"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"
"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"
திரு. விஜய்காந்த், எம்.எல்.ஏ, அவர்களுக்கு,
வணக்கம்.
முதலில் எனது உளங்கனிந்த பாராட்டுகளைப் பிடியுங்கள்!
இந்தத் தேர்தலில் நீங்கள் சாதித்தது நிறையவே!
கட்சி ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது!
யாருடனும் கூட்டு இல்லை என மக்களிடத்தில் சொன்னது போலவெ, 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது!
தமிழகமெங்கும் 40000கி. மீ.க்கும் மேல் சுற்றி வந்து நாட்டு மக்களிடம் உங்களது புதிய அடையாளத்தை நிலை நிறுத்தியது!
இரு கழகங்களும் ஆட்சிப் பொறுப்பினின்றும் அகல வேண்டும் எனக் கூவி, கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக யாரும் சாதிக்காத ஒன்றை செய்து காட்டியது!
பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.
தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!
வெற்றிக்களிப்பில் நின்றிருக்கும் இந்நேரத்தில் தங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.
1. இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்களும் நம் மண்ணில் இன்னும் இருக்கிறார்கள் என்னும் கருத்து உறுதிப்படும் நேரத்தில், இதனைத் தீவிரமாக்க, ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள்?
2. 'மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று இரந்தழைப்பார் இங்கில்லை' என்பதற்கேற்ப, பல பேர் உங்கள் கட்சியில் சேர வரக்கூடும். கவனமாகத் தெரிவு செய்வீர்கள் என நம்பலமா? இல்லை, எல்லாரையும் சேர்த்துக்கொண்டு நீர்த்துப் போவீர்களா?
3. யார் எப்படி சொன்னாலும், உங்கள் தொகுதி மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், நல்ல முன்னுதாரணமாய் செயல்படும் உத்தேசம் உண்டா?
4. எம்.எல். ஏ. என்பது ஒரு பொறுப்பான பதவி. அதற்குத் தேவையான விதி முறைகள், நெளிவு சுளிவுகள் இவற்றை வேகமாகக் கற்றுக் கொள்வது, இபோதைக்கும், பின்னாலும் உதவும் என்றறிந்து, செயல் படுவீர்களா?
5. தனியே ஆட்சி செய்வது வேறு; கூட்டணிகட்சியாக பங்கு வகித்து, சலுகைகள் பெறுவது வேறு, ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை நடத்துவது வேறு என்பது இன்னும் சில நாட்களில் புரியப்போகும் நிலையினில், விரைவிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, கட்சியை பல்வேறு மட்டங்களிலும், மாவட்டங்களிலும் வளர்க்க ஆவன செய்வீர்களா?
6. இல்லை, மற்ற தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் தோற்ற நிலையில் துவண்டு போவீர்களா?
7. இதுவரை நடத்தி வந்த, நகர்த்தி வந்த செயல்களெல்லாம் நன்கு நடந்திருக்கும் நிலையில், சில பல அனுபவமும், அறிவும் மிக்க ஆற்றலுள்ள இளைஞர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வீர்களா?
8.ஒரு சீட்டுதான் என்றாலும், அதனை வென்ற முறையில் தனித்துவம் காட்டிய நீங்கள், இந்த வெற்றி ஃபார்முலாவை திறம்பட இன்னும் விரிவு படுத்துவீர்கள் என நம்பலாமா?
9. மீண்டும் படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?
இவையெல்லாம், மாற்றம் வேண்டுமென விரும்பும் ஒரு தமிழனின் கேள்வி!
அதுவே நான் உங்களை தனியனாக[இங்கும் தனிதான்!] இந்த இணையத்தில் ஆதரித்ததின் நோக்கம்!
உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்!
மென்மேலும்,வெற்றிக்கனிகள் குவிய எனது வாழ்த்துகள்!
நன்றி.
வணக்கம்.
