆறு போட சொன்னா நீங்க திருமுருகாற்றுபடை போட்டுடிங்களே ,
கந்தனுக்கு அரோகரா ,
கடம்பனுக்கு அரோகரா ..... எஸ்.கே க்கு அரோகரா ....
:-))
SK,
ஆகா மிக அருமை!!
தமிழ் மேலும் சிறப்புற்றது!!
மிக்க நன்றி!!
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், பொன்ஸ்!
நன்றி!
ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கப்பா! ஆரம்பிச்சுட்டாங்க!
நமக்கு இந்த உள்குத்து, வெளிகுத்துல்லாம் தெரியாதுங்க!
நான் ஒரு அப்பிராணி!
முத்துவோட பெரிய அளவுல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் ஒரு கண்ணியமான மனிதர் என்பதை நிகழ்விலேயே ஒருமுறை கண்டிருக்கிறேன்.
அவரை அழைக்க வேண்டுமெனத் தோன்றியது!
இப்ப நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான், இப்படி ஒரு பொருள் இருக்குதுன்னே புரியுது!
குழப்பம் உண்டாக்கிறீங்களே, நாகை சிவா!
இந்த "ஆறு" பதிவுல "ஆறாவதா" பொறந்த நீங்க ரொம்ப பொருந்தரீங்கனு சொல்ல வந்தேன் ஆனா வேலை இருந்ததால வெறும் சிரிப்பானோட நிப்பாட்டிட்டு போய்ட்டேன்.
பொன்ஸ் சொன்னா மாதிரி எல்லாமே நல்லா இருந்துது குறிப்பா திருவாசகத்துக்கு ஒங்க பங்களிப்பு.
இப்பத்தான் நாகை சிவா வந்து மிரட்டிட்டுப் போறாரு!
நான் கதி கலங்கி உக்காந்துருக்கேன்!....
முருகா! இன்னிக்குப் பொழுது நல்லபடியா போகணுமேன்னு!
நீங்க வேற 'அரோகரா'ன்னு அசரீரி மாதிரி சொல்றீங்க, வவ்வால்!
ஆரம்பமே இப்படி!
இன்னும் வரவேண்டியவங்க எல்லாம் வேற வரல்லை!
காப்பாத்துடா சாமி!
:)))
நன்றி!
நன்றி, நன்மனம்!
உடனே வந்து எம் சந்தேகத்தைப் போக்கியதற்கு!
நன்றி, சிவபாலன்!
உங்களையும் கூப்பிட்டிருக்கேன், பார்த்தீங்கல்ல!
மறுக்காமல் வந்து சேரவும்!
எஸ்கே
பாய்ந்தது
அழகுத் தமிழ் ஆறு.
உள்ளம் நனைத்து.
நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை
ஸ்.கே மரத்தை மறந்த பழங்கள் இருக்கும் நாளில் விட்டுப்போன மரத்தையும் ஆறாவதில் சேர்த்து பெருமைபட்டது மனதுக்கு ஆறுதல் தருகிறது..இரண்டு தரம் படித்தேன் பிடித்ததால். அன்பன் தி ரா ச
எஸ்கே..
அருமை.. மற்றுமொரு ட்ரேட் மார்க் பதிவு :)
என் பதிவில் எப்படி எழுதினேனோ, உங்கள் மூலம் இன்னுமொரு நல்ல பதிவுக்கு வழிவகுத்ததில் மகிழ்ச்சி..
எனக்கொரு சந்தேகம்..
பொழுதிங்கு புலர்ந்ததழகாய்
பகலவன் காலையில்
பாங்காய் இருளகற்ற
இதுவரை தழுவியிருந்த
நித்திரா தேவியும் சென்றுவிட
முறித்த சோம்பல் கைகளில்
தருவாய் குளம்பி சுடசுட...
என்று தான் வீட்டீல் காபி கூட கேட்பீர்களோ !!
பதிவிற்கு நன்றி
சுகா
நல்ல தமிழில் அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். மிகவும் சுருக்கி விட்டீர்கள். எழுத நிறைய வைத்திருப்பீர்கள் என நம்பிக்கை ஊட்டும் பதிவு. உங்கள் அனுபவங்களை விரிவாக எழுதுங்கள்.
மனமகிழ்ந்து பாராட்டியதற்கு கடப்பாடு உடையவனாய் இருப்பேன். நண்பர் முத்துக்குமரன்!
பெற்றவரை மறந்தொருவன் பெருவாழ்வு அடைய முடியாது என்று உறுதியாக நம்புபவன் நான்; தி.ரா.ச. ஐயா!
உங்களைக் கவர்ந்தது போன்றே, எனக்கும் பிடித்த வரிகள் அவை!
ஓஓஓஓ! இன்று தந்தையர் தினம் கூட அல்லவோ!!
அனைத்து தந்தையர்க்கும் வாழ்த்துகள்!
அட நீங்க வேற, சுகா!
விட்டுக்குள்ளே பண்ணமுடியலியேன்னுதான் இந்த மாதிரி வலைப்பதிகள்ல!!
ஹி...ஹி!
உங்க பேரை காப்பாத்திட்டேன்னு சொன்னீங்களே, ரொம்ப நன்றி!
//குழப்பம் உண்டாக்கிறீங்களே, நாகை சிவா!//
குழப்பம் ஏற்பட்டால் தானே தெளிவு கிடைக்கும். அதனால் தான். இப்ப தெளிவாகி விட்டது.
இதுவே ரொம்ப நீளமோ, படிப்பாங்களோ, மாட்டாங்களோன்னு பயந்துட்டேன்!
நிச்சயம் எழுதறேன், மணியன்!
திருவாசகத்தைப் பத்தி மட்டுமே ஒரு நூல் எழுதும் அளவுக்கு அனுபவங்கள்!
பாராட்டுக்கு மிக்க நன்றி!
//நாகை சிவா வந்து மிரட்டிட்டுப் போறாரு!//
ஐயகோ! என் ஐய்யன் முருகனை மிரட்டுவதா...
