"உந்தீ பற!” - 14
"உந்தீ பற!” - 14

[முந்தைய பதிவு]
ஒடுக்க வளியை யொடுங்கு முளத்தை
விடுக்கவே யோர்வழி யுந்தீபற
வீயு மதனுரு வுந்தீபற. [14]
ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை
விடுக்கவே ஓர்வழி உந்தீ பற
வீயும் அதன் உரு உந்தீ பற.
உள்வழி இழுத்து மூச்சுக் காற்றினை
உள்ளே ஒடுக்கிட உள்ளம் ஒடுங்கும்
அலைந்திடும் உளத்தை வெளியில் விடாது
வளியெனும் காற்றினை உள்ளில் ஒடுக்கி
உளத்தை ஒடுக்கிட எண்ணம் அழியும்
இதனைப் பயின்று முறையொடு செய்யின்
உள்ளம் என்பதின் உருவம் அழியும்
உருவெதுமில்லா உளமது ஒளிரும்.
முந்தைய சில பாடல்களில் சொல்லப்பட்ட கருத்தையும், அதனால் விளையக்கூடிய பயனையும் பற்றி இந்தப் பாடல் பேசுகிறது.
பிராணாயாமம் சாதகனின் மனத்தை அமைதிப் படுத்துகிறது.
இவ்வாறு அமைதியான மனது பரம்பொருளை நினைக்கத் துவங்குகிறது.
அப்போது ‘அறியாமை’ மெதுவாக விலகத் தொடங்குகிறது.
‘உரு’ மீதான அன்பு, ஈடுபாடு, விருப்பு, வெறுப்புகளை உள்ளில் உண்டாக்கி மனத்தை அலை பாயச் செய்கிறது.
என்னுடையதே சிறந்தது, மற்றது அதைவிடவும் தாழ்ந்தது என நினத்து, நினைவுகளை ஒருதலையாக மாற்றுகிறது.
”உண்மைப் பரம்பொருள்” என்பது ஒன்றே! அது இரண்டாக மாறுவதில்லை. இதுவே எல்லாவற்றினுள்ளும் இருக்கிறது என்பதாலேயே, எந்த ஒரு உருவும் நிலை பெறுகிறது என்பதை ‘அமைதி அடைந்த மனம்’ அறிய இந்த பயிற்சி உதவுகிறது.
நாம் வளர,வளர, நம் எண்ணங்களும் மாறுபடுகின்றன.
நேற்று உண்மை என நம்பியதை இன்று அதே மனம் ஏற்க மறுக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கே உணர்ந்திருக்கிறோம்.
ஏற்க மறுக்கவில்லை என்றாலும், குறைந்த பட்சம் சில கேள்விகளாவது வந்திருக்கும்!
இப்படி மனம் மாறிக் கொண்டிருந்தாலும், இதையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருப்பது ‘நான்’என்னும் ஒன்றுதான் என்பதை நாம் புரிய,அறிய மறுக்கிறோம்.
ஏனென்றால், இதை ‘புரிய’, ‘அறிய’ முடியாமல் நாம் எப்போதும் அலை பாய்ந்துகொண்டே இருப்பதாலேயே!
முறையான குருவின் துணையுடன் இந்த ‘பிராணாயாமம்’ என்னும் மூச்சை உள்ளடக்கலை, அல்லது கவனித்தலைச் செய்யத் துவங்கும் சாதகன் இப்படி அலை பாய்வதில்லை.
‘நான்’ என்கிற ஒன்றில்லாமல் இதெல்லாம் நிகழ்வதில்லை என்பது புரிய வருகிறது அவருக்கு!
‘எல்லாவற்றையும் கடந்த “நான்”’ என்பதே எல்லா அறியாமையையும், எண்ண அலைகளையும் அழிக்கிறது என்பது இப்போது அவருக்குப் புரிய, அறிய வருகிறது.
“உரு” அழிகிறது!
‘உண்மை” புரிகிறது!
”பரம்பொருள்” எதுவென ஒருவாறாகத் தெரிய வருகிறது.
[முன்னமே சொல்லியபடி, இனி வரும் பாடல்கள் சற்று ஆழமாகச் செல்வதினால், இது பற்றிய விளக்கங்களும் அதிகமாவதைத் தவிர்க்க இயலவில்லை. நான் சொல்வதில், அல்லது சொல்ல வந்ததில் ஏதேனும் குறைகள் இருக்கக் கூடும். நான் புரிந்துகொண்ட அளவிலேயே இவற்றைச் சொல்ல முனைந்திருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் சொல்ல
விழைகிறேன்.நன்றி.]
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்”
**************
[தொடரும்]













சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அட்டூழியங்கள், கொடூரக்
ஒரே நிகழ்வுக்கு இத்தனை அடி படச்சுருளை வீணாக்கியதற்கு பதிலாக, இன்னும் பல நிகழ்வுகளை அடுத்தடுத்து காட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது.
தன் காதலன் இறந்துவிட்டான் என அதிகாரபூர்வமாக அறிந்த காதலி மனமொடிந்து தமிழகம் திரும்பும் நொடியில், மீண்டும் ஒரு குண்டு வெடிக்கிறது.... மக்களின் அவலக் கூச்சல்கள்,...... புகை நடுவிலிருந்து ஒரு உருவம் இரு குழந்தைகளைத் தன் கைகளில் ஏந்தியவாறு சிகிச்சை முகாமை நோக்கி ஓடி வருகிறது! வேறு யார்? நம் மருத்துவர் நந்தாதான்! அவசர அவசரமாக சிகிச்சை அளித்த பின்னர் ஏதோ ஒரு உணர்வு உந்த, சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார். தூரத்தில் கடலோரத்தில் காதலி!
ஆம்! நந்தா போன்றவர்களின் கனவு நிச்சயம் மலரும்! போராட்டம் நசுக்கப்பட்டாலும், அடக்குமுறைகள் கேட்பாரற்று போனாலும் நந்தாவைப் போல பலர் இதனைத் தொடர்ந்து தங்கள் கனவை நனவாக்குவர் என்பதைச் சிம்பாலிக்காகச் சொன்னதுபோல எனக்குத் தோன்றியது. இந்த ஒரு காட்சியிலேயே இயக்குநர் தன் எண்ணத்தை மிகவும் திறம்படச் சொல்லிவிட்டார் எனவே நம்புகிறேன்.