41 பின்னூட்டங்கள்:
//தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.//
அப்படியா? கோட்டையா? அப்படியென்றால்?! நீங்க வேற.. இம்புட்டு நாளா ஒரு பலூனை எடுத்து காற்றடித்து வைத்துக் கொண்டு, இதுக்குள்ளே நெருப்பு இருக்குது. யாராச்சும் தில் இருந்தா வந்து பாருங்கன்னு ரீல் சுத்திகிட்டு இருந்தாங்க. உங்க ஆளு வெச்சாரு ஆப்பு! ஆடிப்போயிடிடுச்சுங்க பாடிங்க! இனிமே பாருங்க...
நேற்று மாலை விருத்தாசலத்தில் கடைத் தெருவில் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்கள் (ஒரு அம்பாசிடர் காரில் அள்ளிப் போட்டால் முன் சீட்டில் மூன்று பேரும், பின் சீட்டில் ஐந்து பேரும், டிக்கியில் மூன்று பேரும் திணிக்க முடியும்...) கேட்டால் மாநிலத்திலேயே மூன்றாவது பெரிய கட்சி என்று தனக்கு தானே பட்டம் கொடுத்துக் கொண்டார்கள். நல்லவேளை.. பூனை வேடம் போட்டிருந்த பெருச்சாளிக்கு விஜய்காந்த் மணியடித்து விட்டார். அதுவும் சாதாரண மணி அல்ல.. சாவு மணி. இல்லையென்றால் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கட்சி என்று ஆரம்பித்து, அமெரிக்காவில் ஆட்சியில் பங்கு கேட்கலாமா என்பது வரை போயிருப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன் 'கிழிக்க' போவதாக பகீரங்க சவால் விட்ட வீராதி வீரர்கள் எங்கே போனார்கள் என்று வலை வீசி தேடிகிறோம்.
வாழ்த்துகள்!
கேள்விகள் அனைத்தும் நச்!
நன்றி!
ஏற்கனவே அவர் பதில் சொல்லிவிட்டார். பார்க்க தினமணி.
நீங்கள்லாம் வந்து பாரட்டியதற்கு மிக்க நன்றி, 'டோண்டு' ஐயா!
'ஜீவா' வாழ்த்துக்கு நன்றி!
'மாயவரத்தான்', சரி, 'கோட்டை என்று பயமுறுத்திக் கொண்டிருந்த' என்று வேண்டுமானால் மாற்றிவிடலாமா?!
:-)
நன்றி, அருண்மொழி! நானும் பார்த்தேன்!
நின்று அடிப்பேன் எனச் சொல்லியிருக்கிறார்!
பார்க்கலாம்!
என்னைக்கேட்டா ( என்னை யாரும் கேக்கலைன்றது வேற விஷயம். அதுக்காக நம்ம
கருத்தைச் சொல்லாம இருக்கலாங்களா?)
232 தொகுதியிலே யாரோடும் கூட்டு இல்லாம தனிச்சுப் போட்டி இட்டதுக்கே மகா தில்
வேணும் இல்லீங்களா? அதுக்கே ஒரு பாராட்டு தாராளமாக் கொடுக்கலாம்.
நாப்பது வருசத்து மேலே இந்த ரெண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செஞ்சு ஊழலை
நல்லா வளர்த்து வச்சுட்டாங்க. இப்ப ஒருத்தர் நான் ஊழல் இல்லாத ஆட்சி தரேன், ஒரு ச்சான்ஸ்
கொடுத்துப் பாருங்கன்னு கேட்டார்தானே? நம்ம மக்கள் ஏன் கொடுக்கலை?ன்றதுதான் இப்ப எனக்கு
மண்டைக் குடைச்சல்.
அப்படி ஒண்ணும் சரி இல்லாட்டா அடுத்த தேர்தல்லே பார்த்துக்கிடலாம் இல்லையா? மூணாவது
சக்தி இல்லேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க ஏன் இப்படிக் கவுத்துட்டாங்க?
மக்களைப் புரிஞ்சுக்க முடியலையேப்பா(-:
ரொம்பச் சரியா கேட்டுருக்கீங்க, 'துளசி-கோபால்'.
எனக்கும் அதே குடைச்சல்தான்!
மூணாவது சக்தியா வாக்குகள் கொடுத்திருக்காங்க!
இன்னும் கொஞ்சம் சீட்டும் கொடுத்திருக்கலாம்!
இலவசங்களை நம்பின அளவுக்கு, இன்னொரு மாற்றத்தை நம்பலியோ என்னமோ!