ஓம் முருகா! ஓம் முருகா! ஓம் முருகா!
:)))
தெளிதலுக்கும், தெரிவித்ததற்கும் நன்றி, நாகை சிவா!
ஓய் எஸ்.கே,
வரவர ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் நூற்றுகணக்கில் வாங்க ஆரம்பிச்சுட்டீரா? திங்கட்கிழமை வந்து வெச்சிருக்கறன்யா கச்சேரியை:)
வந்தத்ற்கும், வருகிறேன் எனச் சொன்னதற்கும் வந்தனங்கள், மு.த.ல்வரே!
கொஞ்சம் பாத்து.....!:))
ஆறு படை எடுத்து வந்தவரே,
ஆறு முகம் காட்ட அழைத்தவரே,
யாருக்கும் தெரியாத நிகழ்வுகள்
தந்தன மன ம(நெ)கிழ்ச்சிகள்.
அன்புடன்
பச்சோந்தி
நாலு அலை அடித்து ஓய்ந்தபின்
ஆறு அலையா !
உங்கள் ஆறு வீசும் அலைகள் இதமாகவும், சுகமாகவும் உள்ளன.
கவிஞருக்கு வாழ்த்துகள்.
அன்புடன்
பச்சோந்தி
அழைப்பினை ஏற்றுக்கொண்டீர்கள் என கொள்ளலாமா, பச்சோந்தி!
நன்றி
நன்றி, பச்சோந்தி!
எஸ்.கே
கவிதையை படித்துவிட்டு மனம் நெகிழ்ந்தது.மிகவும் நெகிழ்வான விஷயங்களை கவிதை நடையில் சொல்லிவிட்டீர்கள்.நான் அழைக்கலாம் என இருந்தவர்களை நீங்கள் அழைத்துவிட்டீர்கள்.உங்களை அழைக்கலாம் என இருந்தேன்.சுகாவும் அழைத்துவிட்டார்.:-))
தமிழ் விளையாடுகிறது உங்கள் நாவில்.தமிழ்கடவுள் அவதாரில் வைத்திருக்கிறீர்களா இல்லை அவன் அவதாரமே எடுத்து வந்துவிட்டானா என தெரியவில்லை.
அருமை
உங்களது அன்பான, ஆனால், அளவில்லாத புகழ்ச்சிக்கு நன்றி.
எல்லாம் அவதார் கொடுத்தவரின் அன்பும், அருளும்!
உங்கள் 'ஆறைக்' [உடனே பொன்ஸ் வந்துடுவாங்க, குச்சியை எடுத்துக்கிட்டு, இரண்டம் வேற்றுமை உருபு சேர்ந்தால், ஆறை அல்ல ஆற்றை என ஆகும்னு!!] காண ஆவலாக உள்ளேன்.
//உடனே பொன்ஸ் வந்துடுவாங்க, குச்சியை எடுத்துக்கிட்டு, இரண்டம் வேற்றுமை உருபு சேர்ந்தால், ஆறை அல்ல ஆற்றை என ஆகும்னு!!] //
ரொம்ப ஆசைப்படறீங்களேன்னு.. வந்துட்டேன்ன்.. ஹி ஹி..
குச்சியத் தான் காணோம்.. எந்த வலைப்பக்கத்துல வச்சேன்னு தெரியலை.. :)))
உங்க ஆர்றுலே இறங்குனப்பத்தான் தெரிஞ்சது ஒரு உண்மை மருத்துவரே!
என்ன உண்மைங்க அது?
நல்ல விஷயம்தானே!
எப்போ வர்றீங்க?
முதன் முதலா எழுதியிருக்கீங்க~!
மகிழ்வுடன் நன்றி!
அழைப்புக்கு நன்றி. :D
வாங்க, வாங்க, மாயா!
வந்து ஒரு கலக்கு கலக்குங்க!
நன்றி!
SK அய்யா,
அருமை. உங்களின் பதிவுகளைப் படிக்கும் போது நீங்கள் ஓர் தமிழ் பட்டதாரியாக இருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் மருத்துவர் என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன்.
//நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!//
என்னைப் பாதித்த வரிகள். எனக்கும் இதே நிலைதான்.என் தந்தையும் நான் பல்கலைக்கழக படிப்பு முடித்து வெளிவர முன்னமே இறைவனடி எய்திவிட்டார். அவரின் இறுதிச் சடங்குகளில் கூட கலந்து கொள்ளமுடியவில்லை.
என்னங்க, இவ்வளவு தாமதமா வர்றீங்க, வெற்றி!
ரொம்ப நன்றி!
இன்னிக்கு தந்தையர் தினம் கூட!
ரொம்பப் பேரு ரசித்த வரிகள் இவை என அறியும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
ஆசையும், பாசமும், நேசமும் இன்னும் இருக்கிறது என அறிய மனநிறைவாய் இருக்கிரது.
நான் ஒன்றும் முறையாகத் தமிழ் பயின்றவன் அல்லன்.
ஆர்வ மிகுதியும், அறிஞர் அரவணைப்பும், அருந்தமிழ் நூல் படிப்பும் மட்டுமே!
அதனால்தான் ஜீவாவும், இ.கொ. வும் "தளை தட்டுது; திருத்துங்க" என்னும் போது, சத்தமின்றி நகர்வது!!
:))
SK அய்யா,
//என்னங்க, இவ்வளவு தாமதமா வர்றீங்க, வெற்றி//
வரும் செவ்வாய்க்கிழமை ஒரு பரீட்சை[exam]எழுதவேண்டும் , அதனால் கொஞ்சம் prepare பண்ணுவதாலும் , புதன்கிழமை பணிநிமித்தம் New York செல்ல வேண்டி உள்ளதால் அதற்கும் சில ஆயத்தங்கள் செய்ய வேண்டி உள்ளதாலும் தாமதமாகி விட்டது.
