Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!


கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

12 comments:

  1. http://aaththigam.blogspot.com/2008/10/blog-post_17.html

    ReplyDelete
  2. நல்லதே நடக்கும்
    நன்மையே கிடைக்கும்.

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

    ReplyDelete
  3. நன்றி அனானியாரே!

    ReplyDelete
  4. my comment missing?

    anyway, aathigathukku, 'Nari' template oththuvarala.

    ReplyDelete
  5. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

    ReplyDelete
  6. இப்படி ஒரு சுகமான வழி இருக்கா?

    ReplyDelete
  7. எனக்கும் அதான் தோணுது! மாத்திறலாம் , சர்வேசன்!

    ReplyDelete
  8. //வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!//

    நன்றி, திரு. குறும்பன்!

    ReplyDelete
  9. //இப்படி ஒரு சுகமான வழி இருக்கா?//

    நிகழமுடியாத பல நிகழ்வுகள் வேண்டலின் மூலம் நிகழ்வதைக் கண்டதில்லையா அனானியாரே!

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி தூயா!

    ReplyDelete