நன்றி.
தனித்துப் பெரும்பான்மை வரவிடாமல் செய்துவிட்டாரே என்கிற உங்களின் ஆத்திரம் எனக்குப் புரிகிறது!
என்ன செய்வது!
மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்!
நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
அதற்குத்தான் ஆப்பு வைத்தாகி விட்டதே!
இப்படியே அடிக்கடி வாங்க, 'நெ.சி.'!
//இப்ப ஒருத்தர் நான் ஊழல் இல்லாத ஆட்சி தரேன், ஒரு ச்சான்ஸ்
கொடுத்துப் பாருங்கன்னு கேட்டார்தானே? நம்ம மக்கள் ஏன் கொடுக்கலை?//
//இலவசங்களை நம்பின அளவுக்கு, இன்னொரு மாற்றத்தை நம்பலியோ என்னமோ!//
துளசி அக்கா, எஸ் கே ஐயா,
எனக்கு என்ன தோணுதுன்னா, கேப்டனும் அந்த 'ஊழல் இல்லாத ஆட்சி'ங்கற பிரசாரத்தை மட்டும் நம்பாம, அவரே இலவசம் கொடுக்கறேன்னு தானே சொன்னார்.. இத்தனை இலவசம் கொடுக்கணும்னா எப்படியும் எதிலயாவது ஊழல் பண்ணித்தான் ஆகணும்னு மக்களுக்கும் புரிஞ்சிருக்கு.. அதான் அவருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்காம விட்டுட்டாங்க
நீங்க சொல்றது கூட சரியாத்தான் இருக்கு!
ஆனா, எனெக்கென்னமோ, அறிவிச்ச இலவச அறிவிப்பிகளிலேயே, இவருடையத்குதான், கொஞ்சம் ப்ராக்டிகலா இருந்துச்சுன்னு நினைத்தேன்!
Thank you, Mr. 'Nambi' for your comments!
It is our hope that he will do something differently and only time will tell!
BTW, these 'Captain', Kalainjar' 'ammaa' have eroded deeply into our system and as far as I am concerned, I just use them to identify and not to glorify!
எஸ்.கே,
கேள்விகள் நியாயமாகவும் நன்றாகவும் உள்ளன. அவருடைய வெப் சைட்டில் இதை ஒரு ஃபீட் பேக்காக போடவும்.
ரொம்ப நன்றிங்க, 'முத்து-தமிழினி'!
கண்டிப்பா செய்யறேன்!
வாங்க அடிக்கடி !
ரொம்ப நன்றிங்க, 'முத்து-தமிழினி'!
கண்டிப்பா செய்யறேன்!
வாங்க அடிக்கடி !
//நீங்க சொல்றது கூட சரியாத்தான் இருக்கு!
ஆனா, எனெக்கென்னமோ, அறிவிச்ச இலவச அறிவிப்பிகளிலேயே, இவருடையத்குதான், கொஞ்சம் ப்ராக்டிகலா இருந்துச்சுன்னு நினைத்தேன்!//
எஸ்.கே ஐயா, இது எனக்குத் தான் சொன்னீங்களா?!!
இலவசத்துல என்னங்க ப்ராக்டிகல் இலவசம்... எல்லாம் ஒண்ணுதான்!!! சந்தோஷ் வேற கேப்டனின் ஊழம் பத்தி ஏதோ எழுதி இருக்காரு பாருங்க..
நான் ப்ராக்டிகல்னு சொன்னது, செய்யக்கூடியது அப்படீங்கற அடிப்படையில்தான்!
மற்றபடி, எனாக்கும் இந்த இலவசங்களின் மீது நம்பிக்கை கிடையாது!
களத்துல 'தெறம' காட்டி நிக்கணும்னா, ஏதோ கொஞ்சமாவது செய்ய வேண்டிய நிலமைலதானே இன்னும் இருக்கோம்!
அதெல்லாம் சொல்லி சரி செஞ்சுறலாம்!!!
SK,
விஜய்காந்த் கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவருக்கு கொம்பு சீவி விட ஒரு கூட்டம் தயாராகிவிட்டது (முக்கியமாக தினமலம்).