//நன்மக்கட்பேறே நலமென்று
மண்மகனாம் வள்ளுவனும்
அன்றே சொல்லியதுபோல்
இன்பத்தை நான் சுவைக்க
இன்றெனெக்கு வாய்த்திட்ட
நன்மக்கள் நான்கு பேர்!//
தந்தையர் தினமான இன்று இந்த நால்வரும் அசத்தியிருப்பார்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கு என் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்.[Happy fathers Day]
நன்றி.
அன்புடன்
வெற்றி
SK அய்யா,
ஒரு சின்னக் கேள்வி.
//ஆர்வ மிகுதியும், அறிஞர் அரவணைப்பும், அருந்தமிழ் நூல் படிப்பும் மட்டுமே! //
இங்கே நீங்கள் "அறிஞர் அரவணைப்பும்" என்று சொல்வது அறிஞர் அண்ணாவையா அல்லது கற்றறிந்த சான்றோரையா?
நன்றி.
அன்புடன்
வெற்றி
கற்றறிந்த அனைவரையும் சாரும் அது!
அதில் அண்ணாதுரையும் அடக்கம்1
வலைப்பூ நண்பர்களே!
எனக்காக கரோலைனா ஹர்ரிகேன்ஸ் என்னும் ஐஸ் ஹாக்கி டீமின் வெற்றிக்காக ஒரு வேண்டுதல் செய்து கொள்ளுங்கள்!
நன்றி!
//நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!//
நெகிழ்ச்சியாயிருந்தது.
ஐயோ! நீங்களா?
என் பதிவில் பின்னூட்டமா?
நினைக்க மனம் கூடுதில்லையே..........!
நன்றி, பொட்டீக்கடை!
உங்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துகள்1, பொட் டீ க்கடை!
எஸ்கே,
யாருடைய பதிவிலும் பின்னூட்டம் இடுவதில் எனக்கு பிரச்சினையே இல்லை.
எப்போதும் "தமாசாய்" :-))
எழுதும் உங்களின் இப்பதிவு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியதால் நானும் பங்கு கொள்ள வந்தேன்.
மற்றபடி இன்னாருக்கு தான் பின்னூட்டம் இடவேண்டும் இன்னாருக்கு இடக் கூடாது என்ற எண்ணம் எப்போதும் எழுந்ததில்லை.(தங்களுடைய தகவலுக்காக)
SK அய்யா,
//வலைப்பூ நண்பர்களே!
எனக்காக கரோலைனா ஹர்ரிகேன்ஸ் என்னும் ஐஸ் ஹாக்கி டீமின் வெற்றிக்காக ஒரு வேண்டுதல் செய்து கொள்ளுங்கள்!
நன்றி! //
அய்யா, மன்னித்துக் கொள்ளவும். உங்களுக்காக நான் இந்த உதவியைச் செய்ய முடியாது.இன்று Edmonton Oilers 4-0 ஆக வென்று விட்டார்கள். அய்யா, நான் Wayne Gretzky, Mark Messier காலத்தில் இருந்தே Oilers fan. அப்படியிருக்க நான் என்னவென்று எதிர் team க்காக வேண்ட முடியும்?
Hopefully, Oilers ஏழாவது game ஜயும் வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.
கடைசியாக Oilers 1990 ம் ஆண்டு Mark Messier captain ஆக இருந்தபோது Boston க்கு எதிராக விளையாடி Stanly Cup ஜ வென்றார்கள். சின்னப்பையனாக இருந்த போது பார்த்தது, இப்பவும் நினைவில் நிற்கிறது.
நன்றி.
அன்புடன்
வெற்றி
50க்கு வாழ்த்துக்கள்.முதல் 50 என நினைக்கிறேன்.50 விரைவில் 500 ஆக முருகனை வேண்டுகிறேன்.என் பதிவில் முதல் 50 வர 78 பதிவுகள் போடவேண்டி இருந்தது.நீங்கள் வெகுவிரைவில் 50 அடைந்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.
"வெற்றி',
முடியாது........!
நடக்காது......1
எண்ணை வந்து புயலை வென்பதா?
திங்கட்கிழமை எம்மூரில் எண்ணைக்காரர் தோற்பது உறுதி!
கோப்பை எங்களுக்கே!
நல்லதொரு போட்டியைக் கொடுத்ததற்கு நாம் உமை வாழ்த்துகிறோம்!
ஆனால், கோப்பயை வெல்லும் கனவு.....!
ஆனாலும் ஆசை உமக்கதிகம்!!
திங்களன்று வருகிறேன்1
தீர்ப்பொன்று தருகிறேன்!
திகைக்க வைக்கிறேன்!
தோல்வியினைத் தருகிறேன்!!
2006 ஸ்டான்லி கப் சாம்ப்பியன் கரோலைனா ஹர்ரிகேன்ஸ் தான்!!
ஆறைக் கவனிக்கவும்!!
ஆமாம், செல்வன்!
இதுதான் முதல் 50 !
இதனைக் கவனித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. உங்களை மாதிரி எழுதறவங்க இருக்கற வலைப்பதிவுலகத்துல நானும் இருக்கேனேன்னு வெட்கமா இருக்கு. பின்னூட்டத்துல எதாவது தவறா சொல்லி திருக்குறள்ல திட்டிட்டீங்கன்னா.. அதனால அடக்கி வாசிக்கிறேன்.
SK அய்யா!
ஆகா! இதிலும் தமிழா! அருமை.
சரி திங்கட்கிழமை இரவு முடிவு தெரிந்துவிடும். பார்ப்போம்.
இன்று game பார்த்தீர்களா?
நம்ம ஊரு செய்திதளத்தில் வந்த செய்தியில் சில கருத்துக்களை இணைக்கிறேன்.
The Hurricanes led this best-of-seven matchup 3-1, but the Oilers stepped up their special-teams play over the last two games to even the series.
"We all talk about belief. We all talk about urgency," said Edmonton forward Ryan Smyth. "We've given ourselves the opportunity to play in a Game 7.
"We'll do our best to put our names on the Cup."
[Source : cbc.ca/sports]
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க!
இப்பத்தான் பொன்ஸ்கிட்ட சொல்லிக்கிடிருந்தேன்!
ரமணி போல ஆளுங்ககிட்ட பகிர்ந்துக்கிற அளவுக்குக் கூட அறிவில்லாம இருக்கோமேன்னு!
நீங்க என்னடான்னா இப்படிச் சொல்லி இன்னும் சின்னவனாக்குறீங்க!
முதன் முதலா வந்துரிக்கீங்க!
ரொம்ப நன்றி!
'எண்ணியவை எண்ணியாங்கு செய்வர் எண்ணியவர்
திண்ணியவ ராகப் பெறின்."
அவ்வளவுதான்!
கேம் ஸெவென்ல விளையாடற தகுதியையும், பெருமயையும் நாங்க உங்களுக்குக் கொடுத்திருக்கோம்!
ஏனெனில், நீங்கள் அதற்கு முற்றிலும் தகுதி பெற்றவர்கள்!
இப்படி ஒரு நல்ல போட்டியைக் கொடுத்ததற்கு நன்றி!
ஆனால், ....கோப்பையில் எங்கள் பெயர்தான்!!
முருகனருள் முன்னிற்கும்!!
SK அய்யா,
//ஆறைக் கவனிக்கவும்!!//
புரியவில்லையே? 6ம் இலக்கம் அணியும் Bret Hedican ஜச் சொல்கிறீர்களா?
நன்றி
:)))))))))
இது ஆறாம் ஆண்டு!
அதைக் கவனியுங்கள்!
அதை விட்டு உங்களுக்கு 3 பெனால்டி தந்த அந்த ஆறைக் கவனிக்க வேண்டாம்!
ஆறு மனமே ஆறு1
அந்த ஆயிலர் ஆனார்
திங்கள் ஆயிலர்!
திங்கள் வரும்!
தோல்வி வரும்!
துவண்டு செல்வர்!
உமது ஆயிலர்!!
அவங்க பேரை முதலில் மாற்றச் சொல்லுங்கள்!
பேரே "ஆயிலர்"!!
எப்படி ஆக முடியும்!!?
//'எண்ணியவை எண்ணியாங்கு செய்வர் எண்ணியவர்
திண்ணியவ ராகப் பெறின்."//
ஆகா.. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி..தன்யனானேன்.
SK அய்யா,
//ஒருவாசகம் எனச் சொல்லும்
திருவாசகத் தேனினையே
இசைவாசகமாய்ப் போட
இசைஞானியும் இசைந்தபொது
பணவாசகமாய் அதற்க்குதவ
"பணநாட்டு"ரசிகர்களை
பணவுதவிசெய்யவைத்து
தமிழன்னைக்கு மகுடமென
திருவாசகத்தை உலகுக்கு உரைத்தது//
நல்ல தமிழ்ப்பணி. பாராட்டுக்கள். அது சரி, திருவாசக ஒலி இழை வெளியீட்டு விழாவில் அண்ணன் வைகோ அவர்கள் ஆற்றிய உரையைப் பார்த்தீர்களா/கேட்டீர்களா? எந்தத் தலைப்பை எடுத்தாலும் மிகவும் இரசிக்கக் கூடியதாக புள்ளிவிபரங்களுடன் பேசுவதில் வைகோ அவர்களுக்கு நிகர் வைகோ அவர்கள் தான்.
நன்றி
//ஆனால், ....கோப்பையில் எங்கள் பெயர்தான்!!
முருகனருள் முன்னிற்கும்!! //
ஐஸ் ஹாக்கி அணி ஜெயிப்பதற்க்கு எல்லாம் முருகன் அருளா?நியாயமா இது?தீர்க்கப்படவேண்டிய உலக பிரச்சனைகள் பல இருக்க ஐஸ்ஹாக்கிக்கு அருள் புரிய முருகனை அழைக்கலாமா?:-)))
எல்லாம் அவனென்று உள்ளத்தில் வரித்தபின், எது வேண்டிடினும் அவனை அழைப்பதுதான் வருகிறது!
இதில் ஐஸ்வர்யா ராயாகட்டும், ஐஸ்வர்யமா ஆகட்டும், ஐஸ் ஹாக்கியாகட்டும்!
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் யாம் அஞ்சோம்!
அருமையான உரை அது!
நினைவு படுத்தியதற்கு நன்றி, வெற்றி!
//நான் போகும் வழியினையே
நன்றாகக் காட்டி என்னுடன்
நோகாமல், நொடியாமல்
நெடுந்தூரம் துணை வந்து
நான் வளர்ந்த காலத்தில்
நில்லாமல் சென்ற என் தந்தை!//
எல்லாத் தந்தையர்க்கும் இந்தப் பதிவைசமர்ப்பிக்கலாம்னு தான் தோணுகிறது.நீங்களும் உங்கள் உடன்பிரப்புகளும்,உங்கள்நன் மக்களும்,மனைவியும் நெடுநாள் நல் வாழ்க்கை இனிதாக வாழ வாழ்த்துகள்.ஆ(ற்)றுப்படை படித்த நிறைவு.நன்றி.
65 வந்தாச்சு.சூட்டோட சூடா 100 அடிச்சுடலாமா?என்ன சொல்றீங்க?இல்லை அடுத்த பதிவுகளில் பாத்துகிடலாமா?
மிக நெகிழ்ந்து போனேன், மனு, உங்கள் மறுமொழி பார்த்து!
மிக்க நன்றி, உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்!!
அது அப்படியே வர்ற போது வரட்டுங்க, செல்வன்!
உங்க வாழ்த்தெல்லாம் இருக்கும் போது வராமலா போயிடும்!!
வாழும் வாழ்க்கையை அற்புதமயமானது என்பதைக் குறிக்கவும் அறிவு தேவைப்படுகிறது. அது உங்களிடம் உள்ளது.
தனக்கு நரை வராததற்கு காரணமாக பிசிராந்தையார் கூறும் காரணங்கள் உங்களுக்கும் பொருந்துவதால் உங்களுக்கு நவீனப் பிசிராந்தையார் என்று அழைக்கிறேன்.