//ஆனா, எனெக்கென்னமோ, அறிவிச்ச இலவச அறிவிப்பிகளிலேயே, இவருடையத்குதான், கொஞ்சம் ப்ராக்டிகலா இருந்துச்சுன்னு நினைத்தேன்!//
அவர support செய்ய வேண்டியதுதான். ஆனாலும் இது too much.
15 கிலோ இலவச அரிசி?? (2 ரூபா அரிசிய கிண்டல் அடித்தவர்கள் எங்கப்பா)
வீட்டிற்கு ஒரு சீமை பசு?? (இலவச டிவி மற்றும் கம்யூட்டர் பற்றி கிண்டல் அடித்தவர்கள் எங்கப்பா)
பகவத்கீதை, குரான், பைபிள் இலவசம்??
எனக்கு தெரிந்து உருப்படியானது - ரேசன் பொருள் வீடு தேடி வரும் திட்டம் தான்.
மற்றபடி இவரும் ஒரு சராசரி அரசியல்வாதியே என்பது என் கணிப்பு.
இவர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். கிடைத்திருக்கும் வாக்குகளில் பெரும்பானவை அவருடைய கொள்கைக்கோ அல்லது பிரபலத்திற்கோ கிடைத்தவை அல்ல. இரண்டு கழகங்களின் மீது இருக்கும் வெறுப்பில் விழுந்த ஓட்டுக்கள்தான் அவை. அதை அவர் சரியாக பயன் படுத்த வேண்டும்.
நல்ல கேள்விகள்.
//ஆனா, எனெக்கென்னமோ, அறிவிச்ச இலவச அறிவிப்பிகளிலேயே, இவருடையத்குதான், கொஞ்சம் ப்ராக்டிகலா இருந்துச்சுன்னு நினைத்தேன்!//
எதுங்க, வீட்டுக்கு ஒரு சீமைப்பசு - இதுவா, இல்ல, 15 கிலோ இலவச அரிசி - இதுவா, இல்ல, மளிகை சாமான் வாங்க, மாசாமாசம் குடும்பத் தலைவி பேருல பேங்க்ல - இதுவா...
தினமணியில, கவனிக்கப்படாத வாக்குறுதிகள் என்ற தலைப்பில, இவருடைய இலவச அறிவிப்பு மயத்துக்கு ஆகும் செலவ சுட்டிக் காட்டியத, கொஞ்சம் படிங்களேன்..
நீங்க சொல்றது சரியான அணுகுமுறை என்றே படுகிறது, அருண்மொழி!
தினமலர் வேறு மாதிரி அல்லவா எழுதி இருக்கிறது?
சரிங்க கிருஷ்ணா,!
நீங்களும் போட்டுத் தாக்குங்க!
இதைதான், சொ.செ.சூ.வை.ன்னு சொல்லுவாங்க!
எஸ்கே,
நல்ல கேள்விகள்...கேப்டன் தனித்து நின்றது பெரும் வெற்றிதான் ஆனால் அவருடைய அடுத்த ஐந்து ஆண்டு கால செயல்கள்தாம் அவரது வெற்றியையும் கட்சியின் வளர்ச்சியையும் நிர்ணயம் செய்யும் என்பது என் எண்ணம்...கேப்டன் சிந்தித்து அழகாக செயல்படவேண்டிய தருணம் இது.
அதுவே நம் விருப்பமும், பிரியன்!
நன்றி!
துவக்கத்தில் இருந்தே கேப்டன் தேர்தல் வெற்றி மீது நம்பிக்கை வைத்து வந்த நண்பரே உங்களுக்கு என் முதல் வாழ்த்துக்கள்... பிடியுங்க...
அருமையானக் கேள்விகள்...அடுத்து வரும் காலம் கேள்விகளுக்கு விடைத் தருமா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
//அவருடைய வெப் சைட்டில் இதை ஒரு ஃபீட் பேக்காக போடவும்.
//
ஆமாம்!
சராசரி இந்தியக் குடிமகனின் மனுவாகக் கருதப்பட்டு உடனடியாகப் பரிசீலிக்கப்(!?) படும்.