பிசிராந்தையாரின் பாடல் இதோ:
"யாண்டு பலவாக நரையிலவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே."
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்க்கையை, ரசிக்க, மதிக்க, கழிக்க உங்களைப் போன்ற பலரிடம் கற்ற பாடங்களின் வெளிப்பாட்டின் ஒரு சிறு பகுதியே அது.
பட்டத்துக்கு நன்றி.
கோப்பெருஞ்சோழன் யாரோ!?
மிக்க நன்றி, டோண்டு ஐயா.
ஒப்பிடுதலை ஓரளவுக்கு மேல் செய்யக் கூடாது.
நீங்கள் நெடுங்காலம் சிறப்புடன் வாழ்ந்திருக்க என் உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் உங்களுக்கு அருள் புரிவான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னவோ போங்க, நான் மட்டும் தான் கால்பந்துக் களத்தில் போய் கிரிக்கெட் ஆடிட்டேன் போல இருக்கு..
இருப்பினும், அடிச்ச ஸிக்ஸர் என்னமோ சூப்பர் ஸிக்ஸர்!!
நம்முதைப் பத்தி ஒண்ணுமே சொல்லாமப் போயிட்டீங்க, கு. செல்லமுத்து?
SK அய்யா,
//எல்லாம் அவனென்று உள்ளத்தில் வரித்தபின், எது வேண்டிடினும் அவனை அழைப்பதுதான் வருகிறது!
இதில் ஐஸ்வர்யா ராயாகட்டும், ஐஸ்வர்யமா ஆகட்டும், ஐஸ் ஹாக்கியாகட்டும்!
எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் யாம் அஞ்சோம்!//
என்ன இன்று மனப்பயமாக [nervous] இருக்குதா? நினைவிருக்குதா? இன்று Game 7. செய் அல்லது செத்து மடி [do or die] என்ற நிலை. நானும் முருக பத்தன் தான். பார்ப்போம் முருகன் பார்வை யார் பக்கமென்று!
யப்பா முருகா, பழனியாண்டவா, எனை காக்கும் வேலா ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்...
தாக்க தாக்க தடையற தாக்க...
(நல்ல வேளை வைத்தியம் பண்றது அமெரிக்காவில், இங்கயா இருந்தா பாட்டு பாடியே கொன்றுப்பீங்க-:)))))))))))))
என்னங்க, மனசு! அவ்வளவு மோசமாவா எழுதறேன்!? இப்படி சொல்லிட்டீங்களே!
மனப்பயம் எல்லாம் இல்லை, வெற்றி! தெகி....ரியமா.....த்....தான் .....இருக்கு!:))
மனதை ஆற்றிய ஆறு!!
பதிவு போட்டாச்சு.
நன்றி.
:)
உங்கள் கவிதைகளைப் போலவே அமைதியான, ஆழமான பதிவு! நன்றி, 'பச்சோந்தி' !
நிறையக் கவனிக்கிறீர்கள்!
......வித்தியாசமாக!!
"எங்கள் பிரான் தயவிருக்க எது வரினும் யாம் அஞ்சோம்!"
எனக்கு பிரானைக் காட்டிலும் வீரப்பா, நம்பியார், அசோகன் மற்றும் மனோஹரைத்தான் அதிகம் பிடிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வேலைப்பளுவில் இருந்தேன். அன்பர் பச்சோந்தி அவர்களின் அழைப்பினை கண்ட பிந்தான் இங்கே இப்படியொரு சுவையான ஆறு ஓடிக்கொண்டு இருப்பதை அறிந்தேன். மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்!
வெற்றி,
இப்ப மணி 00:36!
ஐஸ்ஹாக்கி கேமுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்!
எங்க ஊர் டீம் ஸ்டேன்லி கப்பை ஜெயிச்சுட்ட மகிழ்ச்சியில இருக்கேன்.
!
வெற்றி, நாங்கதான் சேம்பியன்ஸ்!
கொஞ்சம் வருத்தமா இருக்கும் உங்களுக்கு!
நல்லாத்தான் விளையாடினீங்க!
சும்மா சொல்லக்கூடாது!
வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கிறேன்!
காலைல "வெற்றி பக்கம்" பாத்ததுமே ஒரு நல்ல சகுனம் மாதிரி தோணிச்சு!
அது வீண் போகல்லை!
டோண்டு ஐயா,
அந்த வரிகள் உங்கல் உள்ளங்கவர் கள்வனைப் பற்றிய வரிகளன்றோ!
எப்படி நீங்க மறுக்கப் போச்சு!
'பாஸிடிவ் ராமா',
முதன்முறையா வந்து ரசிச்சுப் பாராட்டி ஒரு வரி எழுதினதுக்கு மிக்க நன்றி!
க.ப.,
மனதைப் பற்றிய ஆற்றில் நீந்தியதற்கு மிக்க நன்றி!
டோண்டு ஐயா,
உங்க பதிவுல பதில் போட்டதுக்கு, போலி வந்து 'வாழ்த்து' அவர் பாணியில் சொல்லியிருக்கிறார்!
SK அய்யா,
//வெற்றி, நாங்கதான் சேம்பியன்ஸ்!
கொஞ்சம் வருத்தமா இருக்கும் உங்களுக்கு!
நல்லாத்தான் விளையாடினீங்க!
சும்மா சொல்லக்கூடாது!
வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கிறேன்!
காலைல "வெற்றி பக்கம்" பாத்ததுமே ஒரு நல்ல சகுனம் மாதிரி தோணிச்சு!
அது வீண் போகல்லை!//
எங்கை ஆளைக் காணோம் என்று பார்த்தேன். வாழ்த்துக்கள். முதல்முறையாக உங்களின் அணி கோப்பையை வென்றிருக்கிறது. பாராட்டுக்கள்.Game க்குப் போயிருந்தீர்களா? Wow! ஸ்ரான்லி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் 7வது போட்டியை நேரில் பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். வெற்றிக்களிப்பில் இரசிகர்கள் ஏதாவது வன்முறைகளில் ஈடுபட்டார்களா?
அடேடே, என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனைப் பற்றிய வரிகளா அவை?
சரி, இருக்கட்டுமே? என் அப்பன் இதற்கெல்லாம் என்னிடம் கோபித்துக் கொள்ள மாட்டான்.
மற்றப்படி போலி டோண்டு என்கிற ஜாட்டானைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? விட்டுத்தள்ளுங்கள் அந்த இழிபிறவியை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆறு பதிவை இன்றுதான் கண்டேன். கண்டதும் வந்தேன். கண்ணை விட்டுப் போனது மீண்டும் கண்ணுக்குள்ளே வந்தது.
நல்ல செய்யுள் நடையில் நயத்தகு முறையில் ஆறாறாகச் செப்பித் தமிழ் ஆறாக ஓடச் செய்த சிறப்பே சிறப்பு.
அழைத்த அறுவரும் வருவாரோ...பதிவுகள் தருவாரோ!
அழைத்ததும் வந்து பார்த்துப், பாராட்டியதற்கு மிக்க நன்றி, ராகவன்!
இதேபோல, அழைத்தவர்களில், ஒருவர் வந்து பதிவிவிட்டிருக்கிறார்.
மற்றவர்களும் வருவர் என நம்புகிறேன்.
94 வந்தாச்சு(இழுத்து பிடிக்காமல் தானாகவே வந்துவிட்டது).பிரமாதம்.ஐஸ் ஹாக்கி அணிக்கும் முருகன் அருள் தந்து விட்டான்.கலக்குங்கள்
எல்லாம் முருகனருள்!
இன்னும் குமரனும், சிபியும் வந்தாச்சுன்னா ........முன்னிற்கும்!!
குமரனும் வந்தேன்.
SK,
என்னுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் சரியாக வருவதில்லை.
இருப்பினும் "ஆறு" பதிவிடுகிறேன்.
மேற்கொண்டு உங்கள் உதவியை கேட்டு பெற்றுகொள்கிறேன்.
நன்றி
இவ்வளவு நேரம் கழித்து வருவதற்காக முதலில் மன்னித்துக் கொள்ளுங்கள் எஸ்.கே. 'ஆறு' பதிவுகளை எல்லாம் யாழிசைச்செல்வனில் தொடங்கிப் படித்துக் கொண்டு வரலாம் என்று இருந்ததால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.
எல்லோரும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். தாமதமாக வந்ததால் அவற்றையே மீண்டும் கூறவேண்டியக் கட்டாயம் எனக்கு. ஆனாலும் ஒவ்வொன்றாக எடுத்துக் கூறுகிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள். :-)
தொடக்கமே அருமை. ஆறு என்று சொன்னவுடன் ஆறு மனமே ஆறு என்ற வரிகள் எல்லோருக்கும் தோன்றுவது மிக இயல்பு. அது மட்டும் இல்லாமல் ஆறு என்றால் ஆறுமுகன் நினைவும் வரும். உங்களுக்கும் வந்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் முதற்கடவுளான ஆனைமுகனையும் மறக்கவில்லை நீங்கள். அருமையாக வந்திருக்கிறது தொடக்கவரிகள்.
யானையை ஆனை என்பவரைப் பார்த்திருக்கிறேன். யாருக்கும் என்பதனை ஆருக்கும் என்று ஆறுக்குப் பொருத்தமாக மாற்றி உரைத்ததையும் பார்த்திருக்கிறேன் - ஆனால் ஆனை அளவுக்கு இல்லை. மீண்டும் அதனை உங்கள் கவிதையில் கண்டேன். :-)
ஆறு என்பதில் இருந்து எத்தனைச் சொற்களைத் தான் எடுப்பீர்கள். ஆறுதலும் ஒரு நல்ல சொல். :-)
பால் நினைந்தூட்டும் தாய் என்பதனை அருமையாக 'நினைவறியாக் காலத்தே நினைவாகத் தான் வந்து ... நிலாச்சோறு காட்டி எனை நேசமுடன் வளர்த்தத் தாய்' என்று மிக அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். என் தாய் என்னை எப்படி வளர்த்தாள் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் என் மனைவி என் மகளை எப்படி வளர்க்கிறாள் என்று பார்ப்பதால் உங்கள் வரிகளின் பொருள் தெளிவாக உணர்வு பூர்வமாகப் புரிகிறது.
'நான் வளர்ந்த காலத்தில் நில்லாமல் சென்ற என் தந்தை' உங்களுக்கு தந்தை. எனக்குத் தாய். வளர்ந்து நன்கு படித்து நல்ல வேளையிலும் சேர்ந்து நல்ல மனையாளைப் பெற்று அருமையான மகளைப் பெற்று என்று ஒவ்வொரு நிலைப்படியிலும் என் அன்னையை நான் நினைக்காவிட்டாலும் யாராவது வந்து அவர்களைப் பற்றிச் சொல்லி 'உன் தாய் இருந்திருந்தால் இப்போது எவ்வளவு மகிழ்வாள்' என்று சொல்லுவார்கள். உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். தந்தை என்றும் உங்களுக்குத் துணையிருக்கிறார்.
ஆறுதல் அளித்த ஆறில் முதல் மூன்றில் மாதா, பிதா, குரு-தெய்வம் என்று சொல்லிவிட்டீர்கள். சாயிகிருஷ்ணனை வணங்கும் ஆயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். உங்களுக்கும் அது தெரியும். சாய் ராம்.