'சிபி' இப்படி துரத்தி துரதி அடிக்கிறீங்களே!, நியாயமா?!! :-)
பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி, தேவ்
இப்படித்தான் சில நாட்கள் கைப்புள்ளையைக் கலாய்த்துக் கொண்டிருந்தேன்.
பின்வரும் பதிவுகளைப் பார்க்க!
http://pithatralgal.blogspot.com/2006/02/43-9.html
http://pithatralgal.blogspot.com/2006/02/45.html
சும்மா ஒரு ஜாலிக்காக!
//
இப்படித்தான் சில நாட்கள் கைப்புள்ளையைக் கலாய்த்துக் கொண்டிருந்தேன்.//
அதான் அவரு ஊரை விட்டே போயிட்டாரா?!!
இப்ப நானா?
:-))
எஸ்.கே நல்ல கேட்டு இருக்கிங்க. சொன்ன மாதிரி அவருடைய வலைதளத்தில் போடுங்க விடை அளிப்பாரான்னு பாக்கலாம்.
//ஆனா, எனெக்கென்னமோ, அறிவிச்ச இலவச அறிவிப்பிகளிலேயே, இவருடையத்குதான், கொஞ்சம் ப்ராக்டிகலா இருந்துச்சுன்னு நினைத்தேன்!//
எஸ்.கே எது இலவச பசுவும்,கீதையுமா ப்ராக்டில் வாக்குறுதிகள் ஒரே காமெடி போங்க உங்களோட.
நீங்களும் கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்தான் என நினைக்கிறேன்.
பலதரப்பட்ட மக்களின் வீடுகளிலும் ஒரு பசு இன்னும் முக்கியப் பங்கு வகிப்பதை அறிவீர் எனவும் நம்புகிறேன்!
கீதை, குரான், பைபிள் இவைகளில் சொல்லப்பட்டிருக்கின்ற நல்ல செய்திகளைப் பற்றி நான் அதிகம் சொல்லத் தேவையில்லை!
மேலும், நான் ப்ராக்டிகல் எனச் சொன்னது, இந்தத் திட்டங்களின் மூலம் எந்த ஒரு தனி நிறுவனத்துடனும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்க வாய்ப்புகள் கம்மி.
டிவி, கம்ப்யூட்டர் இவற்றை வாங்கி வினியோகம் செய்யும் சாத்தியக்கூறுகளை நினைத்துப் பாருங்கள்!
இது தமாஷ் இல்லை என்பது புரியும்.
மேலும் இலவசங்களை நான் விரும்பவில்லை, அது யார் மூலம் வந்தாலும் தவறே!
வந்து சொன்னதுக்கு நன்றி!
//ஒரே காமெடி போங்க உங்களோட//
யெஸ்.கே என்றால் யெஸ்(ஆமாம்) காமெடி என்று பொருள் அல்ல!
என்ன இது ஆளாளுக்கு யெஸ்.கேவை காமெடியாகவே பார்க்கிறீர்கள்.
ஏற்கனவே நாமக்கல்லார் இவரை ஓட்டுவது போதாதா?
அடேடே! நம்ம 'குண்டக்க மண்டக்க'வா?
வாங்க, வாங்க!
நாமக்கல்லார் போதாதுன்னு இப்ப நீங்களுமா?
நடத்துங்க!
"எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுவதே அல்லாமல் யாமொன்றறியேன் பராபரமே!"
சிரிங்க, வேணாங்கல!
கொஞ்சம் கூடவே சிந்திக்கவும் செய்யுங்க!
//ஏற்கனவே நாமக்கல்லார் இவரை ஓட்டுவது போதாதா?//
ஓய் பார்த்தி,
இவரை ஓட்டுவதில் நாமக்கல்லுக்கு மட்டும்தான் ஏகபோக உரிமையா என்ன?
எல்லாரும்தான் ஓட்டுவோம்! சந்தோஷ் அவர்களுக்கு என் ஆதரவு உண்டு!
(அட உதைக்கறதுக்கு கைப்புள்ளயக் காணோம், நம்மாளு எஸ்.கே கெடைச்சிருக்கார்)
ஆஹா! வேற ஆளு ஆரும் கெடைக்கில்லியாப்பா உங்களுக்கெல்லாம்!