அடுத்த மூன்றைப் பற்றி நான் சொல்ல அதிகமில்லை. நான் இப்போது தான் தொடங்கியிருக்கிறேன். போகப் போகத் தான் நீங்கள் சொல்வதெல்லாம் அனுபவித்துப் புரியும். (இப்போது தான் தொடங்கியிருக்கிறேன் என்றால் அண்மையில் எட்டு வருடம் முன்பு. :-) )
இதுவரை தெரியாத ஒன்று நீங்கள் மருத்துவர் என்று. சோஷியல் செக்யூரிட்டி அலுவலகத்தில் பணிபுரிகிறீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பதிவில் மருத்துவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அமெரிக்காவில் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியாது. அண்மையில் பொன்ஸ் பதிவில் நீங்கள் சொன்னதாக நினைவு. ஆனால் எந்த இடம் சொன்னீர்கள் என்று மறந்து போனது. இன்னொரு முறை போய் பார்க்கவேண்டும்.
அப்பாவும் மருத்துவரா? :-) அப்பாவின் ஆசைப்படி எல்லாம் நடக்கிறதா? மிக நன்று. :-)
காதலித்தப் பெண்ணையே கரம் பிடித்தீர்களா? மிக நன்று. எனக்கு அந்தக் கவலையில்லை. நான் காதலித்ததோ அனேகம் பேர். அதனால் அவர்கள் யாரையும் கை பிடிக்க முடியவில்லை. :-) ஆனால் என்ன? பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த பெண்ணை 'ஆறு' மாதம் காதலித்துப் பின்னரே கை பிடித்தேன். :-)
ஆறாவது குழந்தை. சரி. ஆனால் சிற்றவன் என்று சொல்லியிருக்கிறீர்களே. ஆண்பிள்ளைகளில் கடைக்குட்டியா? இல்லை பணிவு கருதி சொன்னதா?
என் தாயின் உயிர் பிரியும் போது அருகில் படுத்துக் கொண்டிருந்தேன். என் பாட்டி வந்து போட்டக் கூச்சலில் தான் விழித்தேன். அதிர்ச்சியில் பத்து நாட்கள் அழவில்லை. உறவினர்கள் வற்புறுத்தி அழவைத்தனர் பின்னர்.
நாலாவது பெருமை மிக அருமையானது. சாயிநாதனின் பக்தர் என்பதால் நீங்கள் இப்படி இருப்பதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. சாயிபாபாவின் அற்புதங்களில் மிகப் பெரிய அற்புதம் இது தானே - மக்களைத் தொடர்ந்து நல்வழியில் செலுத்துவது.
எந்த உதவி வேண்டுமெனினும் தயங்காமல் கேளுங்கள்!
என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
இல்லையெனில், 'செல்வ'முருகன் தயவிருக்கு!
திருவாசக இசைத்தட்டு வெளிவர நீங்களும் உதவினீர்களா? அப்படியென்றால் சிவபுராணம், கீதம் சங்கீதம் பதிவுகளின் சிவராஜா உங்களுக்குத் தெரியுமா? அருமையான இசைத்தட்டு அது. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
வந்தேன் எனச் சொல்லவா அழைத்தேன்!?
சிவாவின் விடைபெறும் பதிவைப் படிக்கவில்லையா நீங்கள்?
//பொழுதிங்கு புலர்ந்ததழகாய்
பகலவன் காலையில்
பாங்காய் இருளகற்ற
இதுவரை தழுவியிருந்த
நித்திரா தேவியும் சென்றுவிட
முறித்த சோம்பல் கைகளில்
தருவாய் குளம்பி சுடசுட...
என்று தான் வீட்டீல் காபி கூட கேட்பீர்களோ !!
//
:-))))
SK,
//'செல்வ'முருகன் தயவிருக்கு! //
நிச்சயம் "அவர்" தயவுவேண்டும்.
//விட்டுக்குள்ளே பண்ணமுடியலியேன்னுதான் இந்த மாதிரி வலைப்பதிகள்ல!!
ஹி...ஹி!
//
என்னை மாதிரி.... :-)
//திருவாசகத்தைப் பத்தி மட்டுமே ஒரு நூல் எழுதும் அளவுக்கு அனுபவங்கள்!
//
விரைவில் எழுதுங்கள் அந்த அனுபவங்களை.
//குச்சியத் தான் காணோம்.. எந்த வலைப்பக்கத்துல வச்சேன்னு தெரியலை.. :)))
//
ஹா ஹா ஹா ஹா வாய் விட்டுச் சிரித்தேன் இதற்கு... :-)))))))
//பின்னூட்டத்துல எதாவது தவறா சொல்லி திருக்குறள்ல திட்டிட்டீங்கன்னா.. //
இதுவும் அருமை. அதற்கேற்ற மாதிரி நீங்களும் ஒரு குறளைச் சொல்லியிருக்கிறீர்களே. அருமை ஐயா அருமை.
உங்கள் மறுமொழியனைத்தும் படிக்காமல், அவசரப்பட்டு, பதிலிட்டு விட்டேன்.
மன்னிக்கவும்.
'ஆறு' பதிவு போடாமலேயே, மிக அருமையாக ஒரு ஆறு சொல்லி விட்டீர்களே!
உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன்!
வரி வரியாக[!!] மறுமொழியிட்டதற்கு மிக மிக[!!] நன்றி.
என்னைத் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள்!
மீண்டும் நன்றி!
சாயிராம்.
புரிதலுக்கு நன்றி, சிவபாலன்!!
என்ன எஸ்.கே இது? நான் போட்ட பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்லணும் இல்லையா? இப்படி மொத்தமா ஒரே ஒரு பதில் சொல்லிட்டு விட்டுட்டீங்களே? :-(
அப்பாடா!
இவ்வளவு பின்னூட்டமா?
தாங்கது, குமரன்!
பொறுமையாய்ப் படித்து பதில் சொல்கிறேன்.
அதற்கு முன்னால், ஒரு பெரிய நன்றி!!
Super post., Nice to see someone promoting hinduism :)
'ராம-தாசன்',
கவனித்ததற்கு நன்றி.
தொடர்ந்து வரும்!
ஈன்று, புறந்தந்து, கனகமுலை தந்தவளுக்கு என மிக அழகு தமிழில் பாராட்டிய உங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்!
மிக்க நன்றி!, திரு. யோகன் - பாரிஸ்!
உங்களிடமிருந்து நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறேன்!