நாமக்கல்லு, சந்தோசு, பார்த்தி, கட்டதுரை, இப்படி எல்லாருமா சேர்ந்து ரவுண்டு கட்ட வரீங்களா?
சரி!
இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்;
நீங்களும் வரக்கூடாது!
பேச்சு பேச்சா இருக்கணும்!
இந்த ஒதை கிதைங்கற பேச்செல்லாம் வெசுக்கிடக் கூடாது!
சொல்லிட்டேன்!
பார்த்தி, கட்டத் துரை, சிபி, என்ன இது, கேப்டன் பதிவ இப்படி கைப்புள்ள பதிவா ஆக்கிட்டீங்க!! அதான் கைப்பு பத்தி பரபரப்புச் செய்திகள் வந்துகிட்டே இருக்கே.. அதைக் கவனிப்போம்..
எஸ். கே ஐயா, நீங்க கேப்டன இன்னும் நல்ல நாலு கேள்வி கேளுங்க ஐயா.. இவங்களை நாங்க பார்த்துக்கறோம்
-- வ.வா.சங்கத்தின் சார்பாக
கொ.ப.செ. பொன்ஸ்
அப்பாடா! இப்பத்தான் உசுரு வந்துச்சு!
கொஞ்ச நேரத்துல என்ன கலாய்ப்பு கலாய்ச்சுட்டாங்க!
'பிகிலு' ஊதியாச்சு!
இனிமே ஆரும் இந்தப் பக்கம் இத்தைப் பேசிக்கிட்டு வரப்படாது!
கேப்டனைப் பத்தி பேசறத இருந்தா மட்டும் வாங்க, ஆமா!
ஆமா, கன்டிசனா சொல்லிட்டேன்!
ஆட்சியே மாறிப் போச்சு!!
இதுல, நீதிபதிய மாத்தினதுல மர்மம் என்னன்னு ஒர்த்தர் உடாந்சு வுடறாரு!
அய்யோ... அய்யோ!!
//நல்ல நாலு கேள்வி கேளுங்க ஐயா//
நல்லா நறுக்குன்னு நாலு கேள்வி கேலுங்கன்னு சொல்றீங்களா பொன்ஸ்?
//தேர்தல் முடிந்தவுடன் 'கிழிக்க' போவதாக பகீரங்க சவால் விட்ட வீராதி வீரர்கள் எங்கே போனார்கள் என்று வலை வீசி தேடிகிறோம்.
யாரு, சீமான், தங்கர்பச்சான், அறிவுமதி மாதிரியான குலக்கொழுந்துகளா? :-)
சரியான நேரத்தில் நினைவு படுத்தியதற்கு நன்றி, ரஜினி ராம்கி!
//தேர்தல் முடிந்தவுடன் 'கிழிக்க' போவதாக பகீரங்க சவால் விட்ட வீராதி வீரர்கள் எங்கே போனார்கள் என்று வலை வீசி தேடிகிறோம்.
யாரு, சீமான், தங்கர்பச்சான், அறிவுமதி மாதிரியான குலக்கொழுந்துகளா? :-)//
அந்த குலக்கொழுந்துகளாவது தெகிரியமாக தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்தது. மற்ற சூராதிசூரர் போல் வெளிநாட்டுக்கோ அல்லது இமயமலைக்கோ ஒடவில்லை.
தங்கருக்கு கேப்டன் கிட்ட மோதி வாங்கி கட்டிக்கறதே பொழப்பா போச்சு.என்ன பண்ண?:-))))
அறிவுமதியை விருத்தாச்சலத்துல யாருக்கும் தெரியாது."வாடி வாடி நாட்டுகட்டை" பாட்டு எழுதுனவருன்னு சொன்னா தான் தெரியும்.
சீமான்னு சொன்னா ஜெயலலிதாவை எதிர்த்து நின்னாரே அவரான்னு கொஞ்சம் வெவரம் தெரிஞ்சவங்க கேப்பாங்க.மத்தவங்களுக்கு தம்பி படம் எடுத்தாரே அவருன்னு சொல்லணும்.
இவங்க எல்லாம் போயி பிரச்சாரம் பண்ணீனா வேலையாகுமா சொல்லுங்க?
Post a Comment