SK,
உங்கள் வார்த்தைகளுக்கினங்க பதிவு போட்டுவிட்டேன்..
நன்றி!!
மிக்க நன்றி, சிவபாலன்!
இன்னும் படிக்கவில்லை.
படித்து எழுதுகிறேன்.
எழில் மிகு ஆறு..
வள நாட்டு ஆறு..
வற்றாத ஆறு..
வசிகரீத்த ஆறு.
அடடே! வாங்க தேவ்!
தலயோட "கால்பந்து" பாக்க ஜெர்மெனி போயிருக்கறதா யாரோ சொன்னாங்க!
அதுக்கு நடுவிலயும் இங்க வந்து, அதுவும் கவிதையில, சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க!
முன்னமே சொல்ல நினைத்தேன்.
//6. ஒருவாசகம் எனச் சொல்லும்
திருவாசகத் தேனினையே
இசைவாசகமாய்ப் போட
இசைஞானியும் இசைந்தபொது
பணவாசகமாய் அதற்க்குதவ
"பணநாட்டு"ரசிகர்களை
பணவுதவிசெய்யவைத்து
தமிழன்னைக்கு மகுடமென
திருவாசகத்தை உலகுக்கு உரைத்தது//
இந்த அனுபவத்தை எழுதுங்களேன்.
மெய்யாகவே இதை எழுத ஆசைதான்.
பெரிய தொடராக வரும்!
அதுதான் அச்சமாக இருக்கிறது.
ஆனால், என் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று என்பதால் நிச்சயமாக ஒருநாள் எழுதுவேன்!!
//நான் கதி கலங்கி உக்காந்துருக்கேன்!....
முருகா! இன்னிக்குப் பொழுது நல்லபடியா போகணுமேன்னு!
நீங்க வேற 'அரோகரா'ன்னு அசரீரி மாதிரி சொல்றீங்க, வவ்வால்!
ஆரம்பமே இப்படி!
இன்னும் வரவேண்டியவங்க எல்லாம் வேற வரல்லை!
காப்பாத்துடா சாமி!
//
இன்னும் வரவேண்டியவங்க எல்லாம் வேற வரல்லைன்னு யாரைச் சொல்றீங்க எஸ்.கே?
சத்தியமா உங்களைத்தான் சொன்னேன் சாமி!
அப்போ இந்த ஜுரம் வந்ததெல்லாம் தெரியாது!!
:)))
அழகாகத் தந்துள்ளீர்கள்.
மிக்க நன்றி, சந்திரவதனா!
முதன்முறை வந்திருக்கிறீர்கள்.
உங்கள் குறும்படம் பார்த்து ரசித்துப் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்!
மற்றதையும் படித்துக் கருத்து சொல்லுங்கள்!
நன்றி SK
ஐயா!
அழைத்தவன் இப்படிததாமதமாய் வருவதற்கு முதலில் மன்னிக்கவும். ஆனால் அதுகூட நல்லதற்குத்தான் போலும். உங்கள் ஆற்றோடு கலந்த பலவாறுகளைப் பாரக்கமுடிந்ததே.
தமிழ்ஆறை சுவை ஆறாய்
சொல் ஆறாய் சொக்கித் தலைசாயும் கவியாறாய், நற்
கருத்தாறாய் , போற்றும்
புகழாறாய், புது விருந்தாறாய்
புனைந்திட்ட தமிழாரே !
உமக்கும், எனக்கும்,
உலகுக்கும் இனிதான
தமிழால் வணக்கமும்
வாழ்த்துக்களும்!
நீங்கள் மருத்துவர் எனக்குறிப்பிட்டதும், உங்கள் தமிழ்அறிவும், ஈழத்திலே திருகோணமலையில் வாழ்ந்தகாலத்தில் நானறிந்த இரு மருத்துவர்களை நினைவுபடுத்தியது. அவர்களிருவரும், மருத்துவர்களாக இருந்தபோதும் நல்ல தமிழறிஞர்களாகவும் இருந்தனர்.
அமிழ்தான ஆறுக்கும், அதுசுவைத் தாரு க்கும் நன்றிகள்.
ஆறைப் புகழ்ந்து
ஆறு ஆறால்
[சுவை ஆறாய்
சொல் ஆறாய் சொக்கித் தலைசாயும் கவியாறாய், நற்
கருத்தாறாய் , போற்றும்
புகழாறாய், புது விருந்தாறாய்]
அழகுக்கவி புனைந்த
ஆறு புறப்படும்
மலைநாட்டில் பிறந்தவரே!
'ஆறு'மோ என்மனம்
ஆற்றுக் கவியினைப்
பாராட்டாமல்!
மிக்க நன்றி!
50 ஆச்சு, 100 ஆச்சுன்னு பார்த்தா இப்போ 150ஆ?
நல்லா இருங்க சாமி.
(நீ போடற குப்பை பதிவுக்கெல்லாம் வந்தா இவரு போடற அருமையான பதிவுக்கெல்லாம் வரக்கூடாதான்னு யாருடா அது கேட்கறது? ஆட்டோ வரணுமா?)
50 ஆச்சு, 100 ஆச்சுன்னு பார்த்தா இப்போ 150ஆ?
நல்லா இருங்க சாமி.
(நீ போடற குப்பை பதிவுக்கெல்லாம் வந்தா இவரு போடற அருமையான பதிவுக்கெல்லாம் வரக்கூடாதான்னு யாருடா அது கேட்கறது? ஆட்டோ வரணுமா?)
என்னங்க, இ.கொ. பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க!
சரமாரியா பதிவுக்குப் பதிவு 100-க்கு மேலே வாங்கற நீங்க எஙே;
ஒரு பதிவுக்கு ஏதோ 150 வந்த நான் எங்கே1
தொடர்ந்து திறமையா எழுதறதுக்கு இன்னும் உங்க கீட்டேயிருந்து நிறையப் பாடம் படிக்கணும்!
நானெல்லம் வெறூம் 'மண்டூகம்'ங்க!
Post a Comment